For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூடநம்பிக்கை என்ற பெயரில் இந்தியாவில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்னென்ன தெரியுமா?

இன்றும் இந்தியாவில் எண்ணிலடங்கா மூடநம்பிக்கைகள் இருக்கிறது. அதில் சில மூடநம்பிக்கைகள் சிரிப்பு மூட்டுவது போலவும் சில மூடநம்பிக்கைகள் எரிச்சலூட்டுவது போலவும் இருக்கிறது.

|

உலகம் முழுவதும் மூடநம்பிக்கைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான மூடநம்பிக்கைகள். ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்றும் அதிக மூடநம்பிக்கைகள் இருக்கும் நாடாக இந்தியாதான் இருக்கிறது.

Unknown bizarre superstitions in India

இன்றும் இந்தியாவில் எண்ணிலடங்கா மூடநம்பிக்கைகள் இருக்கிறது. அதில் சில மூடநம்பிக்கைகள் சிரிப்பு மூட்டுவது போலவும் சில மூடநம்பிக்கைகள் எரிச்சலூட்டுவது போலவும் இருக்கிறது. அதிலும் இந்த மூடநம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இந்த பதிவில் இந்தியாவில் நிலவும் பலரும் அறியாத மூடநம்பிக்கைகள் என்னென்னெ என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர் சொல்லி அழைக்கக்கூடாது

பெயர் சொல்லி அழைக்கக்கூடாது

ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அவர்களின் பெயரை சத்தம் போட்டு அழைத்தால் அவர்களுக்கு துரதிர்ஷ்டம் வந்துவிடுமென்று கூர்கிறார்கள். இதுமட்டுமின்றி வெளியே செல்லும்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் போகிற காரியம் கெட்டுவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தியாவில் உள்ளது.

தும்மல்

தும்மல்

இந்தியாவில் மூடநம்பிக்கைகளுக்கு அளவே இல்லை. தும்மலில் கூட சகுனம் பார்ப்பார்கள். தும்மல் வரும்போது கூட இரட்டைப்படையில்தான் தும்ம வேண்டும். ஒற்றைப்படையில் தும்மினால் ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்று நினைத்து பயப்படுவார்கள்.

உடைந்த கண்ணாடி

உடைந்த கண்ணாடி

உங்கள் வீட்டில் கண்ணாடியோ அல்லது கண்ணாடியால் செய்யப்பட்டோ பொருளோ உடைந்து விட்டால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அதனை அப்படியே அல்லது அதன் பாகத்தை வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் சண்டை வரும் என்று ஒரு வினோதமான நம்பிக்கை நிலவுகிறது.

MOST READ:இந்த ராசிக்காரர்கள் ஒரே குடும்பத்தில் இருந்தால் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியே இருக்காதாம் தெரியுமா?

ஏணிக்கு கீழே நடப்பது

ஏணிக்கு கீழே நடப்பது

ஏணிக்கு கீழே நடப்பது ஆபத்தானதுதான் ஏனெனில் அது நம் தலையில் விழ வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு இந்தியாவில் கூறப்படும் மூடநம்பிக்கை யாதெனில் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணி முக்கோண வடிவத்தை தரும். இதற்கு கீழ் நடந்தால் உங்களை பேய் பிடித்து கொள்ளுமாம்.

காலையில் பார்க்கும் முகம்

காலையில் பார்க்கும் முகம்

காலையில் முதலில் பார்க்கும் முகத்தில் இருக்கும் மூடநம்பிக்கை பலரிடமும் இருக்கிறது. நாள் முழுவதுமான வேலை காலையில் பார்க்கும் முகத்தில்தான் இருக்கிறது என்று நினைத்து கொள்கிறார்கள். அன்று அவர்களுக்கு நடக்கும் நல்லது மற்றும் கெட்டதிற்கு காலையில் பார்ப்பவரின் முகத்தின் மீது எளிதாக பழிபோட்டு விடுகிறார்கள்.

மாதவிடாய் காலம்

மாதவிடாய் காலம்

இது இந்தியா முழுவதும் இருக்கும் மூடநம்பிக்கையின் உச்சம் ஆகும். அதாவது மற்ற நாட்களில் லட்சுமியாக கூறப்படும் பெண் மாதவிடாய் காலத்தில் மட்டும் அசுத்தமானவர்களாக கருதப்படுகிறார்கள். இந்த நாட்களில் சுபகாரியங்களில் பெண்கள் பங்கேறக் கூடாது. சமையலறையில் நுழையக்கூடாது, சமைக்கக்கூடாது. இந்த நாட்களில் பெண்களுக்கு ஓய்வு அவசியம் அதற்காக அவர்கள் வேலை செய்ய வேண்டாம் என்று கூறுவது நியாயம், ஆனால் அவர்கள் தீண்டினால் உணவுகள் அசுத்தமாகிவிடும் என்று கூறுவதெல்லாம் மூடத்தனத்தின் உச்சம் என்றே கூறவேண்டும்.

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்கள் இரவு நேரத்தில் தனியாக நடக்கக்கூடாது அதேபோல காலியான வீட்டுக்குள் நுழையக்கூடாது. அவ்வாறு செய்தால் பெண்களை பேய் பிடித்து கொள்ளும் என்ற மூடநம்பிக்கை உள்ளது.

MOST READ:உடலுறவில் ஈடுபட்ட பிறகு ஏன் குளிக்காமல் வெளியே செல்லக்கூடாது தெரியுமா?

விதவைகள்

விதவைகள்

இந்தியாவில் நிலவும் மிகவும் மடத்தனமான மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பெண்களை நசுக்கும் நம்பிக்கைகளில் இதுவும் ஒன்றாகும், விதவை பெண்களை துரதிர்ஷ்டத்தின் உருவமாக அடையாளப்படுத்துவது என்பது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். ஆனால் பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கை இருந்து வருகிறது.

இரவில் விசிலடிப்பது

இரவில் விசிலடிப்பது

பாம்பை கண்டால் பயமா? அப்படியெனில் இரவில் விசில் அடிக்கக்கூடாது, ஏனெனில் பாம்பு அந்த சத்தத்தை கேட்டு உங்கள் வீட்டுக்கு வந்து விடும். இதுவும் இன்றும் இருக்கும் மூடநம்பிக்கை ஆனால் பாம்புக்கு காது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

வீட்டிற்குள் குடை விரிப்பது

வீட்டிற்குள் குடை விரிப்பது

குடை உங்களை பலவற்றில் இருந்து பாதுகாக்கும் ஒன்றாகும். அதனை வீட்டிற்குள் விரிப்பது உங்களை பாதுகாக்கும் கடவுளை அவமதிக்கும் செயலாகும். எனவே வீட்டிற்க்குள் குடையை விரிக்க கூடாது. சிரிக்காதீர்கள் இது பரவலாக இன்றும் இருக்கும் நம்பிக்கையாகும்.

MOST READ:கஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?

வீட்டை கூட்டுவது

வீட்டை கூட்டுவது

மாலை நேரத்தில் வீட்டை கூட்டும் பழக்கம் எந்த வீட்டிலும் இருக்காது, ஏனெனில் அவ்வாறு செய்தால் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி போய்விடுமாம். உண்மையில் மினசாரம் இல்லாத காலகட்டத்தில் சூரியன் மறைந்த பிறகு வீட்டை கூட்டும்போது விலைமதிப்பான பொருள் கீழ கிடந்தால் அத்தனையும் சேர்த்து கூட்டித்தள்ளிவிடுவார்கள் என்பதற்காக இந்த நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்பொழுது அதனை தொடர்வது வேடிக்கையானது.

ராகு - கேது

ராகு - கேது

நல்ல காரியத்திற்கு செல்வதற்கு முன் ஜோதிடத்தை பார்ப்பது இன்றும் இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். ஏனெனில் ராகு மற்றும் கேது என்னும் இரண்டு தீய கிரகங்கள் உங்களின் காரியங்களை கெடுக்க காத்து கொண்டிருப்பார்கள். இந்து காலண்டரின் படி நல்ல நேரத்தை பார்த்து அதன் பின்னரே வெளியே செல்லவோ அல்லது நல்ல காரியத்தை தொடங்கவோ வேண்டும் என்னும் நம்பிக்கை இன்றும் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown bizarre superstitions in India

From the moment we are born to the time when we die, superstitions tag along us like shadows.
Desktop Bottom Promotion