உங்கள் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்ட பூஜையறையில் இந்த ஒரு செயலை செய்தால் போதும்...

Subscribe to Boldsky

பழங்காலம் முதலே நமது சமூகத்தில் நமது வீட்டில் நாம் வைக்கும் பொருட்களுக்கும், அவை வைக்கப்படும் இடங்களுக்கும், நாம் செய்யும் செயல்களுக்கும் நமது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் வாஸ்து சாஸ்திரம். சொல்லப்போனால் வீடு கட்டுவதற்கு முன்பே வாஸ்துவின் படிதான் பெரும்பாலான இல்லங்களும் கட்டப்படுகிறது.

Sleeping or sitting in this part of home triggers family problems

வாஸ்துவின் படி கட்டப்பட்ட வீடுகளில் மற்ற வீடுகளை விட மகிழ்ச்சியும், அமைதியும், செல்வமும் அதிகம் இருப்பதை நாம் பார்க்கலாம். மேலும் இது குடும்ப உறவுகளையும் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் செய்யும் சிறிய தவறுகள் கூட உங்கள் குடும்பத்தின் அமைதியையும், நிதிநிலைமையும் சீர்குலைக்கும். இந்த பதிவில் நீங்கள் செய்யும் என்னென்ன தவறுகள் உங்கள் இல்லத்தின் அமைதியை கெடுக்கக்கூடும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறு 1:

தவறு 1:

வீட்டின் உத்திரத்திற்கு நேர் கீழாக குடும்பத்தில் உள்ள யாரும் தூங்கக்கூடாது, இது உங்கள் குடும்பத்தில் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும் மேலும் குடும்பத்தில் சச்சரவுகளையும் அதிகரிக்கும். ஒருவேளை அது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தால் அதன் கீழே ஒரு புல்லாங்குழலை வைத்துக்கொண்டு தூங்குவது எதிர்மறை சக்திகளை தடுக்கும்.

தவறு 2:

தவறு 2:

உங்கள் பூஜையறையில் கடவுள் சிலைகளையும், படங்களையும் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கும்படி வைக்கக்கூடாது.அவ்வாறு வைக்கப்படும்போது அது வாஸ்துவின் படி குடும்பத்திற்கு மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டாக்கும்.

தவறு 3:

தவறு 3:

பூஜையறையில் விலைமதிப்புமிக்க பொருட்களை மறைத்து வைத்திருப்பது உங்கள் வீட்டின் செல்வத்தை குறைக்கும், குறிப்பாக அதனை வடக்கு திசை பார்த்து வைப்பது பெரிய நஷ்டத்தை உண்டாக்கும்.

தவறு 4:

தவறு 4:

உங்கள் பூஜையறையில் எப்பொழுதும் நெய் விளக்கு எரியும்படி பார்த்து கொள்ளுங்கள், இது உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டும். அதேபோல காலை மற்றும் மாலை நேரத்தில் இல்லத்தில் சங்கை ஊதுவது உங்கள் வீட்டிற்கு கடவுள்களை அழைத்துவரும்.

MOST READ: கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கும் குடல்வால் அழற்சியை குணப்படுத்த இந்த எளிய பொருட்களை சாப்பிடுங்கள்

தவறு 5:

தவறு 5:

வாஸ்து தோஷம் இருந்தால் அது பெரும்பாலும் உங்கள் குடும்ப தலைவரைத்தான் பாதிக்கும். எனவே அவர்கள் எப்பொழுதும் சாத்முக ருத்திராட்சம் அணிவது அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும்.

தவறு 6:

தவறு 6:

உங்கள் வீட்டின் கதவு தெற்கு பக்கமாக இருந்தால் அது குடும்ப தலைவருக்கு ஆபத்தை உண்டாக்குவதாகும். இந்த ஆபத்தை தடுக்க வீட்டின் கதவில் கணபதியின் படத்தை தொங்கவிடுங்கள்.

தவறு 7:

தவறு 7:

சாப்பிடும் நேரத்தில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதையோ, சண்டைகளில் ஈடுபடுவதையோ தவிர்க்கவும். குறிப்பாக குடும்ப தலைவருடன் சாப்பிடும்போது இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் நிதிநிலையை சீர்குலைக்கும்.

தவறு 8:

தவறு 8:

காரணமே தெரியாமல் நீங்கள் உங்கள் வீட்டில் இருப்பவர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டாலோ, வாழக்கையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலோ, இந்த சூழ்நிலையில் உங்களுக்கு வாஸ்து தோஷமும் இல்லையென்றால் உங்கள் வீட்டின் கேட்டில் ஸ்வஸ்திக் மற்றும் ஓம் குறியீட்டை வரிந்து ஒட்டுங்கள். இதை வரைய பயன்படுத்தும் கலவை மஞ்சள், குங்குமம் மற்றும் குங்குமப்பூ கொண்டு தயாரிக்கப்பட வேண்டும்.

MOST READ: அன்று முதல் இன்று வரை- ஆண்களின் உடலில் வரலாற்று பூர்வமாக நடந்த மாற்றங்கள் என்னென்ன..?

தவறு 9:

தவறு 9:

உங்கள் வீட்டில் சிலந்தி வலை பின்ன ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். சாஸ்திரத்தின் படி சிலந்தி வலை ராகுவின் இருப்பை குறிப்பதாகும். இது எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் பிரச்சினைகளும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: vastu spiritual
    English summary

    Sleeping or sitting in this part of home triggers family problems

    These lists of mistakes that some family members end up committing, which can cost them their family’s peace and lively growth.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more