For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செய்யும் இந்த சாதாரண செயல்கள் உங்கள் மரணத்தை எவ்வளவு வலி மிகுந்ததாக மாற்றுகிறது தெரியுமா?

வாழும்போது நாம் செய்யக்கூடிய சில செயல்கள் நமக்கு வழியில்லா மரணத்தை வழங்கக்கூடும் என்று கருடபுராணம் கூறுகிறது.

|

பூமியில் பிறந்த அனைவருக்குமே நிச்சயிக்கப்பட்ட ஒன்று என்றால் அது மரணம்தான். மரணத்தை பற்றி பயப்படாத மனிதர்கள் இருக்கவே முடியாது. மரணம் எப்படி ஏற்படும், எப்போது ஏற்படும் என்பது யாருமே அறியாத ஒன்று. மரணத்தை தவிர்ப்பதோ, தள்ளிபோடுவதோ எவராலும் முடியாது. ஆனால் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையை நம்முடைய நற்செயல்களின் மூலம் நம்மால் ஓரளவிற்கு தீர்மானிக்க இயலும்.

never do these things if you want peaceful death

மரணித்த பிறகு நமக்கு சொர்க்கமா அல்லது நரகமா என்பதை வாழும்போது நாம் செய்த பாவ, புண்ணியங்களே தீர்மானிக்கிறது. அதேபோல வாழும்போது நாம் செய்யக்கூடிய சில செயல்கள் நமக்கு வழியில்லா மரணத்தை வழங்கக்கூடும் என்று கருடபுராணம் கூறுகிறது. அதன்படி வலியில்லா மரணத்திற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்க பழக்கங்கள்

தூக்க பழக்கங்கள்

தாமதமாக தூங்கி தாமதமாக எழுவது சூரியன் மற்றும் சந்திரன் இருவரையுமே அவமதிக்கும் செயல் என புராணங்கள் கூறுகிறது. இவ்வாறு செய்வது உங்கள் ஆன்மா பூமியை விட்டு பிரியும்போது மிகுந்த வலியுடன் செல்ல வழிவகுக்கும். எனவே சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரம் எழுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

இளமையை நாசமாக்குதல்

இளமையை நாசமாக்குதல்

ஒரு மனிதனின் மிகவும் முக்கியமான, இனிமையான காலகட்டம் என்றால் அது அவர்களின் இளமைப்பருவம்தான். அப்படிப்பட்ட காலத்தை தவறான பழக்கவழக்கங்களால் கெடுத்துக்கொள்வதும், பலருடன் பாலியல்ரீதியான தொடர்புகள் வைத்துக்கொள்வதும் மன்னிக்க முடியாத குற்றங்களாகும். அப்படிப்பட்டவர்கள் நிச்சயம் வலி நிறைந்த மரணத்தை பெறுவார்கள்.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம்

மது அருந்துவது ஒருவரின் உடலுக்கு மட்டும் தீங்கை விளைவிப்பதில்லை, அது ஒருவரின் ஆன்மாவையும் பாதிக்ககூடியதாகும். ஒருவர் வலியில்லா மரணத்தை பெற விரும்பினால் நிச்சயமாக மது குடிப்பதையோ அல்லது குடிக்கும் மதுவின் அளவையோ கட்டுப்படுத்தவேண்டும்.

மோசமான உணவுகள்

மோசமான உணவுகள்

மோசமான உணவுகள் உங்கள் உடலில் உள்ள சக்கரங்களை அழிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த உணவு இயற்கையாகவே உங்கள் உடலில் சூட்டை அதிகரிக்கும், கோபத்தையும் அதிகரிக்கும். எனவே அந்த வகையான உணவுகள் சாப்பிடுவதை குறைக்கவும்.

MOST READ: கடுமையான பல் வலியையும் நொடியில் குறைக்க இந்த இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுத்தால் போதும்

நம்பிக்கையற்றவர்கள்

நம்பிக்கையற்றவர்கள்

நாத்திகராக இருப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், ஆனால் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை கிண்டல் பண்ணுவது என்பது முற்றிலும் தவறான ஒன்று. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை காயப்படுத்துபவர்கள் மிகவும் வலி நிறைந்த மரணத்தை அடைவார்கள்.

பெற்றோரை மதிப்பது

பெற்றோரை மதிப்பது

நம்மில் பலரும் பெற்றோருடன் சீரான உறவை பின்பற்றித்தான் கொண்டிருக்கிறோம், அவர்கள் மீது எந்த அளவு பாசம் இருக்கிறதோ அதேயளவு மரியாதையும் இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் கருத்துக்களுடன் பல் நேரங்களில் நீங்கள் ஒத்துப்போக மாட்டீர்கள். இருந்தாலும் அதனை கடுமையாக மறுப்பதோ, அவர்களை அவமதிப்பதோ கூடாது.

பேராசை

பேராசை

ஆசைக்கும், பேராசைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பணத்திற்கும், பொருளுக்கும் ஆசைப்படுவது தவறில்லை ஆனால் மற்றவர்களின் செல்வத்தின் மீதோ அல்லது குறுக்கு வழியில் செல்வத்தை அடைய முயற்சிப்பதோ வலி நிறைந்த மரணத்திற்கு வழிவகுக்கும். உங்கள் வாழ்க்கையில் புண்ணியத்தை பெறுவது எப்படி என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

புன்னகை

புன்னகை

புன்னகை என்பது எந்தவித பெரிய முயற்சியும் இன்றி உங்கள் வாழ்க்கையில் நல்ல கர்மாவை அதிகரிக்கும் வழியாகும். மற்றவர்களை நோக்கி சினேகத்துடன் புன்னகைப்பது மற்றவர்களின் மரியாதையையும், அன்பையும், நட்பையும் பெற்றுத்தரும்.

MOST READ: 16 வருஷமா ஏ.ஆர்.ரகுமானோடு சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடும் மற்றொரு நபர் யார் தெரியுமா?

உதவி

உதவி

உதவி செய்ய நீங்கள் உங்களை வருத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்கள் தினசரி வாழ்க்கையில் முடிந்தளவு அலுவலகத்திலும், வீட்டிலும் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். இது உங்கள் நல்ல கர்மாவை அதிகரிப்பதுடன் உங்களின் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.

நேர்மை

நேர்மை

வாழ்க்கையில் எப்பொழுதும் நேர்மையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். உங்களை கண்காணிக்க யாரும் இல்லையென்றாலும் உங்களின் செயல்களில் நேர்மை எப்பொழுதும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நல்ல கர்மாவை அதிகரிக்கும் குணங்களில் நேர்மைதான் முக்கியமான குணமாகும்.

வித்தியாசமான மனிதர்கள்

வித்தியாசமான மனிதர்கள்

உங்கள் வயதில் உள்ளவர்களை மட்டுமே எப்பொழுதும் நண்பர்களாக வைத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் வயதை குறைந்தவர்கள் மற்றும் அதிகமானவர்கள் என அனைவரிடமும் நன்றாக பழக கற்றுக்கொள்ளுங்கள். இது உங்களுக்கு வாழ்க்கைமீதான புரிதலையும், பல நல்ல பாடங்களையும் கற்றுத்தரும்.

விரும்புதல்

விரும்புதல்

உங்கள் வேலை, வாழ்க்கை, குடும்பம் என அனைத்தையும் விரும்புங்கள். உங்களுக்கு பிடித்தவர்கள், உங்களை பிடித்தவர்கள் என அனைவருக்கும் நேரம் ஒதுக்குங்கள். தேவைப்படுவபவர்க்ளுக்கு உதவி செய்யுங்கள். இது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றுவதுடன் உங்களுக்கு நல்ல கர்மாவையும் வழங்கும்.

MOST READ: தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யும் சிறிய செயல்கள் அதிர்ஷ்டத்தை உங்கள் வீடு தேடி வர செய்யும்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

never do these things if you want peaceful death

We cannot delay death, what we can do is to make it painless. Dying a peaceful death is like directly attaining Moksha and entering God's house.
Desktop Bottom Promotion