For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆன்மாவுக்குனு தனி நிறம் இருக்கு தெரியுமா? உங்க ஆன்மாவோட நிறம் என்னனு நீங்களே கண்டுபுடிங்க..!

பொதுவாக உங்களுக்கு பிடித்த நிறமும் எந்த நிற உடையை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்துமே உங்களின் ஆளுமை நிர்ணயிக்கப்படுகிறது.

|

ஆன்மா பற்றிய சிந்தனை வந்தாலே அது வெள்ளை நிறத்திலும், புகை போல்வாவும் இருக்குமென நாம் முடிவெடுத்து விடுகிறோம். இதற்கு காரணம் காலம் காலமாக நாம் பார்த்து பழகிய படங்களும், படித்த கதைகளும்தான். ஆனால் உண்மையில் அப்படி இருக்க வாய்ப்பில்லை. ஆன்மாவின் நிறம் என்பது நமது எண்ணங்கள் மற்றும் செயல்கள் பொறுத்ததாகும்.

What is the colour of your soul?

பொதுவாக உங்களுக்கு பிடித்த நிறமும் எந்த நிற உடையை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்துமே உங்களின் ஆளுமை நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு நீங்கள் பிரகாசமான சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு போன்ற நிற உடைகளை அதிகம் அணிய விரும்பினால் உங்களின் ஆளுமை மிகவும் சிறந்ததாக இருக்கும். அதேபோல உங்களின் ஆன்மாவின் நிறம் என்ன என்பதையும் உங்களின் எண்ணங்களே தீர்மானிக்கும். இந்த பதிவில் உங்கள் ஆன்மாவின் நிறம் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு

சிவப்பு

உங்களுக்கு காதல் மற்றும் இரக்க குணங்கள் அதிகம் இருந்தால் உங்கள் ஆன்மாவின் நிறம் சிவப்பாக இருக்க வாய்ப்புள்ளது. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உங்களுக்கு அலாதி பிரியம் இருக்கும். பலரின் துன்பங்களை துடைத்து அவர்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வரும் சக்தி உங்களுக்குள் இருக்கும். நீங்கள் செய்யும் மற்றும் செய்ய போகிற விஷயங்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக எப்பொழுதும் இருக்கும்.

சில்வர் அல்லது வெள்ளி நிறம்

சில்வர் அல்லது வெள்ளி நிறம்

வெள்ளி நிற ஆன்மா இருப்பது மிகவும் அபூர்வமானதாகும், ஏனெனில் மிகசிறந்த குணம் உள்ளவர்களுக்கு மட்டுமே வெள்ளி நிற ஆன்மா இருக்கும். வெள்ளி நிற ஆன்மா இருப்பவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள், அற்புதமான உள்ளுணர்வும் சிறிது கூச்சமும் இவர்களுக்கு எப்பொழுதும் இருக்கும். உலகத்தை இவர்கள் எப்பொழதும் நேர்மையாகவே பார்ப்பார்கள் அதனாலேயே இது மிகவும் அதிசயமான ஆன்மாவாக கருதப்படுகிறது. சுவாரஸ்யமான சவால்களை எதிர்கொள்வதில் இவர்களுக்கு எப்பொழுதும் ஆர்வம் இருக்கும்.

மஞ்சள்

மஞ்சள்

மிகவும் அன்பாகவும், பிறருடன் நேசமாகவும், வெளிப்படையாகவும் இருப்பவர்களின் ஆன்மாவின் நிறம் மஞ்சள் நிறமாகும். இவர்களின் கற்பனைத்திறன் அற்புதமானதாக இருக்கும் அதேசமயம் இவர்கள் அனைவரின் நம்பிக்கைக்கும் உரியவர்களாக இருப்பார்கள். இவர்களின் கற்பனைத்திறனால் சிலசமயம் வேகமாக ஓடுவது போல இருக்கும். இவர்கள் உறவுகளுக்கு எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

இயற்கையாகவே சில நல்ல குணங்களும், மற்றவர்களுடன் நன்கு பழகுபவர்களாகவும், எளிதில் நண்பர்களை உருவாக்கி கொள்பவராகவும் இருந்தால் உங்கள் ஆன்மாவின் நிறம் ஆரஞ்சு ஆகும். இவர்கள் எப்போதும் தோழமையையும், நட்பையும் விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்களின் பேச்சாற்றல் இவர்களுக்கு மக்களிடையே அதிக புகழை பெற்றுத்தரும்.

MOST READ: இச்சாதாரி நாகங்கள் வாழ்ந்தது உண்மையா? இச்சாதாரி நாகம் பற்றிய வியக்கவைக்கும் ரகசியங்கள்...

பச்சை

பச்சை

எடுத்த முடிவுகளில் உறுதியாகவும், மற்றவர்கள் மதிக்கும் நபராகவும் இருந்தால் உங்கள் ஆன்மாவின் நிறம் பச்சையாகும். அனைத்திலும் சமநிலையுடன் ருக்கும் இவர்கள் வெளிப்படையாக பேசக்கூடியவர்களாகவும், சுதந்திரத்தி விரும்புபவராகவும் இருப்பார்கள். இவர்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பவராகவும், உணவில் அதிக நாட்டம் இருப்பவராகவும் இருப்பார்கள்.

நீலம்

நீலம்

அனைத்தையும் ஆழமாகி சிந்திப்பவராகவும், அதிக கவனம் இருபவராகவும் இருந்தால் உங்கள் ஆன்மாவின் நிறம் நீலம் ஆகும். இவர்கள் அனைத்தையும் தன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்தே பார்ப்பார்கள் மேலும் இவர்கள் சிறந்த நிர்வாகியாகவும் இருப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களை கேட்டாலும் முடிவு என்னவோ இவர்கள் எடுப்பதாகத்தான் இருக்கும். இவர்கள் அனைத்தையும் திட்டமிட்டு ஒழுங்காக நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

பிங்க்

பிங்க்

இது மென்மையின் அடையாளமாகும், அன்பையும், காதலையும் இது பிரதிபலிக்கிறது. இவர்கள் எப்பொழுதும் பாதுகாப்பு, அதிக கவனிப்பு போன்றவற்றை மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்கள் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இவர்களின் மனது மிகவும் மென்மையானதாக இருக்கும்.

வெள்ளை

வெள்ளை

நீங்கள் எப்பொழுதும் பாசிட்டிவாக சிந்திப்பவராகவும், நம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வை உடையவராகவும் இருந்தால் உங்கள் ஆன்மாவின் நிறம் வெள்ளையாகும். உங்களுக்கு சுயகட்டுப்பாடு எப்பொழுதும் அதிகமாக இருக்கும். நம்பிக்கை மிகுந்த நீங்கள் எதையும் தேர்ந்தெடுக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வீர்கள், அதேபோல உங்கள் மனநிலையும் மாறிக்கொண்டே இருக்கும். உங்களுக்கான சிரமமான சூழ்நிலைகள் நீங்களே உருவாக்கி கொள்வதாக இருக்கும்.

MOST READ: தலையணை வைக்காமல் தூங்கினால் உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

கருப்பு

கருப்பு

சுதந்திர உணர்வும், உறுதியும், அதிக உணர்ச்சிவசப்படாத சுபாவமும் இருந்தால் உங்கள் ஆன்மாவின் நிறம் கருப்பு ஆகும். இவர்கள் எதிலும் ஒரு பாதுகாப்பற்ற உணர்வை கொண்டவர்களாக இருப்பார்கள். நீங்கள் அனைவரையும் குறிப்பிட்ட தூரத்தில் வைக்கவே நினைப்பீர்கள், அதன்மூலம் உங்களுக்கு எந்த கெடுதலும் நடக்காது என்ற நம்பிக்கை உடையவராக இருப்பீர்கள். மற்றவர்களிடம் வெளிப்படையாக இருப்பது உங்களுக்கு பிடிக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is the colour of your soul?

Based on your thoughts if your soul had a colour, what colour would it be?
Desktop Bottom Promotion