Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும்
இணையத்தில் கெத்து காட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் மீம்ஸ்கள்... பார்த்து விசில் அடிங்க...
இணைய தளங்களில் மிக வைரலாக டிரெண்டாகிக் கொண்டிருக்கிற சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றிய ஐபிஎல் மீம்களை இங்கே உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறோம். பார்த்து மகிழுங்கள். அது பற்றிய விரிவான தொகுப்பு தான் இது.
தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் சூடுபிடித்து போய்க் கொண்டிருக்கிற வேளையில் நாடு முழுவதும் ஐபிஎல் பீவரும் சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கிறது. தேர்தலில் ஒருபக்கம் தத்துவ மழையாகக் பொலிந்து கொண்டிருக்கிற இதே நேரத்தில் ஐபிஎல் விளையாட்டில் அனைத்து அணிகளும் ரன் மழை பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் பட்டையைக் கிளப்பும் மீம்ஸ்கள் தான் இப்போது இணையத்தில் செம டிரெண்டிங். அதனுடைய தொகுப்பு தான் இந்த கட்டுரையாக அமைந்திருக்கிறது.

மீம் 1
இந்த முதல் படம் நம்முடைய யுவராஜ் சிங்குக்கும் தோனிக்கும் இடையில் நடக்கும் உரையாடலாக இருக்கிறது. யுவராஜ் சிங் தான் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் உங்களால் வெற்றி பெற முடியாது என்று சவால் விடுவதாகவும் உங்களை எதிர்த்து ஜெயிக்கிறது தான் எங்களோட வேலையே என்று நம்ம தல தோனி சொல்வதாக அமைந்திருக்கிறது.

மீம் 2
இந்த படத்தில் ராஜஸ்தான் ராயல் அணிக்கான கேப்டன் இடத்தில் வடிவேலுவின் நாய் சேகர் படமும் அதை எதிர்த்து சவால் விடுபவராக நம்முடைய தோனியும் இருப்பது போல் இருக்கிறது.

மீம் 3
அனுஷ்கா ஷர்மாவை பார்த்து சைட் அடிக்காத இளைஞர்கள் யாராவது இருக்க முடியுமா? ஆனால் இந்த படத்தில் பாவம் அனுஷ்காவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்கக் கூடாது தான். அது கோலி ஆர்சிபி அணியில இருக்கிறது தான் காரணம்.

மீம் 4
இதுல நம்ம தல தோனிக்காக தல அஜித் கெட்டப் பொருத்தப்பட்டிருக்கிறது. விஸ்வாசம் படத்தில் வரும் ஒரு காட்சி இது. மற்ற எல்லா ஐபிஎல் அணிகளும் இந்த முறை நாங்கள் தான் கப் ஜெயிப்போம் என்று சொல்வது போன்று ஒரு காட்சியும் அதில் அஜித் விஸ்வாசம் படத்தில் இந்தாரு... என்று வெறித்தனத்தோடு பேசும் காட்சி தான் இது.

மீம் 5
போக்கிரி படத்தில் வரும் பாடி சோடா தான் இந்த மீம். இது ஆர்சிபிக்காக வடிவமைக்கப்பட்டது. பாடி சோடா போலவே ஆர்சிபியும் பில்டப் பண்ணுவது போலவும் அதனுடைய ரசிகர்கள் பத்து வருஷமா இப்படி தான் பில்டப் பண்றீங்க என்று கேள்வி கேட்பது போலவும் இருக்கிறது.

மீம் 6
இந்த மீம் மும்பை இந்தியன்ஸ் அணியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் இணைத்து உருவாக்கப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி விஜய் சேதுபதின்னா சென்னை சூப்பர் கிங்ஸ் தல அஜித் என்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மீம் 7
இதற்கு முந்தைய மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்துவிடுமோ என்று கலக்கத்தில் இருந்த போது, தோனியை எல்லோரும் கிண்டல் செய்தனர். இறுதியில் தோனி ஒரு காட்டு காட்ட பயம் கொண்ட தோனி ஹேட்டர்ஸ் எல்லாம் கலைந்து விட்டதை தான் கைப்புள்ள கெட்டப் மீம்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீம் 8
இதற்கு முந்தைய மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்துவிடுமோ என்று கலக்கத்தில் இருந்த போது, தோனியை எல்லோரும் கிண்டல் செய்தனர். இறுதியில் தோனி ஒரு காட்டு காட்ட ஒட்டு மொத்த மைதானமும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்தது பற்றியது தான் இந்த மீம்ஸ்.

மீம் 9
இதுவும் ஆர்சிபி பற்றிய கலாய் தான். ஆம். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத் அணி ஆகியவை 2 புள்ளிகளில் இருப்பதால் ஆர்சிபியாக இருக்கும் நாடோடிகள் சசிகுமார் அவர்களை ஆம்னி பஸ்ஸில் ஏற்றி புள்ளிகள் பட்டியலில் முன்னேறும்படி கூறுவதாக அமைந்திருக்கிறது.

மீம் 10
தனியொருவனில் தம்பி ராமையாவும் அரவிந்த சாமியும் பேசும் வசனம் இது. இதில் தம்பி ராமையா தான் ஆர்சிபி ரசிகர்கள். அவர்கள் கோஹ்லியிடம் ஐபிஎல்க்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். வேர்ல்டு கப் ஜெயிக்கறத பத்தி யோசினு சொல்வது போல மொக்க பண்ணியிருக்கிறார்கள்.

மீம் 11
இது .இன்றைக்கு நடக்கவிருக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே பற்றிய மீம். இதில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் லைவ் மர்டரை நேரில பார்த்திருக்கீங்களா? இன்னைக்கு பார்ப்பீங்னு சொல்வது போன்ற காட்சி அது. பார்ப்போம். யாரு மர்டர் பண்றது. யாரு மருகையா ஆவறதுனு.
இப்படி ஏராளமான ஐபிஎல் பற்றிய மீம்ஸ்கள் இணைய தளங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications