Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
உலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்...
நாம் வாழும் இந்த கலியுகத்தை பற்றியும் அதன் அழிவை பற்றியும் நம் வேதங்கள் பலவற்றை கூறியுள்ளது.
இந்து புராணங்களின் படி மாபெரும் இதிகாசமான மஹாபாரதத்தில் கூறப்படும் குருஷேத்திர போர்தான் திவாபர யுகத்தின் முடிவாகும். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது கலியுகமாகும்.. நாம் வாழும் இந்த கலியுகத்தை பற்றியும் அதன் அழிவை பற்றியும் நம் வேதங்கள் பலவற்றை கூறியுள்ளது. அவ்வாறு கலியுகத்தின் அழிவை பற்றி மகாராஜா பரீக்ஷித் பல தகவல்களை கூறியுள்ளார்.

குருஷேத்திர போரின் ஒன்பதாவது நாள் வரை போரில் எந்த அப்பாவியும் கொல்லப்படவில்லை. அதுதான் திவாபர யுகத்தின் இறுதி நாளாகும். அதற்குபின் போரில் நடந்த கொலைகளும், அப்பாவிகளின் மரணங்களும் நாம் நன்கு அறிந்ததே. அதுதான் கலியுகத்தின் தொடக்கமாகும். அப்போது தொடங்கிய அழிவு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. கலியுகத்தின் அழிவு எந்த இடங்களில் தொடங்கும் என்று மகாராஜா பரீக்ஷித் கூறியுள்ளார். அந்த இடங்கள் எந்தெந்த இடங்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மகாராஜா பரீக்ஷித்
அபிமன்யு மற்றும் உத்திரைக்கு மகனாக பிறந்தவர்தான் மகாராஜா பரீக்ஷித். அசுவத்தாமனின் பிரம்மாஸ்திரம் உத்திரையின் கர்ப்பத்தை தாக்கியதால் குழந்தை இறக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் பகவான் கிருஷ்ணரின் அருளாலும், சக்தியாலும் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டு பரீக்ஷித் என்று பெயர் சூட்டப்பட்டது. பாண்டவர்கள் ராஜ்ஜியம் துறந்து செல்லும்போது பரிக்ஷித்துக்கு முடிசூட்டிவிட்டு கிருபாச்சாரியாரை அவருக்கு குருவாக நியமித்து சென்றார்கள். குரு வம்சத்தில் மிஞ்சியிருந்த கடைசி வாரிசு மகாராஜா பரிக்ஷித்தான்.

கலியுகம்
பிரம்மதேவர் மொத்தம் நான்கு யுகங்களை படைத்தாக வேதங்கள் கூறுகிறது. அவை முறையே சாத்திய யுகம், தீர்த்த யுகம், திவாபர யுகம், இறுதியாக கலியுகம். ஒவ்வொரு யுகமும் பல லட்சம் ஆண்டுகளை கொண்டது. அனைத்து யுகங்களும் அழிந்த பிறகு தற்போது கலியுகமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு இருக்கிறது. கலியுகத்தின் அழிவை தன் முன்னோர்கள் மூலம் அறிந்த மகாராஜா பரீக்ஷித் தன் மரணத்திற்கு தயாரானார்.

கலியுகம் உள்ள இடங்கள்
உலகத்தின் அழிவை பற்றி பிரம்மா பரிக்ஷித்திடம் கூறிய பின் அவரிடம் மனிதகுலத்தின் அழிவை தவிர்க்கும்படி கூறினார். அதற்கு பிரம்மா " நீ இந்த ஐந்து இடங்களில் வசிப்பாய், ஆனால் உன் எல்லைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இந்த இடங்களுக்கு அவர்களாக விரும்பி வருபவர்களே அவர்களின் அழிவிற்கும் கலியுகத்தின் அழிவிற்கு காரணமாக இருப்பார்கள் " என்று கூறினார்.

மதுபானம் வழங்கும் இடம்
வேதங்களில் குறிப்பிட்டுள்ள படி மது அருந்தும் இடம் விஷத்தை வழங்கும் இடம் என்று கூறப்படுகிறது. மகாராஜா பரீக்ஷித் இந்த இடத்திலும் இருப்பார். இங்கு மனமுவந்து வருபவர்களை ஒருபோதும் தடுக்கக்கூடாது. அவர்கள்தான் இந்த கலியுகத்தின் அழிவை தொடங்கி வைப்பார்கள் என்று வேதங்கள் கூறுகிறது.

விபச்சாரம் செய்யும் இடம்
விபச்சாரம் செய்யும் இடம் ஆசைகளின் ஆயுதம் ஆகும். இந்த இடத்திற்கு வருபவர்கள் தமது ஒழுக்கத்தையும், கௌரவத்தையும் இழந்து வருபவர்கள். அவர்கள் தாங்களும் அழிந்து கலியுகத்தை அழிப்பவர்கள்.

உயிர்களை கொல்லும் இடம்
உயிர்களை கொல்லும் இடமான கறிக்கடை போன்ற இடத்திலும் கலியுகத்தின் அழிவு தொடங்கும். மனிதர்கள் தங்களின் மனிதகுல மாண்பை இழந்து அவர்களுக்குள் இருக்கும் கொடூரமான பக்கத்தை காட்டும் அப்பாவி விலங்குகளை கொல்லும் இடமான இங்கும் அழிவு தொடங்கும் என்று பிரம்மா கூறுகிறார்.

சூதாடும் இடம்
சூதாடும் இடங்கள் துரோகத்தை விதைக்கும் இடமாகும். இந்த இடத்திற்கு வருபவர்கள் அவர்களின் வாழ்வை அவர்களே சூதாட்டத்தில் வைக்கிறார்கள். எனவே அங்கு வருபவர்கள் கலியுகத்தின் அழிவை தொடங்கி வைப்பார்கள்.

தங்கம்
தங்கம் என்பது பேராசையை உண்டாக்கும் ஆயுதமாகும். பரீக்ஷித் இந்த இடங்களுக்கு வருபவர்கள் கெட்டவர்கள் ஆனால் நல்லவர்களை அழிக்கும் ஆயுதம் எது என்று பிரம்மாவிடம் கேட்டார். அதற்கு பிரம்மா பேராசைதான் ஒருவரை அழிக்கும் ஆயுதமாகும், அதற்கு தங்கம்தான் அந்த பேராசையை அதிகரித்து கலியுகத்தின் அழிவிற்கு ஆதாரமாக இருக்கும் என்று கூறினார்.



Click it and Unblock the Notifications