For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸில் ஈடுபடும் போது ஆண் மற்றும் பெண் மூளையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

நமது உடலின் மையமாக செயல்படும் மூளையானது உடலுறவில் ஈடுபடும்போது என்ன செய்யும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா?

|

ஆண், பெண் இருவருக்குமே செக்ஸ் என்பது அவசியமான ஒன்றாகும். திருமணத்திற்கு பிறகான தம்பதிகளின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடிப்பது உடலுறவுதான். ஏனெனில் இது கணவன், மனைவி இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க பெரிதும் உதவுவதாகும். உடலுறவில் ஈடுபடும் போது உடலின் பல பாகங்கள் உங்களுக்கே தெரியாமல் செயல்படுகிறது.

What Happens to Your Brain When You Have Lovemaking

நமது உடலின் மையமாக செயல்படும் மூளையானது உடலுறவில் ஈடுபடும்போது என்ன செய்யும் என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? நமக்குள் உடலுறவு பற்றிய ஆசையை தூண்டுவதே மூளையில் இருக்கும் செல்கள்தான், அப்படியிருக்கும் போது உடலுறவில் ஈடுபடும்போது அது என்ன செய்யும், உடலுறவால் மூளைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்பதெல்லாம் பதில் தெரியாத கேள்விகளாக இருக்கலாம். ஆனால் அந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூளையின் சில பகுதிகள் விழித்துக்கொள்ளும்

மூளையின் சில பகுதிகள் விழித்துக்கொள்ளும்

மூளையில் இருக்கும் லிம்பிக் என்னும் அமைப்புதான் நமது உறுப்புகளை செய்லபட வைக்கவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் பொறுப்பானதாகும், உடலுறவின் போது இது விழித்துக்கொள்ளும். மூளையின் செரிபெரல் பகுதிகள் மூடப்பட்டுவிடும். உடலுறவானது காரண, காரியங்களை யோசிக்காமல் உணர்ச்சிகள் மற்றும் உள்ளுணர்வை கொண்டு செய்யப்படுவதாகும்.

மூளையின் மற்ற பகுதிகள்

மூளையின் மற்ற பகுதிகள்

உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுடைய மூளையின் இரண்டு முக்கியமான பகுதிகள் வேலை செய்வது நிறுத்துகிறது.மூலையில் இருக்கும் விழிப்புணர்வு பகுதிகள் இந்த சமயத்தில் வேலை செய்யாது அதனால்தான் " காதலுக்கு கண்ணில்லை " என்று கூறுகிறார்கள். மேலும் சுய விழிப்புணர்வு மற்றும் சுய கட்டுப்பாட்டை கவனிக்கும் பெண்களுடைய மூளையின் பகுதிகளும் உடலுறவின் போது வேலை செய்வது கிடையாது.

டோபமைன்

டோபமைன்

செக்ஸ் உங்கள் மூளைக்குள் பல்வேறு இரசாயன மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த இரசாயனங்கள் உங்கள் பாலியல் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த உதவுகிறது. உடலுறவின் போது வெளியிடப்படும் டோபமைன் உங்களுக்கு ஆசை, திருப்தி மற்றும் உற்சாகம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். போதை மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்க காரணம் மூளை டோபமைனை வெளியிடுவதுதான். ஹைபோதாலமசான இந்த பகுதிதான் பசி, தாகம் போன்ற உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.

MOST READ: உங்களின் இந்த இரவு நேர செயல்கள் உங்களை நரகத்திற்கு அழைத்து செல்லும் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது..

ஆக்சிடாஸின்

ஆக்சிடாஸின்

மூளை வெளியிடும் ஹார்மோனான ஆக்சிடாஸின் நரம்பியல் கடத்தியாக செயல்பட்டு பாலியல் உந்துதலையும், உச்சகட்டத்தையும் ஏற்படுத்துகிறது. உறவிற்கு பிறகான நெருக்கத்தை அதிகரிப்பதும் இதுதான். குறிப்பாக பெண்களுக்கு இது அதிகம் சுரப்பதாலதான் அவர்கள் உச்சக்கட்டத்திற்கு பிறகு அதிக நெருக்கம் காட்டுகிறார்கள்.

வாஸோப்ரஸின்

வாஸோப்ரஸின்

ஆராய்ச்சிகளின் படி வாஸோப்ரஸின் சுரப்பானது பெண்களுக்கு உச்சக்கட்டத்திற்கு பிறகு அவர்களின் உணர்ச்சிகளை அதிகரிக்கிறது. ஆண்களை பொறுத்தவரையில் வாஸோப்ரஸின் சுரப்பானது அவர்களுக்கு உச்சக்கட்டத்திற்கு பிறகு ஒரு அயர்ச்சி நிலையை ஏற்படுத்தி தூக்கத்தை வரவைக்கக்கூடும், ஆனால் பெண்களின் நிலை அப்படியல்ல.

செரோட்டினின்

செரோட்டினின்

செரோட்டினின் தூக்கத்தையும், மனநிலையையும் கட்டுப்படுத்தும் வேலையை செய்கிறது. இதனால்தான் சரியாக தூங்காதபோது நாம் மனஅழுத்தத்துடன் காணப்படுகிறோம். உடலுறவின் போது இது அதிகம் சுரப்பதால் நாம் மகிழ்ச்சியாகவும் உச்சகட்டத்திற்கு பிறகு அமைதியாகவும் உணருகிறோம். உடலுறவில் ஈடுபட்டால் நமது மனஅழுத்தம் குறையும், மூளை நன்கு வேலை செய்யும் என்று கூற காரணம் அது செரோட்டினை அதிகம் சுரக்க வைப்பதால்தான்.

நோர்பைன்ஃபெரின்

நோர்பைன்ஃபெரின்

நோர்பைன்ஃபெரின் நரம்பு மண்டலத்தை செய்லபட வைப்பதன் மூலம் தூண்டல், ஆற்றல் மற்றும் கவனத்தை வழங்குகிறது. இது நமது இதயத்துடிப்பை அதிகரிப்பதன் மூலம் நமக்கு கவனத்தை ஏற்படுத்துகிறது. காதலிலோ அல்லது காமத்திலோ இருக்கும்போது பசியின்மை, அதிக உற்சாகம், தூக்கமின்மை போன்றவை ஏற்பட இந்த ஹார்மோன்தான் காரணம்.

MOST READ: பிறரின் பலவீனங்களை எளிதாக அறிய சாணக்கியர் கூறும் தந்திரங்கள் என்னென்ன தெரியுமா?

சோகத்திற்கான காரணம்

சோகத்திற்கான காரணம்

உச்சக்கட்டத்திற்கு பிறகு சிலசமயம் மூளை ப்ரோலேக்டின் எனும் இரசாயனத்தை வெளியிடுகிறது இது டோபோமைனின் உற்பத்தியை பாதிக்கிறது. இதனால்தான் உடலுறவிற்கு பிறகு மந்தமாகவோ, சோகமாகவே அல்லது தனிமையாகவோ உணருகிறார்கள். பெரும்பாலனோர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்னனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Happens to Your Brain When You Have?

Here’s everything researchers know so far about what happens to your brain during lovemaking.
Desktop Bottom Promotion