For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஆன்மா உங்களை பற்றி உங்களிடம் கூற விரும்பும் உண்மைகள் என்ன தெரியுமா?

நமது ஆன்மா எப்பொழுதும் நம்மை வழிநடத்தும் ஒரு ஞானச்சுடர் ஆகும், அது எப்பொழுதும் நம்முடன் தொடர்புகொள்ள முயன்று கொண்டே இருக்கும்.

|

பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிருக்குப் பின்னாலும் ஒரு காரணம் உள்ளது. ஆனால் நாம் அதனை மறந்து விட்டு நமது வாழ்க்கைக்கு தேவையில்லாத பல வேலைகளில் நமது ஆற்றலையும், நேரத்தையும் வீணடிக்கிறோம். நமது புவி வாழ்விற்கான நோக்கம் என்ன என்பதை நமது ஆன்மா நமக்கு எப்போதும் உணர்த்த முயலும், அதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

Things your soul wants you to know

நமது ஆன்மா எப்பொழுதும் நம்மை வழிநடத்தும் ஒரு ஞானச்சுடர் ஆகும், அது எப்பொழுதும் நம்முடன் தொடர்புகொள்ள முயன்று கொண்டே இருக்கும். நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும் நம் ஆன்மா நம்மிடம் ஏதோ ஒன்று சொல்ல முயலுவதின் அறிகுறிதான். இந்த பதிவில் உங்கள் ஆன்மா உங்களைப் பற்றி உங்களிடம் கூற வருவது என்னவென்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் இருப்பது எப்போதும் சரியானதுதான்

நீங்கள் இருப்பது எப்போதும் சரியானதுதான்

வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள் என்பது மாறுவதோ, வளருவதோ கிடையாது. நீங்கள் என்ன செய்தாலும் அல்லது செய்யவில்லை என்றாலும் எந்த நேரத்திலும் நீங்கள் யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். மாற்றம் என்பது நம் அனைவருக்கும் உள்ள ஒரு வாய்ப்பாகும், ஆனால் ஆன்மாவின் பார்வையில் அதற்கு மிகப்பெரிய முன்னுரிமை இல்லை.

ஆழமாக உணர வேண்டும்

ஆழமாக உணர வேண்டும்

நீங்கள் உண்மையில் உணர வேண்டும். உங்கள் கண்ணீரை கட்டுப்படுத்தாதீர்கள், இது உங்களை பலவீனமானவர்களாகவோ அல்லது மென்மையானவர்களாகவோ காட்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் உணர்ச்சிகளை முழுமையாக வெளிப்படுத்துவது உணர்வுகளின் மகத்துவத்தை புரிந்து கொள்ள உதவும். காதல், அன்பு, சோகம் என அனைத்தையும் முழுமையாக உணருங்கள். இதுதான் வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்.

கவனமாக இருங்கள்

கவனமாக இருங்கள்

மனநிறைவு என்பது தற்போதைய தருணத்தில் உங்கள் கவனத்தை மையமாகக் கொண்டது, ஆனால் இது மிகவும் எளிமையானது. குழப்பமான கால அட்டவணைகள், பல பணிகள் மற்றும் அதிக வேலை செய்யும் சமுதாயத்துடன், நிகழ்காலத்தில் நிலைத்திருப்பது பெரும்பாலும் கடினம், ஆனால் குழப்பங்களில் நாம் தொலைந்து போய்விடக்கூடாது. உங்களின் உணர்வுகள்தான் உங்களை கவனத்துடன் வைத்திருக்கும் மந்திரம் ஆகும்.

MOST READ: உங்களின் இந்த சாதாரண செயல்களால் உங்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம் தெரியுமா?

நீங்கள் அமைதியை அறிய வேண்டும் என்று ஆன்மா விரும்புகிறது

நீங்கள் அமைதியை அறிய வேண்டும் என்று ஆன்மா விரும்புகிறது

நாம் அமைதியாக இருக்கும்போது, கண்டிப்பாக நாம் அனைத்தையும் கவனிப்போம். நாம் அனைத்தையும் கேட்கவும், கவனிக்கவும் நம்மை திறந்து விடும்போது நாம் ஆன்மாவுடன் தொடர்புடைய மிகப்பெரிய தொடர்பை உணர்வோம். தியானம் செய்வது இதனை அடைவதற்கான மிகச்சிறந்த ஒரு வழியாகும். நம்மை நாமே முழுமையாக அறிந்து கொள்ள பல வழிகள் உள்ளது. அவைதான் அன்பு, இரக்கம், புத்திக்கூர்மை போன்றவை ஆகும்.

விளைவுகளை எதிர்பார்க்காதீர்கள்

விளைவுகளை எதிர்பார்க்காதீர்கள்

நாம் ஒரு வேலைக்காக கடினமாக உழைக்கும் போது கண்டிப்பாக அதற்கான பலனை எதிர்பார்ப்போம். இது இயற்கையானதுதான். ஆனால் விளைவை எதிர்பார்த்து நாம் செய்யும் வேலை அந்த வேலையின் போது கிடைக்கும் மகிழ்ச்சியை வெளியேற்றும். நம்மால் வாழ்க்கையில் எதை மாற்ற முடியும், எதை மாற்ற முடியாது என்பதற்கு இடையில் உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்வதில்தான் நமது வாழ்க்கையின் மகிழ்ச்சி உள்ளது.

தற்போதைய தருணம் விலைமதிப்பற்றது

தற்போதைய தருணம் விலைமதிப்பற்றது

தற்போதைய தருணம்தான் முக்கியமானது என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. கடந்த காலமும், எதிர்காலமும் உங்கள் மனதில் இருக்கும் நினைவுகள்தானே தவிர அவை தருணங்கள் இல்லை. பெரும்பாலான மக்கள் நிகழ்காலத்தில் முழுமையாக வாழ்வதில்லை அதற்கு காரணம் அவர்கள் எதிர்காலம் இதனை விட முக்கியமானதாக இருக்கலாம் என்று நினைப்பதால்தான். இதனாலேயே பலரும் தங்கள் நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக கழிப்பதில்லை.

MOST READ: குழந்தைகளிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களின் ஆன்மா சாதாரண ஆன்மாவாக இருக்க வாய்ப்பில்லை...!

கண்ணோட்டம் மிகவும் அழகானது

கண்ணோட்டம் மிகவும் அழகானது

பொதுவாக நாம் கவலைப்படும்போதோ அல்லது சோகமாக இருக்கும்போது வாழ்க்கையின் மீதான கண்ணோட்டத்தை நாம் இழக்கிறோம். நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் மிகப் பெரியவை, மிக முக்கியமானவை, எனவே செய்ய வேண்டும் அல்லது இறந்துவிட வேண்டும் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் இது நமது கண்ணோட்டத்தால்தான். இதனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கான நகர்வு என்று பார்த்தால் அது மிகவும் எளிமையானதாக தோன்றும்.

சுயமதிப்பை மற்றவர்கள் கூற முடியாது

சுயமதிப்பை மற்றவர்கள் கூற முடியாது

மற்றவர்களின் ஒப்புதலுக்காகவும், அங்கீகரத்திற்காகவும் நீங்கள் எப்போதும் காத்திருந்தால் உங்களால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நாம் அனைவரும் வித்தியாசமாக இருக்கிறோம், நாம் அனைவரும் வெவ்வேறு வழிகளில் விஷயங்களை உணர்கிறோம், ஆனால் உங்களின் மதிப்பு என்பது உண்மையில் நீங்கள் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. எனவே உங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் மகிழ்விக்க முயற்சிப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் சுயத்தை மகிழ்விக்கத் தொடங்குங்கள்.

உங்களுக்கு தேவையான அனைத்தும் ஏற்கனவே உங்களுக்குள் உள்ளது

உங்களுக்கு தேவையான அனைத்தும் ஏற்கனவே உங்களுக்குள் உள்ளது

உங்களுக்கு இந்த தருணத்தில் தேவையான அனைத்தும் இப்போதே உங்களுக்குள்ளே தயாராக உள்ளது. தினமும் உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அறிந்துகொள்ள குறைந்தது 5 நிமிடமாவது ஒதுக்குங்கள்.

MOST READ: டயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...!

வாழ்க்கையில் அனைத்தும் தாற்காலிகமானதுதான்

வாழ்க்கையில் அனைத்தும் தாற்காலிகமானதுதான்

ஒவ்வொரு முறையும் நீங்கள் காயப்படும்போது அது குணமடையும். இருளுக்கு பிறகு வெளிச்சம் என்ற ஒன்று இருந்தே தீரும். இதனை நீங்கள் தினமும் பார்த்து கொண்டுதான் இருக்கிறீர்கள் ஆனால் மறந்து விடுகிறீர்கள். வெளிச்சம் வருவதை மறந்து விடும் நீங்கள் இருள் வருவதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் ஆன்மா உங்களிடம் கூற விரும்பும் முக்கியமான செய்தி இதுதான் " வாழ்க்கையில் அனைத்துமே தாற்காலிகமானதுதான் ".

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things your soul wants you to know

These are the things your soul wants to tell you.
Story first published: Tuesday, July 23, 2019, 12:38 [IST]
Desktop Bottom Promotion