For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஊர்ல 69 நாளா சூரியன் மறையவே இல்லையாம்... என்ன ஆகப்போகுது பூமிக்கு?...

சூரியன் உதிக்காத தீவு பற்றிய சுவாரஸ்யமான விஷயத்தைத் தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்கப் போகிறோம். படித்து மகிழுங்கள்.

|

சூரியன் இன்று மறையவில்லை எப்படி இருக்கும்? நார்வே நாட்டின் வடபகுதியில் உள்ள சோமராய் தீவுவாசிகளுக்கு இது பழகிப்போன விஷயம். ஆதவன் உதயமும், மறைவும் தொடர்ந்து பல நாள்களுக்கு இல்லாமல் போகும் தீவு இது.

Norwegian Island

Image Courtesy

ஆண்டுதோறும் மே மாதம் 18ம் தேதி முதல் ஜூலை மாதம் 26ம் தேதி வரையிலான 69 நாள்கள் சோமராய் தீவில் சூரியன் மறைவதே இல்லை. அதுதான் சோமராய் தீவின் கோடைக்காலமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
துருவ இரவுகள்

துருவ இரவுகள்

ஆண்டுதோறும் மே மாதம் 18ம் தேதி முதல் ஜூலை மாதம் 26ம் தேதி வரையிலான 69 நாள்கள் சோமராய் தீவில் சூரியன் மறைவதே இல்லை. அதுதான் சோமராய் தீவின் கோடைக்காலமாகும். அதேபோன்று நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை அங்கு சூரிய உதயம் நிகழ்வதேயில்லை.

MOST READ: கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார்? அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு?

இரவிலும் விளையாட்டு

இரவிலும் விளையாட்டு

Image Courtesy

69 நாள்களுக்கு சூரியன் மறையாததினால், பகல் இரவு வேறுபாட்டை இங்குள்ள மக்கள் கருத்தில் கொள்வதில்லை. அதிகாலை 3 மணிக்குக் கூட இங்கு வீட்டுவேலைகளை சுறுசுறுப்பாக செய்து கொண்டிருப்போரை காண இயலும். அதிகாலை 3 மணிக்கு பந்து விளையாடுபவர்களும், நீச்சலடிப்பவர்களும் கூட உண்டு. வீட்டுக்கு பெயிண்ட் அடித்தல், புல்வெளியை சீரமைத்தல் என்று நேரங்காலம் இல்லாமல் வேலைகளும் விளையாட்டுகளும் நடந்து கொண்டே இருக்கும்.

 நேரமில்லா மண்டலம்

நேரமில்லா மண்டலம்

Image Courtesy

69 நாள் பகலாகவே இருந்தால் எப்போதுதான் உறங்குவது? எப்போது தூக்கம் வருகிறதோ அப்பொதெல்லாம் உறங்கிக் கொள்ளவேண்டியதுதான். அங்குள்ள மக்கள் காலங்காலமாக இப்படித்தான் வாழ்ந்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக தாங்கள் செய்து வருவதற்கு இப்போது சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அவர்கள் கோருகின்றனர். சோமராய் தீவினை 'நேரமில்லா மண்டலம்' என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திட்டு நார்வே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்து அளித்துள்ளனர்.

சோமராய் தீவில் வசித்து வரும் முந்நூறுக்கும் மேற்பட்டோர், தங்கள் கோரிக்கை வெற்றிகரமாக ஏற்கப்பட்டதும் பள்ளி மற்றும் அலுவலக நேர பணி வேளைகளும் வரையறுக்கப்படாமல் தளர்த்தப்படவேண்டும் என்று திட்டம் வகுத்து வருகின்றனர்.

MOST READ: 5 வருஷமா மண்டைக்குள் இந்த மரக்குச்சிய வெச்சிக்கிட்டு இருந்த மனுஷன்... யாருனு நீங்களே பாருங்க...

குவியும் சுற்றுலா பயணியர்

குவியும் சுற்றுலா பயணியர்

Image Courtesy

'நேரமில்லா மண்டலம்' என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட பிறகு சோமராய் தீவில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். வழக்கமாக தீவை பெருநிலப்பரப்புடன் இணைக்கும் பாலங்களில் பூட்டுகள் தொங்குவதை காண இயலும். ஆனால், நேரம் மறந்த தீவாகிய சோமராயை நிலப்பரப்புடன் இணைக்கும் பாலத்தில் கைக்கடிகாரங்கள் வரிசையாக கட்டப்பட்டுள்ளதை காண முடிகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

This Norwegian Island Will Be the World’s First Time-Free Zone

An island in Northern Norway is one such place where the sun does not set for entire 69 days! Well, this place is also known for its enduring long polar nights, when the sun doesn't rise from November to January every year.
Desktop Bottom Promotion