For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவகிரகங்கள் ஆளுகின்ற 27 நட்சத்திரங்களின் குணங்கள் - வழிபட வேண்டிய தெய்வங்கள்

|

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளையும் நவ கிரகங்கள் ஆள்கின்றன. ராசிக்கு இரண்டே கால் நட்சத்திரம் என மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அதற்கேற்ப ராசியை கணித்து பலனை கூறலாம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குணம் உள்ளது. அந்த குணம் எப்படி இருக்கும் என பார்க்கலாம். அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என பொதுவான குணநலன்கள் உள்ளன. எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் எப்படி இருப்பார் என தெரிந்து கொள்ளலாம்.

27 Nakshatras and their Characteristics

உங்களின் நட்சத்திர ஆலயங்களுக்கு உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களும் மூன்று நட்சத்திரங்கள் வீதம் 27 நட்சத்திரங்களை ஆட்சி செய்கின்றன. சூரிய திசை 6 வருடங்கள், சந்திர திசை 10 வருடங்கள், செவ்வாய் திசை 7 வருடங்கள், ராகுதிசை 18 வருடங்கள், குருதிசை 16 வருடங்கள், சனி திசை 19 வருடங்கள், புதன்திசை 17 வருடங்கள், கேது திசை 7 வருடங்கள், சுக்ர திசை 20 வருடங்கள் ஆக மொத்தம் 9 திசைகளும், ஒருவருக்கு நடைபெற்றால் 120 வருடங்கள் நடைபெறும்.

நவ கிரகங்களினால் ஏற்படும் பாதிப்புகளையும் துன்பங்களையும் தீர்க்க நம்முடைய நட்சத்திர ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் பாதிப்புகளை குறைக்கலாம். 27 நட்சத்திரக்காரர்கள் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபடலாம் என்று அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசுவினி மகம் மூலம்

அசுவினி மகம் மூலம்

கேது ஆளும் நட்சத்திரங்கள் அஸ்வினி

நட்சத்திரக்காரர்கள் அழகானவர், எல்லாருக்கும் பிரியமானவராக விளங்குபவர். திறமையானவர், புத்தி மிகுந்தவர், கடைக்கண் சிவந்தவர். மார்பு அகன்றிருப்பவர். சாந்தமான போக்கும் கொண்டவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

மகம் நட்சத்திரக்காரர் பெரிய பணக்காரர். பலரை வைத்து வேலை வாங்குவார், போகங்களை விரும்பி அனுபவிப்பார். தெய்வபக்தி, பிதுர்பக்தி மிகுந்தவர். சஞ்சாரப் பிரியர், மகா உற்சாகமாக இருப்பவர். அழகான தோற்றம் உள்ளவர், விவேகமானவர், சுகந்த பரிமளங்களிலே பிரியமுடையவர், வலப்புறம் மரு உள்ளவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மகாலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் உள்ளது.

மூலம் நட்சத்திரக்காரர்கள் கர்வமானவர், சுகமான வாழ்வை விரும்புகிறவர், வசீகரமானவர். ஸ்திரமான புத்தியுள்ளவர், போகப் பிரியர், நித்திரைப் பிரியர், காரியம் செய்யும் சமர்த்துவர், சிறந்த தவயோகம் பெற்றவர், சிக்கனமானவர். கல்விமான், உறவினர்களோடு நெருங்காதவர், முன்கோபக்காரர், கொடுமையான மனத்தையும் பெற்றவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது.

பரணி, பூரம், பூராடம்

பரணி, பூரம், பூராடம்

சுக்கிரன் ஆளும் நட்சத்திரங்கள்

பரணி நட்சத்திரக்காரர்கள் உறுதியான மனப்போக்கும் படைத்தவர். சமத்தானவர், அதிகமான நோய்களுக்கு உட்படாதவர், ஞானம் பெற்றவர். செல்வங்களை அடைபவர். சுகங்களை விரும்புகிறவர். பின் பக்கம் மரு இருக்கப் பெற்றவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம், அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் நல்லாடை என்ற ஊரில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் இருக்கிறது.

பூரம் நட்சத்திரக்காரர்கள் பிரியமாக பேசுகிறவர். தான குணம் மிக்கவர். சாந்தியுள்ளவர், அரச சேவகம் செய்வர், பணம் தேடுவதில் ஊக்கமானவர், எதிர்காலத்தை சரியாக அறிந்து நடப்பவர், வியாபாரங்களில் ஈடுபடுகிறவர், கடினமான வாக்கும், சஞ்சலமான சித்தமும் கொண்டவர். விலங்குகளுக்கு பிரியமானவர். இந்த நட்சத்திரக்காரர்கள், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது.

பூராடம் நட்சத்திரக்காரர்கள் விருப்பம்போல் அமைந்த வாழ்க்கைத் துணையைப் பெற்றவர். மானஸ்தன், கர்வமுள்ளவர், பல நண்பர்களை உடையவர், உயர்ந்த உடல்வாகினர், வீசாரமுள்ளவர், பிரபுக்கள் சிநேகம் பெற்றவர். வருவதை யோசித்து நடப்பவர், தாயாருக்கு இனியவர், தன்னைச் சேர்ந்தவரை ஆதரிப்பவர். தந்திரமான தோற்றத்தினர், பொய் பேசாதவர், சஞ்சாரப் பிரியர், பெண்களுக்கு இனியவர், செல்வம் உள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம், ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது.

MOST READ: காதுக்குள்ள இவருக்கு எவ்ளோ அழுக்கு சேர்ந்திருச்சு தெரியுமா? கேட்டு ஷாக் ஆகிடாதீங்க...

 கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம்

சூரியன் ஆளும் நட்சத்திரங்கள்

கார்த்திகை நட்சத்திரக்காரர்கள் அதிகமாகச் சாப்பிடுகின்றவர். பசி தாங்காதவர். நல்ல நண்பர்கள் உள்ளவர், புகழ் பெற்றவர், வலுவான உடல் பெற்றவர். பொய்யும் பொருந்தச் சொல்பவர், ஆழமான மனம் கொண்டவர்.இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய ஆலயம், காத்ர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் கஞ்சா நகரம் உள்ளது.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் அனைவராலும் பிரியங்காட்டப் பெறுகின்றவர். வித்தையால் செல்வம் தேடிக் கொள்பவர். போகவானாக இருப்பவர். மனோ வியாதி இல்லாதவர், முன்கோபம் கொண்டவர், பொய் பேசாதவர், ஸ்ரானப் பிரியர், குறைந்த பசியுள்ளவர், ஞானமான மனமுள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள், மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் புத்திக் கூர்மை படைத்தவர். தார்மீக சிந்தையும் செயலும் கொண்டவர், ஏராளமான நண்பர்களைப் பெற்றவர். நல்லொழுக்கம் உள்ளவர், சகலருக்கும் வேண்டியவர், தாய் தந்தையருக்கு விருப்பமுள்ளவர், வலுவான தேகம் பெற்றவர், பலமானவர், புத்தி மிகுந்தவர், நல்ல சொற்களை பேசுபவர், போசனப் பிரியர், நீர்ருக்கு அஞ்சாதவர், பக்திமான், பகையை வஞ்சம் தீர்க்கும் உறுதியுள்ளவர், பிறர் பொருளை விரும்பாதவர், உத்தமர்க்கு இனிதானவர், கம்பீரமாகப் பேசுகிறவர், தியாக மனம் பெற்றவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது.

 ரோகிணி, அஸ்தம், திருவோணம்

ரோகிணி, அஸ்தம், திருவோணம்

சந்திரன் ஆளும் நட்சத்திரங்கள்

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சத்தியம் தவறாமல் நடப்பவர். ஆசார ஒழுக்கங்களில் பற்றுள்ளவர், பிறர் பொருளை விரும்பாதவர். இனிதான வாக்கை உடையவர், புத்தியுள்ளவர். அழகான சரீர வாகு பெற்றவர், எவருக்கும் உணவளிக்கும் இரக்க மனம் பெற்றவர், கண் பருத்திருப்பவர். பால் பானங்கள் அடிக்கடி அருந்தும் பழக்கத்தினர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, பாண்டவதூதப் பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயம் காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் உற்சாகமாக இருப்பவர், தைரியமான மனத்தினர், புத்தியுள்ளவர், பான பிரியர், இரக்கமில்லாதவர், சேர புத்தியுள்ளவர், சூரத்தனம் மிக்கவர், அழகான உடலுள்ளவர், பின்காலத்தில் பெரும் செல்வம் பெறுகிறவர். ஸ்ரானப் பிரியர், குருபக்தி உடையவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வழிபட வேண்டியது, கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் இருக்கிறது குத்தாலம்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சீமானாக விளங்குபவர். கம்பீரமான தோற்றமும், கீர்த்தியும் பெற்றவர். தன்மனம் நினைத்தபடியே பேசுகின்ற பிடிவாதமுள்ளவர். முன் பின் பார்த்து நடப்பவர், பெண்களால் நேசிக்கப்படுகிறவர், வாசனைப் பொருளை நேசிப்பவர், உற்சாகமானவர், கனவானாக விளங்குபவர்.இந்த நட்சத்திரக்காரர்கள், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலில் வழிபாடு செய்ய வேண்டும். திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.

MOST READ: அடக்கொடுமையே! சுன்னத் செய்த போது மயக்கம் போட்டு விழுந்த சிறுவன்...

மிருகஷீரிடம், சித்திரை, அவிட்டம்

மிருகஷீரிடம், சித்திரை, அவிட்டம்

செவ்வாய் ஆளும் நட்சத்திரங்கள்

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் சமர்த்தானவர். சதா சுற்றுவதில் விரும்பமுடையவர். வாக்கு சாதுரியமானவர், அச்சம் கொண்ட நெஞ்சினர், உற்சாகமாக எப்போதும் இருப்பவர், செல்வ நலம் அடைபவர், போக விருப்பலே மிகுதியானவர், வித்துவாம்சம் பெற்றவர், நினைத்ததை சாதிக்க எவ்வழிகளையும் நாடுகிறவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஆதிநாராயணப் பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.

சித்திரை நட்சத்திரக்காரர்கள் பலவிதமான ஆடை ஆபரணங்களை அணிய விரும்புகிறவர், சுகமான கண் பார்வை கொண்டவர், நல்ல குணம் உள்ளவர், சஞ்சாரப் பிரியர், தாமதமான புத்தியினர், உறுதியான பேச்சியுடையவர், சிக்கனமானவர், வல்லமையும் பரிவும் உள்ளவர், மிகுந்த

பாசமானவர், நம்பிக்கைக்கு உரியவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆலயம் குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் திருக் கோவில்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் சூரத்தனமானவர், தானம் செய்ய விரும்புகிறவர், திறமையானவர், கருமித்தனமானவர், தான் சொல்வதே சரியெனச் சாதிப்பவர், அச்சமற்றவர், பிறர் பேச்சைக் கேளாதவர், போசனப் பிரியர், பெண்களுக்கு வேண்டியவர், பெரியோர்க்கும் வேண்டியவர், அடங்கிப்போய் பிறர் பொருளை அபகரிப்பதில் மிக வல்லவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயத்தில் வழிபட வேண்டும். இந்த ஆலயம் கொருக்கை என்ற இடத்தில் உள்ளது.

MOST READ: உட்காருமிடத்தில் இப்படி கட்டி இருக்கிறதா? வலி உயிர் போகிறதா? என்ன பண்ணலாம்?

திருவாதிரை, சுவாதி, சதயம்

திருவாதிரை, சுவாதி, சதயம்

ராகு ஆளும் நட்சத்திரக்காரர்கள்

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் எதையும் மறைக்கத் தெரிந்தவர். தன் காரியத்திலேயே சதா கண்ணாயிருப்பவர். சுயகர்வம் மிக்கவர். நன்றிக்கே பொருள் தெரியாதவர். கெட்டவர் சகவாசப் பிரியர், பிறரை வருத்தி ஆனந்திப்பவர், பாவங்களைச் செய்வர், அடிக்கடி காரணமில்லாமலே கோபம் கொண்டு பிறர் வெறுப்பைச் சம்பாதிப்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள் அபய வரதீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இந்த ஆலயம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ளது.

சுவாதி நட்சத்திரக்காரர்கள் அறிவுக் கூர்மை பெற்றவர், நல்லயோகம் உள்ளவர், வியாபாரத்தில் விருப்பமுடையவர், தயாளமானவர், பிரியமான பேச்சு பேசுகின்றவர். தாமதபுத்தி படைத்தவர், அரசாங்க பணி செல்வோர், வித்துவாசம் பெற்றவர், தாய் தந்தைக்கு எப்போதும் இனிமையானவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாத்திரீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும். இந்த ஆலயம் சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது.

சதயம் நட்சத்திரக்காரர்கள் சத்தியவாதியாக இருப்பவர், சதா கவலைப்படுபவர், விரோதிகளை வெல்பவர், சாகசமாகப் பேசி பழகுகிறவர், புத்திசாலி, கைகளால் வலுத்தவர், ஆட்சியாளருக்கு இனியவர், வித்துவாசம் கொண்டவர், சூரர், பெண்கட்கு அன்பர், வழக்குப் பேசுவதில் வல்லவர், நீராடலில் பிரியமுள்ளவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில், அக்னிபுரீஸ்வரர் ஆலயம். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

குரு ஆளும் நட்சத்திரங்கள்

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தவயோகம் நாடுபவர், சுகங்களை விருப்புபவர், நல்ல ஒழுக்கமாக நடப்பவர், மந்தமான புத்தியுள்ளவர், வினயம் மிக்கவர், நோயான சரீரம் உள்ளவர். அதிக தாகம் உடையவர். அற்ப சந்தோஜம் அடைபவர். சாதுரியமான மனம் உடையவர். கடினமான வாக்கு உடையவர். வஞ்சகமானவர், புத்திசாலித்தனம் மிகுந்தவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், அதிதீஸ்வரர் திருக்கோவிலை வழிபாடு செய்யுங்கள். இந்தக் கோவில் பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் பொறாமை கொள்பவர், சாந்தியுள்ளவர், உரையாடலிலே சமர்த்தானவர், கலகப் பிரியர், முன்கோபம் கொண்டவர், சொல் தெளிவற்றவர், சேவை செய்யும் பண்புள்ளவர், கவலைப்படாமல் மனதை வைத்திருப்பவர், தெய்வ பக்தி உள்ளவர், படை வீரரை போல் நடந்து செல்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள், முத்துக்குமாரசாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். இந்த ஆலயம் செங்கோட்டை திருமலைக்கோவிலில் உள்ளது.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் சோகமான மனத்தைப் பெற்றவர், பெண்களால் வெற்றி கொள்ளப் பெற்று அவர்கட்கு இளசய நடப்பவர். தன சம்பித்து உடையவர், பெண்கள் வழியிலும் தன வருமானம் பெறுகிறவர், வாய்சாலம் மிகுந்தவர், தெய்வபக்தி குறைந்தவர், கல்விமானாகத் திகழ்பவர், ஆசை மிகுந்தவர், பொறாமையும் கொள்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள் திருவானேஷ்வர் திருக்கோவில் உள்ள இறைவனை வழிபாடு செய்யுங்கள். இந்த ஆலயம் ரங்கநாதபுரம் என்ற ஊரில் உள்ளது.

MOST READ: 16 வயதில் 100 கிலோ எடை... மரணத்தை எட்டிப் பார்த்து திரும்பிய சிறுவன்...

பூசம், அனுசம், உத்திரட்டாதி

பூசம், அனுசம், உத்திரட்டாதி

சனி ஆளும் நட்சத்திரங்கள்

பூசம் நட்சத்திரக்காரர்கள் சாந்தமான மனப்போக்கினர். எல்லோராலும் விரும்பப்படுகின்றவர். சாஸ்திரப் பொருள் அறிந்தவர். செல்வம் உள்ளவர். தர்மம் செய்யும் இயல்பினர், வழக்கு நியாயம் பேசுவதில் வல்லவர். பெற்றோரை அன்போடு ஆதரிப்பவர், குணசாலி என்று புகழ் படுகிறவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம், அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் நல்ல ஞானியாக விளங்குபவர், பிறதேசங்களில் வாசம் செய்பவர், பசி பொறுக்காதவர், பெரியோரை போற்றகிறவர், தாம்பூலம் பிரியர், செல்வம் உள்ளவர், கடைக்கண் சிவந்தவர். பெண்களால் விரும்பப்படுகிறவர். மயிரழகு பெற்றவர். பெற்றோரை ஆதரிப்பவர், யானை புத்தி பெற்றவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயம், மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வாய் சொல் வீரர். புத்திர பெளத்திரங்களை அதிகமாக பெற்றவர், விரோதிகளை வெற்றி கொள்பவர், தர்மசீலர், நீராடலில் பிரியர், புத்திசாலி, பெண்கட்கு இனியவர், சாதுரியம் மிகுந்தவர், பொய் பேசுகிறவர், மற்றவர்களுக்காக பணி செய்வோர், நல்லவர்களால் விரும்பப்படுகிறவர், வழக்கிலே எப்போதும் பலவானாக நிற்பவர். இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டியது, சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது.

ஆயில்யம் கேட்டை ரேவதி

ஆயில்யம் கேட்டை ரேவதி

புதன் ஆளும் நட்சத்திரங்கள்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வஞ்சகமான மனமுள்ளவர். எல்லாவற்றையும் அடைய நினைபவர், பாவச் செயல்களைச் செய்வதில் ஈடுபடக் கூடியவர். புத்திமானாகவும் பலவானாகவும் இருப்பவர், சுகத்தில் ஆர்வம் மிக்கவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கோவில், கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் திருந்துதேவன்குடி என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது.

கேட்டை நட்சத்திரக்காரர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர், தர்மவானாக விளங்குகின்றவர், அதிகமான கோபமுள்ளவர், பொய் பேசுகிறவர், உபாயம் மிகுந்தவர், ஸ்ராணப் பிரியர், சிற்றுண்டி பிரியர், பிரபுக்கள் நட்பு உடையோர், நெருங்கிய ரோம ஒழுங்கு பெற்றவர், பொய்யையும் அடித்துப் பேசி மெய்யாகப் பிறரை நம்பவைக்கும் சக்தி பெற்றவர். கடினமான வாக்கு உள்ளவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், வரதராஜப்பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபடுங்கள். தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் உள்ளது.

ரேவதி நட்சத்திரக்காரர்கள் சர்வஜனப் பிரியராக இருப்பவர், எழிலானவர், சூரத்தனம் மிகுந்தவர், பிறர் பொருளை விரும்பாதவர், பெண்கட்கு விருப்பமானவர், பிறர் சொல் கேட்பார், குணமுள்ளவர், சாதுரியமான பேச்சினை உடையவர், சிநேகம் மிகுந்தவர், இல்லை என்று வெளிப்படையாக மறுக்க கூடியவர், பழிக்கு இடம் தராமல் நடப்பவர், நிலையில்லாத செல்வத்தைக் கொண்டவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டியது, கயிலாயநாதர் ஆலயமாகும். திருச்சியிலிருந்து முசிறி சென்று அங்கிருந்து காருகுடி என்னும் இடத்தில் இந்த ஆலயம் உள்ளது.

MOST READ: 40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ashwini to Revathi 27 Nakshatras and their Characteristics

The Jyotish teachings of the Rig Veda tell us of the Nakshatras, or constellations which are said to represent human consciousness.The characteristics of each of the Nakshatras merit individual discussion, as do planetary influences, life purpose and deities, for this basic introduction it is sufficient to summarize the Nakshatras key attributes as indicated.
Story first published: Wednesday, July 31, 2019, 14:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more