For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரம்ம ராட்சஷர்கள் உண்மையில் யார்? அவர்களுக்கு ஏன் மக்கள் கோவில் கட்டினார்கள் தெரியுமா?

மக்கள் கோவில் கட்டி வழிபட்ட ராட்சஷர்களும் புராணங்களில் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம ராட்சஷர்கள் என்று அழைத்தனர்.

|

இந்திய புராணங்களில் பல அரக்கர்களும், ராட்சஷர்களும் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அதர்ம வழியை பின்பற்றியதால் உலக நன்மைக்காக கடவுள்களின் பல்வேறு அவதாரங்களால் அழிக்கப்பட்டனர். பொதுவாக ராட்சஷர்கள் கொடிவயர்களாக இருப்பார்கள் அதனால் மக்கள் அவர்களை வெறுத்து வந்தனர்.

Who Are Brahma Rakshas and Why People Build Temples for Them

மக்கள் கோவில் கட்டி வழிபட்ட ராட்சஷர்களும் புராணங்களில் இருக்கின்றனர். அவர்கள் பிரம்ம ராட்சஷர்கள் என்று அழைத்தனர். பிரம்ம ராட்சஷர்கள் யார் அவர்களுக்கே ஏன் கோவில் கட்டப்பட்டது என்பதையெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிரம்ம ராட்சஷர்கள் என்றால் யார்?

பிரம்ம ராட்சஷர்கள் என்றால் யார்?

பிரம்ம ராட்சஷர்கள் என்பவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்து இயற்கைக்கு மாறான மரணம் அடைந்த அறிவுஜீவி பிராமணர்களின் ஆன்மா ஆகும். அதிசக்தி வாய்ந்த ஆவிகள் உலகத்தை விட்டு பிரியாமல் தனது தீயசெயல்களை தொடர்ந்து கொண்டுதான் இருப்பார்கள். சில கோவில்களில் பிரம்ம ராட்சஷர்களுக்கு என தனியிடம் ஒதுக்கி கோவில் கட்டியிருப்பார்கள்.

பிரம்ம ராட்சஷர்களின் தகுதிகள்

பிரம்ம ராட்சஷர்களின் தகுதிகள்

பிரம்ம ராட்சசர்கள் என்பவர்கள் ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம் ஆனால் படித்த பிராமணரின் ஆவியாக மட்டுமே இருக்கும். பிரம்ம என்பது அவர்கள் பிராமணர்கள் என்பதை குறிக்கும் ராட்சஷர் என்பது அவர்களின் தீய குணங்களை குறிப்பதாகும். இவர்கள் வேதங்கள் மற்றும் புராணங்களை பற்றிய அனைத்து ஞானத்தையும் பெற்றிருப்பார்கள். ஆனால் அதனை வைத்து மற்றவர்களை துன்புறுத்துவது, வதைப்பது, மனிதர்களை சாப்பிடுவது போன்ற தீய செயல்களை செய்வார்கள்.

சக்திவாய்ந்த ஆவிகள்

சக்திவாய்ந்த ஆவிகள்

பிரம்ம ராட்சஷர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் விரும்புபவர்களுக்கு செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அவர்களால் வழங்க முடியும். அவர்கள் வெறுப்பவர்களுக்கு நரகத்தை விட மோசமான தண்டனையையும் அவர்களால் கொடுக்க முடியும். இவர்களால் தங்கள் கடந்த ஜென்மத்தை பற்றி நன்றாக அறிந்து கொள்ள முடியும் அதன்மூலம் தங்களின் கடந்த கால எதிரிகளை கூட அவர்களால் பழிவாங்க முடியும்.

MOST READ:இந்த விரல் நீளமாக இருப்பவர்களை துரதிர்ஷ்டமும், அவமானமும் துரத்தி கொண்டே இருக்குமாம் தெரியுமா?

பிரம்ம ராட்சஷர்களின் கதை

பிரம்ம ராட்சஷர்களின் கதை

7 ஆம் நூற்றாண்டில் பிரபல சமஸ்கிரத கவிஞரான மயூர்படா சூர்ய சாதகம் என்னும் நூலை இயற்றினார். இதனை பீகாரில் இருக்கும் புகழ்பெற்ற தியோ சூரிய கோவிலில் இருந்த அரசமரத்தின் கீழ் அமர்ந்து செய்தார். அந்த மரத்தில் இருந்த பிரம்ம ராட்சஷன் அவர் பாடிய பாடல்களை திரும்ப திரும்ப பாடி அவரை தொந்தரவு செய்தது.

 மயூர்படாரின் சாதுர்யம்

மயூர்படாரின் சாதுர்யம்

அந்த பிரம்ம ராட்சஷனை தோற்கடிக்க மயூர்பட்டர் மந்திரத்தை தன் மூக்கின் மூலம் உச்சரிக்க தொடங்கினார். பிரம்ம ராட்சசன் போன்ற ஆத்மாக்களுக்கு மூக்கு இருக்காது. அதனால் பிரம்மா ராட்சஷனால் மயூர்பட்டர் கூறிய மந்திரத்தை மீண்டும் கூற இயலவில்லை. இதனால் தோல்வியடைந்த பிரம்ம ராட்சஷன் அந்த இடத்தை விட்டு விலகி சென்றது.

ஏன் கோவில்களில் வழிபடுகிறார்கள்?

ஏன் கோவில்களில் வழிபடுகிறார்கள்?

பொதுவாக அனைத்து கோவில்களிலும் பிரம்ம ராட்சஷர்கள் ஒரு இடத்தை ஆக்கிரமித்து இருப்பார்கள். அவர்கள் கோவிலை கட்டுவதற்கும், சீரமைப்பதற்கும் தொந்தரவுகளை ஏற்படுத்துவார்கள். எனவே கோவிலை கட்ட தொடங்கும் முன் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவர்களுக்கென ஒரு தனி பீடத்தை அமைத்து அதற்கு விளக்கேற்றி வழிபட்டால் அவர்கள் கோவில் வேலைகளில் எந்த தொந்தரவையும் ஏற்படுத்தமாட்டார்கள்.

பிரம்ம ராட்சஷ கோவில்

பிரம்ம ராட்சஷ கோவில்

கேரளாவில் இருக்கும் திருணாக்கரா சிவன் கோவிலில் பிரம்ம ராட்சஷர்களுக்கு என தனி கோவில் உள்ளது. இதன் கதையானது மிகவும் சுவாரஸ்யமானதாகும். அந்த பகுதியை ஆண்ட மன்னர் அழகில் குறைந்தவராக இருந்தார், அவரின் நெருங்கிய நண்பர் மூஸ் என்பவர் மிகவும் அழகானவராக இருந்தார். இதனால் ராணி அவர் மீது காதலுற்றார். இது மன்னரை கோபப்படுத்தியது.

MOST READ:கையில் செம்பு காப்பு அணிவதால் உங்கள் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

மன்னரின் ஆணை

மன்னரின் ஆணை

மன்னர் மூஸை கொல்ல உத்தரவிட்டார். ஆனால் வீரர்கள் தவறுதலாக கோவில் குருக்களை கொன்றுவிட்டனர். இறந்த குருக்களின் மனைவிபிரம்ம ராட்சஷனாக மாறி அனைவரையும் துன்புறுத்தி வந்தார். அவரின் ஆன்மாவை அமைதிப்படுத்தும் பொருட்டு மன்னர் அவருக்கு கோவில் ஒன்றை கட்டினார். பல ஆண்டுகளாக பெண்கள் இந்த கோவிலுக்குள் செல்ல பயந்து கொண்டிருந்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: temples ghost vedas
English summary

Who Are Brahma Rakshas and Why People Build Temples for Them

Brahma Rakshas is the spirit of a scholarly Brahmin who lived an evil life and suffered unnatural death.
Desktop Bottom Promotion