For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதன் கிரகத்தோட கெட்ட பார்வையிலிருந்து தப்பிக்கணுமா? உங்க ஜாதகப்படி என்ன பரிகாரம் செய்யணும்?புதன் கி

புதன் கிரகத்தைப் பற்றியும் அது உண்டாக்கும் பாதிப்பிலிருந்து மீள செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி இங்கு விவாதித்துள்ளோம்.

By Mahi Bala
|

ஒருவருடைய ஜாதகத்தில் சனி என்னவெல்லாம் தீமைகளைத் தரும் என்று மட்டும் கணிப்பது மிகத் தவறான விஷயம். அதாவது ஒன்பது கிரகங்களும் என்னென்ன நிலைகளில் என்ன மாதிரியான பார்வையை உங்கள் வீட்டில் செலுத்துகின்றன என்று பார்ப்பது மிக மிக அவசியம்.

parikaram

அதில் செவ்வாய், ராகு, கேது, குருவின் பார்வையைக் கணித்து அறிந்து கொள்கிற நாம் புதன் என்னும் ஒரு கிரகத்தைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் நம்முடைய ஜாதகத்தில் புதனின் பார்வை பற்றிய கணிப்பு மிக மிக அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாதகத்தில் புதன்

ஜாதகத்தில் புதன்

உங்களுடைய ஜாதகத்தில் புதனின் இடம் மிக மிக முக்கியம். அப்படி உங்களுடைய ஜாதகத்தினில் புதன் கொஞ்சம் கெட்டு இருந்தாலோ அல்லது, பலம் குறைந்து இருந்தாலோ அல்லது புதன் திசையோ அல்லது புதன் புத்தியோ நடந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், புதனுக்கு சின்ன சின்ன பரிகாரங்கள் செய்தால், போதும். அப்படி என்னென்ன பரிகாரங்கள் புதனுக்கு செய்ய வேண்டும்.

MOST READ: உங்க பிறந்த தேதியை வைத்து உங்களுக்கான முகூர்த்த நாட்களை கண்டுபிடிப்பது எப்படி?

பாசிப்பயறு பண்டங்கள்

பாசிப்பயறு பண்டங்கள்

புதன்கிழமையில் பச்சைபயிறு கொண்டு செய்த பண்டங்கள் (பாயாசம், சுண்டல்) செய்து பிறருக்கு தானம் கொடுக்கலாம், அல்லது வீட்டுக்கு வரும் உறவினருக்கு கொடுக்கலாம், தானும் சாப்பிடலாம்.

ஆடை தானம்

ஆடை தானம்

பெரும்பாலான இடங்களில் வஸ்திரங்கள் பரிகாரமாக செய்யச் சொல்வது இதற்குத் தான். வஸ்திரப் பரிகாரம் நாம் எதை வேண்டி செய்கிறோமோ அதை மிக விரைவாக நிறைவேற்றித் தரும்.

செந்நாயுருவி தாவர வழிபாடு

செந்நாயுருவி தாவர வழிபாடு

புதனுக்கு உகந்த நாள் புதன் கிழமை என்பதனால், புதன் கிழமை நாட்களில் வழிபடுவது நலம். செந்நாயுருவி மரத்தை சுற்றிலும் சுத்தம் செய்து, புதன்கிழமையில் வழிபட்டு வாருங்கள். முடிந்தவரையில், எந்த கடவுளை வணங்கும்போது, தீபம் இடுதல் நன்று. இங்கும் அப்படித்தான். அந்த மரத்தைச் சுற்றிலும் தீபம் ஏற்றி வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு செய்யுங்கள்.

காந்தள் மலர்

காந்தள் மலர்

Image Courtesy

புதன் கிழமை நாளன்று காலை ஓரை நேரத்தில் (காலை 6 மணி முதல் 7 வரை) வீட்டினுடைய பூஜை அறையில் வடகிழக்கு பகுதியில், ஒரு தீபமும் கிழக்கு முகமாக வைத்துவிட்டு, அந்த தீபத்தின் முன்பாக, ஒரு வெண் காந்தள் மலரை வைத்து புதன் கிரகத்தைப் பற்றிய நாமாவளியை 108 முறை சொல்லி வழிபட்டு வாருங்கள்.

MOST READ: புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க...

விஷ்ணு வழிபாடு

விஷ்ணு வழிபாடு

அதேபோல், புதன்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சென்று வழிபாடு நடத்த வேண்டும். இதனால் புதன் கிரகத்தினால் உண்டாகின்ற தோஷங்கள் நீங்கும். தோல் நோய்கள் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் அடியோடு விலகிப் போகும். பெருமாள் வழிபாடு கல்வியிலும் மேன்மையைத் தரும். உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் அடியோடு விலகிப் போகும். இதன்மூலம் புதன் திசை உங்களுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

parikaram for puthan according to your zodiac

we are discussing about puthan graham and what we have to do which kinds of parikaram.
Desktop Bottom Promotion