Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
நீங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. 2022-இல் உங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்குமா-ன்னு சொல்றோம்...
நியூமராலஜியின் படி, ஒருவரது விதி எண் சம்பள உயர்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. நீங்கள் எண்களின் சக்தியை நம்புபவராயின், 2022 ஆம் ஆண்டு உங்கள் சம்பள உயர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2021 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் ஒரிரு வாரங்களே உள்ள நிலையில், வரவிருக்கும் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டுமென்று நாம் அனைவருமே நினைப்பதுண்டு. அதுவும் புதிய ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், பணிபுரிபவர்கள் பலரது மனதில் ஓடும் ஓர் எண்ணமென்றால், அது இந்த ஆண்டு நமக்கு ஒரு நல்ல சம்பள உயர்வு கிடைக்குமா என்பதாகவே இருக்கும். ஒருவரது திறமையின் அடிப்படையில் சம்பள உயர்வு கிடைப்பதாக இருந்தாலும், நியூமராலஜியின் படி ஒருவரது விதி எண்ணும் இதை தீர்மானிக்கின்றன.

நியூமராலஜியின் படி, 2022 என்னும் ஆண்டு 6 என்ற எண்ணுடன் வருகிறது. இந்த 6 சுக்கிரன்/வீனஸ் கிரகத்தால் ஆளப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் உள்ள 2 என்ற சந்திரனுக்குரிய எண் பெண்பால் ஆற்றலைக் கொண்டது. மேலும் இந்த ஆண்டு 0 என்ற புதன் மற்றும் ராகுவால் ஆளப்படும் எண்ணையும் கொண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நீர் உறுப்புகளின் அதிகப்படியான ஆற்றல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நியூமராலஜியின் படி, ஒருவரது விதி எண் சம்பள உயர்வில் முக்கிய பங்கை வகிக்கிறது. நீங்கள் எண்களின் சக்தியை நம்புபவராயின், 2022 ஆம் ஆண்டு உங்கள் சம்பள உயர்வை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவரது விதி எண்ணை எவ்வாறு கணக்கிடுவது?
நியூமராலஜியில், ஒருவரது பிறந்த தேதியில் இருந்து விதி எண் கணக்கிடப்படுகிறது. இந்த விதி எண் ஒற்றை இலக்க எண்களாக இருக்கும். உதாரணமாக, 14-09-1990 இல் பிறந்த ஒருவரது ஒற்றை இலக்க விதி எண் 6 (1+4+0+9+1+9+9+0=33; 3+3=6). இந்த எண் 6 சுக்கிரனால் ஆளப்படுகிறது. இப்போது 2022 ஆம் ஆண்டில் ஒவ்வொரு எண்ணுக்கும் நிதி ரீதியாக எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

விதி எண் 1
விதி எண் 1-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் வியப்பூட்டும் வகையில் சம்பள உயர்வைக் கொண்டு வரும். மேலும் பதவி உயர்வு மற்றும் வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து, தொழில் வளர்ச்சிக்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விதி எண் 2
விதி எண் 2-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மிதமானதாகவே இருக்கும். இந்த ஆண்டில் நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் அது நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும் என்பதால், மனம் தளராமல் இருங்கள்.

விதி எண் 3
விதி எண் 3-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதி ரீதியாக மிதமானதாகவே இருக்கும். இந்த ஆண்டு பணியிடத்தில் சம்பள உயர்வு நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்காது. ஆனால் உங்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவாகவே இருக்கும். ஆனால் ஆண்டின் பிற்பகுதியில் புதிய வேலை வாய்ப்பை கண்காணித்து வாருங்கள்.

விதி எண் 4
விதி எண் 4-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதி நிலைமையானது எதிர்பார்ப்புகளுக்கு குறைவாகவே இருக்கும். இதனால் சம்பள உயர்விலும் குறைவாகவே பெறுவீர்கள். இந்த ஆண்டின் பிற்பகுதியில் உயர் அதிகாரிகளுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.

விதி எண் 5
விதி எண் 5-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதி ரீதியாக மிதமானதாக இருக்கும். ஆனால் பணியிடத்தில் எதிர்பார்த்த சம்பள உயர்வை நீங்கள் பார்ப்பீர்கள். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விதி எண் 6
விதி எண் 6-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதி ரீதியாக சாதகமானதாக இருக்கும். பணியிடத்தில் சம்பள உயர்வானது நீங்கள் எதிர்பார்க்கும் அளவை விட அதிகமாகவே கிடைக்கும். இந்த ஆண்டில் தொழில் வளர்ச்சிக்கான பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.

விதி எண் 7
விதி எண் 7-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். இந்த ஆண்டில் தொழில் விரிவாக்கத்திற்கான ஏராளமான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

விதி எண் 8
விதி எண் 8-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டானது நிதி நிலைமையானது எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். சம்பள உயர்வும் கூட மிகவும் குறைவாகவே இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

விதி எண் 9
விதி எண் 9-ஐ கொண்டவர்களுக்கு 2022 ஆம் ஆண்டில் நிதி நிலைமையானது மிதமானதாக இருக்கும். இந்த ஆண்டு பணியிடத்தில் சம்பள உயர்வு நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்காது. ஆனால் உங்களின் எதிர்பார்ப்பிற்கு குறைவாகவே இருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வேலை மாற்றத்திற்கான வாய்ப்புக்கள் திறக்கப்படும்.



Click it and Unblock the Notifications