For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த குழந்தைகளுக்கு இவங்க ரெண்டுபேரும் தான் அப்பா அம்மாவாம்... ரெண்டுபேரும் பால் கொடுக்கலாமா?

தன்னுடைய தோழிக்கு பிரசவமாகி, அந்த குழந்தைக்கு பாலூட்டும் மற்றொரு பெண்ணைப் பற்றிய சுவாரஸ்ய கதையைப் பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

|

கருத்தரித்தல், குழந்தைப் பேறு இவை பெரும் சவாலான விஷயம். ஒருபாலின பெற்றோர் என்றால் குழந்தைப் பேறு எவ்வளவு சிக்கலானது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

Same-Sex Parents

ஒரு பாலின இணையில் கருத்தரித்து பெற்றெடுக்காத தாயும், பால் சுரப்பதற்கான தூண்டுதல் சிகிச்சை மூலம் குழந்தைக்கு பாலூட்டும் செய்தியும் புகைப்படங்களும் வைரலாக பரவி வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரண்டாண்டு போராட்டம்

இரண்டாண்டு போராட்டம்

ஜாக்லின் மற்றும் கெல்லிஃபெய்ஃபர் இருவரும் ஒருபாலின தம்பதியர். இருவரும் 2016 ஜனவரி முதல் குழந்தைப் பேற்றுக்காக முயற்சி செய்து வந்தனர். இரண்டாண்டு காலத்திற்கு மேலாக கணக்கற்ற சிகிச்சைகளுக்கு ஏறத்தாழ 21,000 டாலர் செலவு செய்துள்ளனர். தம்பதியரின் சினைப்பையிலிருந்து 58 கருமுட்டைகள் எடுக்கப்பட்டு 20 கருவூட்டல் முயற்சிகள் செய்யப்பட்டன. அவர்களுள் கெல்லி ஃபெய்ஃபர், மே மாதம் ஜாக்சன், எல்லா என்ற இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

MOST READ: கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார்? அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு?

பெயர் தெரியாத தந்தை

பெயர் தெரியாத தந்தை

ஒரு கருத்தரித்தல் மூலம் பிறந்ததினால் குழந்தைகள் இரட்டையர்தாம். பெயர் அறியப்படாத கொடையாளர் ஒருவர் அளித்த விந்தணுவிலிருந்து பிறந்ததினால், அவர்தாம் இக்குழந்தைகளின் தந்தை. ஆனால், கருமுட்டை வெவ்வேறு பெண்களிடமிருந்து எடுக்கப்பட்டபடியினால், இரட்டையரின் உயிரியல் ரீதியான தாய் வேறுவேறானவர்கள். கருவூட்டப்பட்ட இந்த சினைமுட்டைகள் கெல்லியின் கருப்பையினுள் வைக்கப்பட்டன.

ஏற்கனவே தாய்மையடைந்தவர்

ஏற்கனவே தாய்மையடைந்தவர்

தம்பதியரில் மருத்துவ காரணங்களால் ஜாக்லினுக்கு கருத்தரிக்க இயலவில்லை. தான் முன்பு கொண்டிருந்த உறவின் மூலம் கெல்லி மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆகவே, இப்போதும் கெல்லியே கருத்தரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். குழந்தைகளை பிரசவித்தமையால் அவரால் பாலூட்ட முடிகிறது.

MOST READ: 5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...

பிரசவிக்காமல் பாலூட்டும் தாய்

பிரசவிக்காமல் பாலூட்டும் தாய்

குழந்தையை பிரசவிக்காத பெண்களும் ஹார்மோன் சிகிச்சை அல்லது உடலில் பால் சுரக்கும் வரைக்கும் தூண்டுதல் சிகிச்சை பெறுவதன் மூலம் தாய்ப் பாலூட்ட இயலும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி ஜாக்லின், தாய்ப்பால் தூண்டுதல் சிகிச்சை பெற்று இரட்டையர்கள் ஜாக்சன் மற்றும் எல்லாவுக்கு பாலூட்டி வருகிறார்.

கெல்லியும் ஜாக்லினும் இரட்டை குழந்தைகளுக்கு ஆசையாய் பாலூட்டும் படங்களே வைரலாய் பரவி வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Twins of Same-Sex Parents Are Able to Feed Them, Thanks to Induced Lactation

Giving birth can be quite complicated and conceiving can be a huge task, especially when you are a same-sex couple. This unique case of a same-sex couple breastfeeding their newborns together has gone viral after the mum who did not carry the twins had taken up 'induced lactation' to produce milk. This has helped the couple to feed the babies together.
Desktop Bottom Promotion