For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணரின் குரு பற்றியும் அவருக்கு கிருஷ்ணர் கொடுத்த விலைமதிப்பில்லாத குருதட்சணை பற்றியும் தெரியுமா

கிருஷ்ணரின் ஆற்றலை பற்றி நன்கு அறிந்த நாம் அவருக்கு அந்த கலைகளை கற்றுக்கொடுத்தது யார் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?

|

கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகளையும், மகிமையையும் நாம் அனைவரும் நன்கு அறிவோம். திருமாலின் அவதாரமான கிருஷ்ணர் அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பாற்ற பூமியில் அவதாரமெடுத்தார். என்னதான் கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் அவரும் மனிதர்தான். அதனால் அவருக்கான ஞானத்தையும், போர்க்கலையையும் குருகுலம் சென்று குரு மூலமே கற்றுக்கொண்டிருப்பார் அல்லவா?

Who Is the Guru of Lord Krishna?

கிருஷ்ணரின் ஆற்றலை பற்றி நன்கு அறிந்த நாம் அவருக்கு அந்த கலைகளை கற்றுக்கொடுத்தது யார் என்று யோசித்து பார்த்திருக்கிறோமா?. கிருஷ்ணரின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் அவரின் கைகளில் இருக்கும் பாஞ்சன்யம் சங்கு எப்படி வந்தது என்பது பற்றி சிந்தித்து பார்த்திருக்கிறோமா?. இதனை பற்றி தெரிந்தவர்கள் வெகுசிலரே. இந்த பதிவில் கிருஷ்ணரின் குரு யார் என்பதையும், அவருக்கு பாஞ்சன்யம் கிடைத்ததற்கு பின்னல் இருக்கும் சுவாரஸ்ய கதையையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராமபிரானும் இதை செய்தார்?

இராமபிரானும் இதை செய்தார்?

இராவணனை அழிக்க இராமனாய் அவதாரமெடுத்து அவனை அழித்த கதையே இராமாயணம் என்னும் இதிகாசமாகும். இராமபிரான் கடவுளாக இருந்தாலும் மனிதனாய் பிறந்த போது குருவாக வசிஷ்ட மகரிஷியை அடைந்தார். தனது குருகுலத்தை வசிஷ்டரின் ஆசிரமத்தில் முடித்த இராமர் அதன்பின் விசுவாமித்திரரை தன் குருவாக ஏற்று அவரிடம் இருந்து பல திவ்ய அஸ்திரங்களை பற்றிய கலைகளை அறிந்தார். கடவுளாகவே இருந்தாலும் குரு இல்லாமல் அவர்களால் அதர்மத்தை அழித்திருக்க முடியாது.

கர்க முனி

கர்க முனி

கம்சனின் சிறையில் கிருஷ்ணர் பிறந்த போது அவர் கோகுலத்தில் இருந்த நந்தரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த பகுதியில் கர்க முனி மிகவும் பிரபலமானவராகவும், புனிதமானவராகவும் இருந்தார். நந்தர் அவரை குருவாக ஏற்று வாழ்ந்து வந்தார். எனவே கிருஷ்ணரின் குழந்தை பருவத்தில் அவருக்கு குருவாக இருந்து பாலபாடத்தை கற்றுக்கொடுத்தது கர்க முனிதான்.

மதுராவிற்கு இடம்பெயர்வு

மதுராவிற்கு இடம்பெயர்வு

கிருஷ்ணர் பருவ வயதை அடைந்த பிறகு கோகுலத்தை விட்டு தன்னுடைய பிறந்த இடமான மதுராவிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் தன் மாமாவான கம்சனை மற்றும் மதுராவின் மன்னனாக இருந்த உக்கிரசேனனையும் கொன்றார். மதுராவிற்கு சென்ற பின்னரும் கர்க முனி கிருஷ்ணருக்கு குருவாக இருந்து ஆலோசனைகளை வழங்கி கொண்டுதான் இருந்தார்.

முறையான கல்வி

முறையான கல்வி

இதற்கு முன் கிருஷ்ணர் சண்டிபணியின் ஆசிரமத்திற்கு சென்று கல்வி கற்க தொடங்கினார். அவருடன் அவரின் சகோதரனை பலராமனும் சென்றார். மேலும் கிருஷ்ணரின் நண்பரான சுதாமரும் அங்குதான் படித்து கொண்டிருந்தார். சண்டிபணி என்பதன் பொருள் முழுமையான ஒளிரும் தன்மை கொண்டவர் என்பதாகும்.

MOST READ: இறந்தவர்கள் உடல் எரிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணம் என்ன தெரியுமா?

குருதட்சணை

குருதட்சணை

தன் குருகுல கல்வியை முடித்த பிறகு கிருஷ்ணர் குரு தட்சணையை கொடுக்க விரும்பினார். அதற்கு சண்டிபணி அவர்கள் பிரபாஸம் என்னும் பகுதியில் இருந்து தன் மகனை மீட்டு கொண்டு வரும்படி கேட்டார். அதுவே தனக்கான குருதட்சணை என்று கூறினார். எனவே கிருஷ்ணரும், பலராமரும் தனது குருவின் மகனை மீட்கு பயணத்தை மேற்கொண்டனர். பிறகுதான் சங்காசுரன் என்னும் அரக்கனிடம் அவன் சிக்கியிருப்பதை உணர்ந்தனர்.

சங்காசுரன்

சங்காசுரன்

சங்காசுரன் ஒரு சங்கிற்குள் வாழ்ந்து வந்தான். கிருஷ்ணர் சங்காசுரனை வீழ்த்தி விட்டார், ஆனால் அவரால் சண்டிபணியின் மகனை அந்த சங்கிற்குள் கண்டறிய முடியவில்லை. அந்த சங்குதான் பாஞ்சன்யம் ஆகும்.

எமலோக பயணம்

எமலோக பயணம்

கிருஷ்ணர் பாஞ்சன்ய சங்கை எடுத்துக்கொண்டு எமலோகத்திற்கு பயனைத்தார். அங்கு சென்று மரணத்தின் கடவுளின் வாயிலில் சங்கை ஊதினார். கிருஷ்ணர் சங்கை ஊதியவுடன் சங்கில் இருந்த சண்டிபணியின் மகன் வெளியே விழுந்தார். வெளியே வந்தவுடனேயே அவன் கிருஷ்ணர் மற்றும் பலராமன் இருவரும் உண்மையில் யார் என்பதை அறிந்துகொண்டார்.

கிருஷ்ணரின் ஆணை

கிருஷ்ணரின் ஆணை

எமலோகத்திற்கு வந்தாலும் கிருஷ்ணர் தனது குருவின் மகனை மீண்டும் பூமிக்கு அனுப்பும் படி எமதர்மனுக்கு ஆணையிட்டார். கிருஷ்ணரின் ஆணையை ஏற்ற எமதர்மன் சண்டிபணியின் மகனை மீண்டும் பூமிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டார். தனது குருவின் மகனை மீண்டும் அவரிடம் ஒப்படைத்து தனது குருதட்சணையை செலுத்தினார்.

MOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...!

பாஞ்சன்யம்

பாஞ்சன்யம்

குருவின் மகனை ஒப்படைத்தாலும் சங்காசுரன் குடியிருந்த பாஞ்சன்ய சங்கை தன்னிடமே வைத்துக்கொண்டார். மகாபாரத போர் நடந்த போது கிருஷ்ணர் இந்த சங்கைதான் தன் கையில் வைத்திருந்தார். இதன் முக்கியத்துவம் மகாபாரதத்தின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் தொடக்கத்தையும், முடிவையும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த சங்குதான் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Who Is the Guru of Lord Krishna?

Even when God comes down to earth, he upholds the value of a guru in one's life. Lord Krishna also did the same.
Desktop Bottom Promotion