Just In
- 1 hr ago
இந்திய இராணுவ தினம் குறித்து தொிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (15.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அதிக செலவு செய்ய வேண்டியிருக்குமாம்…
- 1 day ago
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அதுக்கு இத சாப்பிடுங்க போதும்...
- 1 day ago
இன்றைய ராசிப்பலன் (14.01.2021): இன்று இந்த ராசிக்காரங்க பேச்சால பெரிய சிக்கலில் சிக்குவாங்களாம்…
Don't Miss
- Sports
பந்தை எறிந்துவிட்டு.. கோபமாக முறைத்து பார்த்த ரோஹித் சர்மா.. இளம் இந்திய வீரருடன் மோதல்.. பின்னணி!
- Movies
பாய்க்குள் சுருட்டி அனுப்பப்பட்ட ஷிவானி.. சர்ப்ரைஸ் ஆன ஹவுஸ்மேட்ஸ்.. பாலாவை கண்டுக்கவே இல்லையே?
- Finance
350 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டு வரும் சென்செக்ஸ்.. டாப் 30 நிறுவனங்கள் அதிகச் சரிவு..!
- News
இந்த மண்ணையும் மாற்றுவோம்.. துக்ளக் விழாவில் எடப்பாடி குறித்து ஜேபி நட்டா சொன்ன வார்த்தை!
- Automobiles
புதிய டாடா சஃபாரி எஸ்யூவியில் இடம்பெறும் முக்கிய வசதிகள்!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருமணத்தன்று மழை வந்தால் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று தெரியுமா?
அனைவரின் வாழ்விலும் திருமணம் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஏனெனில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்கும் மிக மகிழ்ச்சியான நாட்களில் திருமண நாளும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். நம்பிக்கை, மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் நிறைந்த நாளாக திருமணம் நடக்கும் நாள் இருக்கும்.
திருமண நாள் அன்று நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் உங்கள் மனநிலையை பாதிக்கக்கூடியதாக இருக்கும். இந்நிலையில் திருமண தினத்தன்று மழை வந்தால் உங்கள் நிலை என்னவாகும். சிலர் இதனை நல்ல சகுனம் என்பார்கள், சிலர் இதனை அபசகுனம் என்பார்கள். இந்த கேள்வி பல ஆண்டுகளாகவே அனைவரின் மனதிலும் இருக்கும் ஒரு கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நம்பிக்கைகள்
திருமணம் குறித்து நமது சமூகத்தில் பல நம்பிக்கைகள் நிலவி வருகிறது. அதில் முக்கியமானது ஊறவைத்த அரிசி சாப்பிட்டால் திருமணத்தன்று மழை வரும் என்பதாகும். இதில் எந்த உண்மையில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அடுத்து மழை வருவது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள் இதுவும் உண்மையல்ல. சொல்லப்போனால் திருமண தினத்தன்று மழை வருவது நல்ல சகுனமாகும். இது கருவுறுதல் மற்றும் சுத்திகரிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது.

திருமணம்
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சம்பவமாகும். உங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்திற்கு தொடக்கமாக இருக்கும் திருமண தினத்தன்று உங்கள் எண்ணம் முழுவதும் நேர்மறையாக மட்டுமே இருக்க வேண்டும். இந்த தினத்தில் மழை வருவது உங்கள் திருமண வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.

மழை ஒரு வரமாகும்
மழை வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு வருகிறது, செடிகள் துளிர்க்கவும், வளரவும் காரணமாய் அமைகிறது. எனவே கடவுளின் ஆசீர்வாதமாகவும், அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. திருமண தினத்தன்று மழை வருவது உங்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதமாகும்.
MOST READ: உங்கள் முன்ஜென்ம மரணம் எப்படி நடந்தது என்பதை இந்த அடையாளங்களை வைத்தே தெரிஞ்சிக்கலாம்...

குறியீடுகள்
உங்களின் முக்கிய தினத்தன்று மழை வருவது அதிர்ஷ்டமென கூற மேலும் பல காரணங்கள் உள்ளது. மழை என்பது ஆசீர்வாதம், சுத்தம், ஒற்றுமை மற்றும் புதிய நாளின் அடையாளமாக இருக்கிறது. சில கலாச்சாரங்களில் இது கர்ப்பத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்த நேர்மறை காரணங்கள் காரணமாக திருமணத்தன்று மழை வருவது நல்ல சகுனமாக கருதப்படுகிறது.

செழிப்பு
ஆசீர்வாதம் என்பது பொருளையும் சேர்த்துதான் குறிக்கிறது. இது மனரீதியாகவும் சரி உடல்ரீதியாகவும் சரி மகிழ்ச்சியை வழங்கும் அறிகுறி ஆகும். எனவே திருமணத்தன்று மழை வருவது உங்கள் அதிர்ஷ்டம்தான். அப்படி திருமணத்தன்று மழை வந்தால் நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை எதிர்பார்க்கலாம்.

புத்துணர்ச்சி
மழை என்பது புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாகும். மழை பெய்து முடிந்த பிறகு அந்த இடம் எவ்வளவு சுத்தமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்குமென்று நாம் அறிவோம். மழைக்கு பிறகு எந்தவொரு செயலையும் புதிதாக தொடங்கலாம், திருமணத்தன்று மழை வருவது உங்கள் வாழ்வின் புதுத்தொடக்கத்தின் அடையாளம் ஆகும்.

குழந்தைகள்
மழை என்பது கருவுறுதலின் அடையாளமாகவும் இருக்கிறது. தண்ணீர் செடிகளை வளர செய்கிறது. திருமணமாகும் அனைவருமே தங்கள் திருமண வாழ்க்கை குழந்தைகளால் முழுமை பெறவேண்டும் என்று நினைப்பார்கள். சில கலாச்சாரங்களில் திருமணத்தன்று மழை வருவது அந்த தம்பதிகள் நிறைய குழந்தைகளை பெறப்போவதன் அறிகுறி என்று கூறுகிறார்கள். குழந்தைகள்தானே வாழ்க்கையின் ஆசீர்வாதங்கள்.

ஒற்றுமை
திருமணத்தன்று மழை வந்தால் அந்த தம்பதிகள் பிரியாமல் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. தம்பதிகள் பிரியாமல் இருப்பதற்காக போடப்படுவதுதான் முடிச்சு ஆகும். ஈரமாக இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது என்பது காய்ந்திருக்கும் முடிச்சை அவிழ்ப்பதை விட மிகவும் கடினமானதாகும். இது உணர்த்தவுது என்னவெனில் திருமண தினத்தன்று மழை வந்தால் அவர்களுக்கு இடையே இருக்கும் உறவை பிரிக்க முடியாது என்பதாகும்.