Just In
- 7 hrs ago
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 8 hrs ago
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- 9 hrs ago
நாவூற வைக்கும்... பஞ்சாபி மட்டன் மசாலா
- 9 hrs ago
உங்க ராசிப்படி நீங்க எந்த வகையான நண்பர் தெரியுமா? நீங்க தேவாவா இல்ல சூர்யாவா? தெரிஞ்சிக்கோங்க...!
Don't Miss
- News
காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிணத்தை பார்த்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான காரணம் என்ன தெரியுமா?
இந்த பூமியில் எந்தவித சந்தேகமும் இன்றி ஒரு விஷயத்தை நம்பலாம் என்றால் அது மரணம்தான். ஏனெனில் வாழ்க்கையை பற்றித்தான் நம்மால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது, ஆனால் மரணம் நிகழும் என்பதை மட்டும் அனைவராலும் கூற இயலும். நாம் பிறக்கும்போதே நமது மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். இதைத்தான் அனைத்து மதங்களுமே கூறுகிறது.
இந்தியாவில் சகுனங்கள் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நல்ல காரியத்தை துவங்கும் போதோ அல்லது முக்கியமான வேலைக்காக வெளியே செல்லும்போதோ சகுனம் பார்த்து செல்வது என்பது இன்றும் நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். அந்த வகையில் நல்ல காரியத்தை தொடங்கும் முன் பிணத்தை பார்ப்பது நல்ல சகுனம் என்னும் வினோத நம்பிக்கை நம் சமூகத்தில் உள்ளது. இதற்கு பின்னால் சில சுவாரஸ்யமான காரணங்களும் உள்ளது. இந்த பதிவில் வெளியே செல்லும்போது பிணத்தை பார்த்து செல்வது ஏன் புனிதமானதாக கருதப்படுகிறது என்று பார்க்கலாம்.

எமதர்மன்
மரணம் என்பது வாழ்க்கையின் சுழற்சியில் இருந்து தப்பிக்க உதவுவதாகும். இந்து வேதங்களின் படி, நமது மரண நேரம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. அதிலிருந்து ஒரு நொடி கூட கூடவோ, குறையவோ செய்யாது. மரணத்தின் கடவுளான எமதர்மன் நம் மரண நேரத்தின் போது நம் ஆன்மாவை பூமியில் இருந்து கொண்டு வர எமதூதர்களை அனுப்புவார்.

பஞ்சபூதங்கள்
ஆன்மா உடலை விட்டு பிரிந்த பிறகு அதற்கு எந்த வலியும் இருக்காது, பயம், பற்று, துரோகம் போன்ற என்ற உணர்வும் இருக்காது. பஞ்சபூதங்களான பூமி, நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என அனைத்தில் இருந்தும் விலகி இருக்கும்.

இறுதி பயணம்
ஒருவர் இறந்த பிறகு அவரின் உடலானது மோட்சம் என்று அழைக்கப்படும் தனது இறுதிப்பயணத்திற்கு தயாராகிறது. ஆண்கள் மற்றும் விதைவை பெண்களின் உடல்கள் வெள்ளைத்துணியிலும், சுமங்கலி பெண்களின் உடல்கள் சிவப்பு நிற துணியிலும் மூடப்பட்டு பூக்கள் மற்றும் புதிய துணிகள் அணிவைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்படும். உறவினர்கள் தோளில் சுமக்க இறந்தவர்களின் உடல்கள் இடுகாட்டை நோக்கி எடுத்துச்செல்லப்படும்.

இறுதி ஊர்வலம்
இந்து மதத்தில், இறந்தவர்களின் உடல் எப்பொழுதும் அவர்கள் செல்லும் வழக்கமான வழியிலேயே எடுத்து செல்லப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவர்கள் பார்த்த இடங்கள், வழிகளில் அவர்களை எடுத்து செல்வது ஆன்மாவிற்கு அமைதியை தரும் என்று கூறப்படுகிறது. இதுதான் உண்மையான இறுதி ஊர்வலமாகும்.

இறுதி மரியாதை
ஒருவர் திடீரென சவ ஊர்வலத்தை பார்த்தால் உடனடியாக கைகளை கட்டிக்கொள்ள வேண்டும், மேலும் தலையை கீழ்ப்புறம் பார்த்தபடி சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும். இது இறந்தவர்களுக்கு அளிக்கும் மரியாதையாக மட்டுமில்லாமல் அவர்க்ளின் ஆன்மா அமைதியடைய நாம் ஈசனை வேண்டுவதாகும். மேலும் இப்படி செய்வது அந்த ஆன்மாவின் துயரத்தை போக்குவதாகவும் வேதங்கள் கூறுகிறது.

இறுதி சடங்கு
இறந்த ஒருவருக்கு இறுதி சடங்கு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான் அவர்களின் ஆன்மாவை மேல் உலகத்திற்கு அனுப்பி வைக்கும் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இறுதி சடங்கின் போது பொதுவான காரியங்களை பற்றி பேசுவதை தவிர்த்து கடவுளின் பெயரை உச்சரிப்பதோ, அல்லது கடவுளிடம் இறந்தவருக்காக வேண்டுவதோ ஆன்மாவிற்கு மட்டுமின்றி உங்களுக்கு நல்லதாகும்.

ஆன்மா ஆசைகளை எடுத்து செல்லும்
ஒருவர் இறுதி ஊர்வலத்தையோ அல்லது பிணத்தையோ பார்க்கும் போது உடனடியாக தனது மனதில் இருக்கும் ஆசைகளையும், எண்ணங்களையும் கூறவேண்டும். ஏனெனில் ஆன்மாவானது இறந்தவுடன் தான் கேட்கும் அனைத்து வார்த்தைகளையும் எமதர்மனிடம் சென்ற பின் கூறுமாம். உங்களின் ஆசைகளை நிறைவேற்றும் தூதுவதனாக நீங்கள் பார்க்கும் பிணத்தின் ஆன்மாக்கள் இருக்கும்.

நல்ல சகுனம்
சாஸ்திரங்களின் படி, நீங்கள் செல்லும் வழியில் இறுதி ஊர்வலத்தை பார்ப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இது உங்களின் நல்ல எதிர்காலத்திற்கான சிறந்த அடையாளமாகும். உங்களின் ஆசைகள் மற்றும் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிந்து, உங்கள் வாழ்வில் இருக்கும் தடைகள் மற்றும் கஷ்டங்கள் அந்த பிணத்துடன் எரிக்கப்பட்டு விடும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

புண்ணியம்
எனவே இனி எதிரில் பிணத்தை பார்த்தால் உங்கள் பயணத்தை சிறிது நேரம் தள்ளி வைத்துவிட்டு இதனை செய்யுங்கள். மேலும் சவத்தை தூக்க தோள் கொடுப்பது ஒரு யாகம் செய்வதால் கிடைக்கும் புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும் என்று வேதங்கள் கூறுகிறது. முன்பின் தெரியாத ஒரு ஆன்மாவிற்காக நீங்கள் வேண்டும் பொழுது அது உங்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்தும்.