For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலியுகம் எப்ப பிறக்கும்னு கிருஷ்ணர் பீமனிடம் சொன்னார்? அதுக்கு இன்னும் எவ்ளோ நாள் இருக்கு?

|

மனித குலத்திற்கு ஒர் இருண்ட காலம் வரும் என்று இந்து மதம் கூறுகிறது. அந்தக் காலம் தான் கலியுகக் காலம். கலியுகம் என்றாலே அந்த யுகத்தில் பாவம், ஊழல், துன்பம் மற்றும் தீமைகள் மட்டுமே நிறைந்திருக்குமாம்.

கலியுகம் பிறக்க போவதை குறித்து கடவுள் கிருஷ்ணர் நம்மிடம் என்ன கூறுகிறார் தெரியுமா? அந்த காரணம் பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமனின் அறிவுரை

அனுமனின் அறிவுரை

அனுமான் ஒரு முறை பல்வேறு யுகங்கள் குறித்து பீமனிடம் விளக்கலானார். அதில் யுகங்களைப் பற்றி கூறுகிறார். சத்யயுகா அல்லது கிருதயுகா என்பது அழகான காலம். இந்தக் காலத்தில் மக்களிடையே எந்த மதமும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு கடவுளை வணங்கினர். அவர்கள் மோட்சம் பெற எந்த மத சடங்குகளையும் அவர்கள் செய்ய வேண்டியதில்லை.

இந்தக் கால கட்டத்தில் யாரும் பணக்காரர்களும் இல்லை யாரும் ஏழைகளும் இல்லை. எல்லார்க்கும் எல்லாம் கிடைத்தது. எனவே அனைவரும் சமம் என்று இருந்தது. இதனால் அவர்கள் பாடுபட்டு உழைக்க வேண்டியதில்லை. மக்களிடையே தீமை, வெறுப்பு, துக்கம் மற்றும் பயம் என்று எதுவும் இல்லாமல் சுத்தமான மனதுடன் காணப்பட்டனர்.

MOST READ: இந்த ராசிக்காரருக்கு இன்னைக்கு நட்பில் விரிசல் விழப்போகிறதாம்... கவனமா இருங்கள்...

பகவான் கிருஷ்ணனின் கூற்று

பகவான் கிருஷ்ணனின் கூற்று

கலியுகம் பற்றி கிருஷ்ணனின் கூற்றுப் படி இந்த யுகத்தில் உலகம் எல்லா நீதியையும் இழக்கிறது. மக்களிடையே ஊழல் மற்றும் ஒருவருக்கொருவர் தீமை செய்யும் குணம் மோலோங்கி காணப்படும். நோய்கள், துன்பங்கள் என்று மாறி மாறி அவர்களைத் தாக்கும். வேதங்கள் அதன் சாராம்சம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது. மதத்திற்காக ஒரு கூட்டம் சண்டை போடும். நிலத்திற்காக ஒரு கூட்டம் அடிதடியில் இறங்கும். பாடுபட்டு கடின உழைப்பை காட்டுபவர்களின் பேச்சு எடுபடாது. கெட்ட செயல்களைச் செய்பவர்கள் ஒய்யாரத்தில் அமர்ந்து கொண்டு மக்களை அச்சுறுத்துவார்கள்.

பாண்டவர்களின் கேள்வி

பாண்டவர்களின் கேள்வி

ஒருமுறை, அர்ஜுனா, பீமா, சஹாதேவா மற்றும் நகுலா ஆகிய நான்கு இளைய பாண்டவர்கள் கிருஷ்ணரை அணுகி சில கேள்விகளை தொடுக்கிறார்கள். கடவுள் கிருஷ்ணரே "கலியுகம் என்றால் என்ன? அதை நம்மை நெருங்கி வருவதை எப்படி காண்பது" என்று கேட்கிறார்கள்.

கடவுள் கிருஷ்ணன் "கலியுகம் பற்றிச் நான் சொல்ல வேண்டும் என்றால் நான் சொல்வதை நீங்கள் செய்தாக வேண்டும். நான் நான்கு அம்புகளை நான்கு திசைகளை நோக்கி எய்வேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் சென்று அதை மீட்டெடுத்து வர வேண்டும்" என்றார்.

முதல் அம்பு

முதல் அம்பு

முதல் அம்பு எய்ததும் அர்ஜூனன் அதன் திசையை நோக்கி புறப்பட்டான். அர்ஜூனன் வில்வித்தையில் சிறந்தவன் என்பதால் அதனை உடனேயே கண்டறிந்து விட்டார். அதைக் கண்டறிய நொடியில் அவனது காதுகளுக்கு ஒரு இனிமையான இசை கேட்டது. அந்த இசை ஒரு அழகான பறவையின் கூவல் என்பதை உணர்ந்தார். ஆனால் அந்த குயிலோ ஈவு இறக்கம் இல்லாமல் ஒரு முயலை கொத்தித் தின்று கொண்டு இருந்தது. அர்ஜூனனுக்கு ஒன்னுமே புரியாமல் அம்புடன் திரும்பினான்.

MOST READ: உடலுறவுக்குப் பின் நிறைய ஆண்கள் ஏன் தம் அடிக்கிறார்கள் தெரியுமா? இதுதான் மேட்டரு...

இரண்டாவது அம்பு

இரண்டாவது அம்பு

இரண்டாவது அம்பை தொடர்ந்து பீமன் சென்றான். அந்த அம்பு 5 கிணறுகளுக்கு நடுவே சிக்கி இருந்தது. ஒரு கிணற்றின் நடுவில் சிக்கி அதைச் சுற்றி நான்கு கிணறுகளும் தண்ணீரால் சூழ்ந்து இருந்தனர். ஆனால் நடுவில் இருந்த கிணற்றில் மட்டும் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. அம்பை எடுத்த பீமன் குழப்பத்துடன் கிருஷ்ணனிடம் வந்தார்.

மூன்றாவது அம்பு

மூன்றாவது அம்பு

மூன்றாவது அம்பு எய்ததும் நகுலன் புறப்பட்டான். அந்த அம்பு விழுந்த இடத்தில் ஒரே கூட்டம். அம்பை எடுத்த பிறகு அருகில் சென்று பார்த்தேன். அங்கே ஒரு பசு மாடு ஒரு கன்றுகுட்டியை ஈன்று நாக்கால் வருடிக் கொடுத்து கொண்டு இருந்தது. கன்றுக்குட்டி எந்தவித அழுக்கும் இல்லாமல் சுத்தமாகவே இருந்தது. இருப்பினும் தாய்ப்பசு அதை நக்குவதை விடவில்லை.

அந்தக் கன்று குட்டியை மக்கள் அங்கிருந்து விலக்க முயன்றனர். ஆனால் கன்றுக் குட்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வரும் போதும் அதை தாயிடமிருந்து விலக்க முடியவில்லை. எப்படி இந்த கன்று குட்டிக்கு அடிபட்டு இருக்கும். தாய்ப்பசுவே தன் குழந்தைக்கு காயத்தை உண்டாக்குமா என்று தன் மனதுக்குள் பல கேள்விகளுடன் திரும்பினான்.

நான்காவது அம்பு

நான்காவது அம்பு

நான்காவது அம்பு எய்யப்பட்ட உடன் சகாதேவன் விரைந்தான். அந்த அம்பு ஒரு மலைக்கு அருகில் சென்று விழுந்தது. அதை எடுக்கச் செல்லும் போதே ஒரு பெரிய கற்பாறை உருண்டோடி மரங்களை எல்லாம் நசுக்கியது. ஓடும் வழியில் இருப்பதை எல்லாம் நசுக்கியது. உருண்டோடிய அவ்வளவு பெரிய கற்பாறை ஒரு சிறிய பலவீனமான செடியால் தடுத்து நிறுத்தப்பட்டது. சகாதேவனுக்கு இது ஒரே ஆச்சர்யமாக இருந்தது.

திரும்பி வருதல்

திரும்பி வருதல்

அம்பை எடுத்துக் கொண்டு கிருஷ்ணனிடம் நால்வரும் வந்தடைந்தார்கள். தாங்கள் எடுத்து வந்த அம்புகளை கிருஷ்ணனின் பாதத்தில் வைத்து வணங்கினர். அவர்கள் ஒவ்வொருவரும் கண்ட காட்சிகளை விளக்குமாறும் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். கடவுள் கிருஷ்ணன் சிரித்த படியே கூறலானார்.

MOST READ: கிரகண சமயத்தில் கோயிலை ஏன் மூடுகிறார்கள்?... கிரகணம் கடவுளையே பாதிக்குமா?

பதில் 1

பதில் 1

அர்ஜூனா இதோ நீ கண்ட காட்சியின் விளக்கம் "கலியுகத்தில் போலி ஆசிரியர்கள், மத குருக்கள் போன்றவர்கள் தங்கள் திறமையாலும் அறிவாலும் இனிக்க இனிக்க பேசுவார்கள். ஆனால் இருப்பினும் இவர்கள் மக்களை ஏமாற்றி பிழைக்கும் கயவர்களாக இருப்பார்கள். எப்படி இனிமையான குரலில் பாடிக் கொண்டே குயில் முயலைக் கொத்தித் தின்றது போல.

பதில் 2

பதில் 2

பீமா இங்கே வா "கலியுகத்தில் செல்வந்தர்களும் ஏழைகளும் ஒரு சேரத் தான் வாழ்வார்கள். ஆனால் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரராக இருப்பார்கள். ஒரு சிறு பகுதியைக் கூட ஏழைகளுக்கு கொடுத்து உதவ மாட்டார்கள். எப்படி நிரம்பி வழியும் நான்கு கிணற்றுக்கு நடுவே வற்றிய கிணறு இருப்பது போல ஏழை மக்களின் நிலை இருக்கும்" என்றார்.

பதில் 3

பதில் 3

நகுலா நீ கண்ட காட்சி" கலியுகத்தில் பிள்ளைகளின் மீதுள்ள அதீத பாசத்தால் பெற்றோர்கள் அவர்கள் தவறு செய்தாலும் அதை கண்டிக்க தவறி விடுவார்கள். இதனால் எதிர்காலத்தில் பிள்ளைகளின் அழிவிற்கு பெற்றோர்களே காரணமாவார்கள். எப்படி கன்றுக் குட்டியை நாவால் நக்கியே காயப்படுத்திய பசுவைக் போல" என்றார்.

MOST READ: இந்த நாய் 19 பால் ரப்பரை முழுங்கிட்டு என்ன பண்ணுச்சுனு தெரியுமா? நீங்களே பாருங்க அந்த கொடுமைய

பதில் 4

பதில் 4

நகுலனை பார்த்து கிருஷ்ணர்" கலியுகத்தில் மக்கள் சான்றோர்களின் நல்ல சொற்களையும், கருத்துக்களையும் கேட்காமல் நற்குணத்திலிருந்தும் நல்லொழுக்கத்தில் இருந்தும் தவறுவார்கள். யார் பேச்சும் கேட்காமல் கட்டுக்குள் அடங்காமல் செயல்படுவார்கள். இவர்களை இறைவனால் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும். எப்படி ஒரு பெரிய கற்பாறையை ஒரு சிறு செடி தடுத்து நிறுத்தியதோ அதைப் போல என்று கூறி தன்னுடைய பதிலை முடித்தார் கிருஷ்ணர். பகவான் கிருஷ்ணர் கூறிய அருமையான விளக்கங்களிலிருந்து கலியுகம் என்பது என்ன என்பது நான்கு பாண்டவர்களுக்கும் புரிந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Kaliyuga: As Explained by Lord Krishna

Hinduism believes that humanity is in the darkest age. This period in time is known as Kaliyuga. Kaliyuga is characterized by sin, corruption, misery and evil all around.
Story first published: Wednesday, July 3, 2019, 16:10 [IST]