For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செம்பு மோதிரம் அணிபவரா நீங்கள்? உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது...!

காப்பர் மோதிரம் அணிவது உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை மட்டும் வழங்குவதில்லை, உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் இந்த மோதிரம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

|

மோதிரம் அணிவது என்பது நமது சமுதாயத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒவ்வொரு உலோகமும் நமக்கு ஒவ்வொரு பயனை அளிக்கக்கூடியதாகும். மோதிரம் அணிவது என்பது கௌரவத்தின் அடையாளம் என்பதை தாண்டி அது நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியதாக இருக்கிறது.

தங்கம், வெள்ளி போன்ற உலோக மோதிரங்களை அணிவதை விட காப்பர் என்றழைக்கப்படும் தாமிர மோதிரம் அணிவது உங்களுக்கு அதிக நலன்களை வழங்கும்.

Siginificance Of Wearing A Copper Ring, As Per Astrology

காப்பர் மோதிரம் அணிவது உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை மட்டும் வழங்குவதில்லை, உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் இந்த மோதிரம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இந்த மோதிரத்தை அணிவது உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகளை விரட்ட உதவும் என்று கூறப்படுகிறது. இந்த பதிவில் காப்பாற்ற மோதிரம் அணிவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உலோகங்கள்

உலோகங்கள்

உலோகங்களுக்கு குணப்படுத்தும் தன்மை இயற்கையிலேயே உள்ளது. தாமிரம், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு பின்னரே உலோகங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஒவ்வொரு உலோகத்திற்கும் ஒவ்வொரு குணப்படுத்தும் குணம் உள்ளது, ஒவ்வொன்றும் உங்களுக்கு ஒவ்வொரு வகையில் உதவும்.

தாமிரம்

தாமிரம்

அனைத்து உலோகங்களை விடவும் மிகவும் பழமைவாய்ந்த உலோகம் என்றால் அது தாமிரம்தான். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். தாமிரத்தை அணிவது மட்டுமின்றி அந்த பாத்திரத்தில் சாப்பிடுவதும் கூட உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதுடன் உங்களை தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும். இந்த காப்பர் சாஸ்திரரீதியாகவும் உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும்.

கிருமி எதிர்ப்பு

கிருமி எதிர்ப்பு

காப்பர் மோதிரம் அணிவது உங்களை கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. விரல்களில் செம்பு மோதிரம் அணிவது உங்கள் உடலில் நச்சுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதை குறைக்கும். மேலும் இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

MOST READ: இந்த 6 ராசிகளில் பிறந்த நண்பர்களே வேண்டாம்... முதுகில் குத்திவிடுவார்கள் ஜாக்கிரதை...!

வாஸ்து தோஷம்

வாஸ்து தோஷம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி செம்பு மோதிரம் அணிவது உங்கள் வீட்டின் வாஸ்துவை சிறப்பானதாக மாற்றும். இது உங்கள் வீட்டின் சூழ்நிலையை சுத்தமாக வைத்திருப்பதுடன் உங்கள் வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை சக்திகளை அதிகரிக்கவும் செய்கிறது.

சூரியனின் விளைவு

சூரியனின் விளைவு

சூரிய மண்டலத்திலேயே சூரியன்தான் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். இது உங்கள் மீது நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தும், கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தும். செம்பு மோதிரத்தை அணியும் போது அது உங்களின் தனிப்பட்ட நேர்மறை சக்தியை அதிகரிப்பதுடன் சூரியனால் ஏற்படும் கெட்ட பாதிப்புகளை தடுக்கும்.

அமைதியை ஏற்படுத்தும்

அமைதியை ஏற்படுத்தும்

இன்றைய மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கையில் கோபமும், வெறுப்பும் அதிகம் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் செம்பு மோதிரம் அணியும்போது அது நமது கோபத்தை கட்டுப்படுத்துவதுடன் உங்கள் உடலின் வெப்பநிலையையும் சமநிலையில் வைத்திருக்கும்.

MOST READ: கிருஷ்ணரின் கையிலிருக்கும் பாஞ்சன்ய சங்கிற்கு பின்னால் இருக்கும் அதிசயம் என்ன தெரியுமா?

வேலை பிரச்சினைகள்

வேலை பிரச்சினைகள்

நீங்கள் உங்கள் வேலையில் அதிக பிரச்சினைகளை உணர்ந்தாலோ அல்லது நிறைய தொந்தரவுகளையும், தடைகளையும் சந்தித்தால் நீங்கள் மோதிர விரலில் செம்பு மோதிரம் அணிவது நல்லது. இது உங்களின் வெற்றிக்கு உதவியாய் இருக்கும்.

மகாதசா

மகாதசா

உங்கள் வாழ்க்கையில் சூர்ய மகாதசா ஏற்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அனைத்துமே தவறாகத்தான் செல்லும், உங்கள் வாழ்க்கை ஒரே இடத்தில் நின்றுவிடும். செம்பு மோதிரம் அணிவது உங்கள் வாழ்க்கையில் சூர்ய மகாதசாவின் பாதிப்புகளை குறைக்கும். சூர்ய மகாதசா குறைந்து விட்டால் உங்கள் வாழ்க்கையில் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

செம்பு மோதிரம் உங்கள் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். எனவே உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தமோ அல்லது உயர் இரத்த அழுத்தமோ இருந்தால் நீங்கள் செம்பு மோதிரம் அணிவது நல்லது. மேலும் இது உடலில் வீக்கம் ஏற்படுவதை குறைக்கும்.

MOST READ: பெண்ணுக்கு பிறப்புறப்பில் மச்சம் இருந்தா பேரதிஷ்டமாம்... அப்போ ஆண்களுக்கு?

தலைவலி

தலைவலி

உங்களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால் நீங்கள் உடனடியாக செம்பு மோதிரத்தை அணிய வேண்டும். செம்பு மோதிரம் அணிவது உங்களை சூரியனால் ஏற்படும் விளைவுகளை தடுப்பதுடன் உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Significance Of Wearing A Copper Ring, As Per Astrology

Check out how wearing a copper ring benefits you, according to astrology.
Story first published: Monday, February 18, 2019, 15:01 [IST]
Desktop Bottom Promotion