For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?

இந்து மதத்தில் பல கடவுள்கள் கையில் சங்கு வைத்திருப்பார்கள். ஆனால் சங்கு பொதுவாக காக்கும் கடவுளான திருமாலின் அடையாளமாக கூறப்படுகிறது.

|

இந்தியா பல விசித்திரமான பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் கொண்டது. குறிப்பாக இந்து மதத்தில் கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின் போது சங்கு ஒலிப்பது. கோவிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும்.

Why We Blow Shankha Before Puja?

இந்து மதத்தில் பல கடவுள்கள் கையில் சங்கு வைத்திருப்பார்கள். ஆனால் சங்கு பொதுவாக காக்கும் கடவுளான திருமாலின் அடையாளமாக கூறப்படுகிறது. இந்த பதிவில் ஏன் அனைத்து பூஜைகளுக்கு முன்னரும் சங்கு ஒலிக்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புராதன நம்பிக்கை

புராதன நம்பிக்கை

புராதனகால நம்பிக்கைகளின் படி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமிர்தத்திற்காக கடைந்த போது கடலில் இருந்து வெளியே வந்ததுதான் சங்கு ஆகும். இதனால் இந்து மத வழிபட்டு முறைகளில் இதற்கு அதிக முக்கியத்துவம் அழிக்கப்படுகிறது. பல கடவுள்கள் கையில் வைத்திருப்பதால் இது புனிதத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.

 ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

ஆன்மீகம் தவிர்த்து அறிவியல்ரீதியாகவும் சங்கிலிருந்து வெளிப்படும் ஒலிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. சங்கு சரியாக ஒலிக்கப்படும் போது அது சுற்றுப்புறத்தில் இருக்கும் நிறைய மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.

வீட்டை சுத்தம் செய்யும் பழைய முறை

வீட்டை சுத்தம் செய்யும் பழைய முறை

வீட்டை பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாக்க எப்படி சாணத்தை கரைத்து வீட்டில் பூசுவார்களோ அதேபோல சங்கு ஊதுவதும் வீட்டை சுத்தம் செய்யும் ஒரு முறையாகும். இது வீட்டில் உள்ளவர்களை பல நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும் முறையாகும்.

MOST READ:மொச்சைக்கொட்டை சாப்பிடுவது உங்களை எத்தனை ஆபத்தான நோய்களில் இருந்து பாதுகாக்கும் தெரியுமா?

பூஜைக்கு முன்

பூஜைக்கு முன்

முன்னரே குறிப்பிட்டது போல இந்து மதத்தில் சங்குக்கு என்று ஒரு முக்கியத்துவம் உள்ளது, பூஜைகளில் இது பயன்படுத்தப்பட காரணங்களும் உள்ளது. வராக புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி சங்கு ஊதாமல் எந்த கோவிலின் கதவும் திறக்கப்படாது.

சக்திவாய்ந்த அதிர்வுகள்

சக்திவாய்ந்த அதிர்வுகள்

சங்கை ஊதும்போது அதிலிருந்து சக்திவாய்ந்த அதிர்வுகள் வெளிப்படும் என்பது நாம் அறிந்ததுதான். பூஜையின் போது இதிலிருந்து வரும் சக்திவாய்ந்த அதிர்வுகள் நம்மை சுற்றியிருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டும் என்று கூறப்படுகிறது. மேலும் இது ஆற்றலை ஒரு இடத்தில் குவிக்கும் மையப்புள்ளியாகவும் இருக்கிறது.

 சாதாரண மனிதர்களுக்கு

சாதாரண மனிதர்களுக்கு

சாதாரண மக்களுக்கு புரியும்படி கூற வேண்டுமென்றால் பூஜையின் போது மணி அடிப்பது எப்படி கவனத்தை ஈர்த்து காஸ்மிக் ஆற்றலை உருவாக்குகிறதோ சங்கு ஒலிப்பது அதனை விட சக்திவாய்ந்த ஒன்றாகும்.

MOST READ:விநாயகர் சந்திரனுக்கு கொடுத்த சாபம் என்ன அதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் என்ன தெரியுமா?

மற்ற பயன்கள்

மற்ற பயன்கள்

பூஜைகளுக்கு மட்டுமன்றி சங்கு பல பலன்களை வழங்கக்கூடியதாக இருக்கிறது. வாஸ்துவை பொறுத்தவரையில் இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். வீட்டின் சரியான திசையில் சங்கை வைப்பது உங்கள் வீட்டிற்கு லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும். சங்கில் குளிப்பது, தண்ணீர் குடிப்பது என ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒரு பலனை வழங்கக்கூடியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why We Blow Shankha Before Puja?

Do you know why shanka is blowing before Puja?
Story first published: Monday, May 27, 2019, 17:46 [IST]
Desktop Bottom Promotion