For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஸ்து சாஸ்திரத்தின் படி தங்கம் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் தெரியுமா?

ஒவ்வொரு உலோகமும் ஒருவித ஆற்றலை ஈர்க்கக்கூடும். தங்கம் ஒரு தனித்துவமான உலோகமாகும். தங்கம் பணம், செல்வம் என அனைத்து நல்ல விஷயங்களையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாகும்.

|

உலகில் தங்கத்தின் மிகப்பெரிய சந்தை என்றால் அது இந்தியாதான். உலகிலேயே தங்கத்தை அதிகம் உபயோகிக்கும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானதாகும். உலகின் பொருளதாதரத்தை நிர்ணயிப்பதில் தங்கத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது வெறும் உலோகம் மட்டுமல்ல.

Vaastu Reasons Selling Gold Jewellery Attracts Unhappiness

தங்கம் இந்தியாவில் வெறும் முதலீடாக மட்டுமில்லாமல் கௌரவத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. தங்க நகைகளை விரும்பாத பெண்களே இருக்க முடியாது. பொதுவாக ஏதாவது சுபகாரியங்களின் போது தங்கத்தை அடகு வைப்பதும், விற்பதும் வழக்கமான ஒன்றாகும். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி இது உங்கள் வாழ்வில் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தங்கம் செல்வதை ஈர்க்கும்

தங்கம் செல்வதை ஈர்க்கும்

ஒவ்வொரு உலோகமும் ஒருவித ஆற்றலை ஈர்க்கக்கூடும். தங்கம் ஒரு தனித்துவமான உலோகமாகும். தங்கம் பணம், செல்வம் என அனைத்து நல்ல விஷயங்களையும் ஈர்க்கக்கூடிய ஒன்றாகும்.

தெய்வீகத்துடன் இணைந்தது

தெய்வீகத்துடன் இணைந்தது

தங்கம் தெய்வீகத்துடன் தொடர்புடையதாகும். இந்தியாவில் அனைத்து கடவுள்களும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்படுகின்றனர். தங்கம் புனிதமான மற்றும் தூய்மையான உலோகமாக கருதப்படுகிறது. அதனால்தான் அதனை கொண்டு கடவுளை அலங்கரிக்கின்றனர்.

மகிழ்ச்சியுடன் தொடர்புடையது

மகிழ்ச்சியுடன் தொடர்புடையது

தங்கம் வாங்குபவர்களுக்கு சரி, விற்பவர்களுக்கும் சரி மகிழ்ச்சியை தரக்கூடிய ஒன்றாகும். தங்கத்தை இழப்பது என்பது அனைவருக்குமே துன்பத்தை வழங்கக்கூடிய ஒரு நிகழ்வாகும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களின் வெற்றிக்கு எப்பொழுதும் அவர்களின் சுயஒழுக்கம்தான் காரணமாக இருக்கும்...!

தங்கம் வலிமையை கொடுக்கிறது

தங்கம் வலிமையை கொடுக்கிறது

தங்கத்தை விற்பது என்பது உங்களிடம் இருந்து உங்களின் நம்பிக்கையை சிதைக்கும் ஒன்றாகும். உபயோப்படுத்தாவிட்டாலும் வீட்டில் தங்கம் இருப்பதே நமக்கு தைரியம் தரக்கூடிய ஒன்றாகும்.

வீட்டில் சமநிலை

வீட்டில் சமநிலை

உங்கள் வீட்டில் இருக்கும் வாஸ்து பிரச்சினைகள் சரிபண்ண தங்கத்தை பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் தங்கம் இருக்கும்போது அது உங்கள் வீட்டை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும்.

உறவுகள்

உறவுகள்

திருமணங்களில் தங்கம் பயன்படுத்தப்படுவதன் நோக்கம் அது தம்பதிகளுக்கிடையே இருக்கும் பிரியத்தை அதிகரிக்கும் என்பதுதான். தங்கத்தை விற்பது தம்பதிகளுக்கிடையே குழப்பங்களையும், விரிசல்களையும் உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

MOST READ: நீங்கள் விரும்பும் அளவிற்கு எடையை குறைக்க இந்த யோகர்ட் டயட்டை 7 நாட்கள் செய்தாலே போதும்...!

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதனால் அவை பல மருத்துவ பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் அணிவது உங்களை பல ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vaastu Reasons Selling Gold Jewellery Attracts Unhappiness

According to Vaastu Shastra selling gold attracts unhappiness.
Story first published: Monday, June 17, 2019, 17:21 [IST]
Desktop Bottom Promotion