Just In
- 12 min ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 15 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- 16 hrs ago
இந்த மந்திர வார்த்தைகள் உங்கள் திருமண வாழ்க்கையை அழகாக்குவதோடு அர்த்தமுள்ளதாகவும் மாற்றும்...!
Don't Miss
- News
சைபர் தாக்குதல் பிளான்.. தெலுங்கானா மின் நிலையங்களுக்கு சீனாவின் குறி.. கடைசி நேரத்தில் முறியடிப்பு!
- Automobiles
மீண்டும் ஹிமாலயன் பைக்கிற்கு குவியும் வரவேற்பு!! அதிகரிக்கும் ராயல் என்பீல்டின் விற்பனை!
- Movies
கொரோனா லாக்டவுனுக்கு பிறகு.. தியேட்டரில் 50வது நாள் கடந்த மாஸ்டர்.. தெறிக்கும் #Master50Days
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் இவர்களையும் அனைவருக்குமே பிடிக்குமாம் தெரியுமா
அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பது என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசையாகும் . ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது அனைவராலும் முடிவதில்லை. அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்க வேண்டுமெனில் அனைவருடனும் ஒத்துப்போக கூட்டியவராக இருக்கவேண்டும் அல்லது அப்படி நடிக்கவாவது தெரிய வேண்டும்.
அனைவருக்கும் பிடித்தவராக இருப்பது சிலருக்கு கைவந்த கலையாக இருக்கும். அதற்கு அவர்களின் பிறந்த ராசியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில வசீகரமான ராசிக்காரர்கள் அனைவரையும் எளிதில் கவரக்கூடியவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்கார்களுக்கு இந்த சிறப்பு இருக்கிறது என்று பார்க்கலாம்.

தனுசு
தேவையில்லாத நாடகங்களையும், மோதல்களையும் தனுசு ராசிக்காரர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். எப்பொழுதும் கூலாகவும், ஜாலியாகவும் இருக்கும் இவர்கள் மற்றவர்கள் மீது மிகவும் குறைவாகவே புகாரளிப்பார்கள். ஒரு பிரச்சினை திடீரென எழுந்தால் இவர்கள் எப்பொழுதும் அதற்கான தீர்வுடன் வருவார்கள் அல்லது அந்த பிரச்சினையை வேறு கோணத்தில் இருந்து பார்ப்பார்கள். எந்தவொரு மோசமான சூழ்நிலையிலும் இருக்கும் சாதகமான வாய்ப்பைத்தான் பார்ப்பார்கள். இவர்களின் நம்பிக்கை உணர்வும், சாகச குணமும் இவர்களை அனைவருக்கும் பிடித்தவர்களாக மாற்றும்.

துலாம்
துலாம் ராசிகாரர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு வக்கீல் போல செயல்படுவார்கள் அனைவரையும் ஆதரிப்பவராக இருப்பார்கள். அனைவரிடத்திலும் இருக்கும் நல்ல குணங்களை பார்க்கும் இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை உற்சாகப்படுத்துபவராக இருப்பார்கள். இவரை போன்றவர்கள் நம் அருகில் இருக்கும்போது நமது நம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கும். இவர்கள் எப்பொழுதும் பிரச்சினைகளை தொடங்குபவராக இருக்கமாட்டார்கள். எப்பொழுதும் மற்றவர்களுடன் ஒத்துப்போகும் இவர்கள் தங்கள் சூழ்நிலையை மகிழ்ச்சியானதாக வைத்து கொள்ள விரும்புவார்கள். தனது கோணத்தில் மட்டுமின்றி மற்றவர்களின் கோணத்திலும் சிந்திப்பதாலேயே இவர்களை அனைவருக்கும் பிடிக்கும்.

கும்பம்
இவர்களுக்கு அனைவரையும் பிடிக்கும் அதனாலாயே இவர்களை அனைவருக்கும் பிடிக்கும். அவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை பற்றி நல்லதாகவே சிந்திப்பார்கள் மேலும் தன் மனதில் படுவதை அப்படியே கூறுபவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது எப்பொழுதும் உண்மையான அக்கறையுடன் இருக்கும் இவர்கள் அவர்களின் காயங்களில் இருந்து வெளியேற்ற எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள். இவர்களின் துணையும், அக்கறையும் எப்பொழுதும் மற்றவர்களுக்கு தேவைப்படுவதாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருக்கும் காரணம் இவர்கள் அனைவரின் பேச்சையும் கவனிப்பதுதான். இவர்களின் பேச்சற்றல்தான் இவர்களின் சிறந்த பரிசாகும். அவர்கள் மற்றவர்களின் பேச்சை கேட்பது மட்டுமின்றி அதன்மீது உண்மையான அக்கறையும் செலுத்துவார்கள். ஒருவேளை இவர்களின் நண்பர்கள் இவர்களிடம் ஏதாவது பிரச்சினை என்று கூறினால் அவர்களை முழுவதும் அதிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சிப்பார்கள். இவர்களின் நேர்மையான விமர்சனங்களும், மற்றவர்களை சிரிக்க வைக்கும் குணமும் அனைவரையும் இவர்களை விரும்பவைக்கும்.

மீனம்
இவர்கள் மற்ற ராசிக்காரர்களை விட அதிகம் விரும்ப படுபவர்களாக இருப்பார்கள். அன்பு, காதல், இரக்கம் என பல நல்ல குணங்கள் நிரம்பியவர்களாக இவர்கள் இருப்பார்கள். எப்பொழதும் குழுவாக இருப்பதை விரும்பும் இவர்கள் இரண்டாவது வாய்ப்பு தர ஒருபோதும் தயங்கமாட்டார்கள். இவர்கள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாக இருப்பார்கள், இதனால் மற்றவர்கள் மீது எப்பொழுதும் இரக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறையை இவர்களின் பேச்சுக்கள், செயல்கள் என அனைத்தும் நிரூபிப்பதாக இருக்கும். அக்கறை செலுத்துபவர்கள் அருகில் இருக்கும்போது இவர்கள் அதிக மகிழ்ச்சியாய் இருப்பார்கள்.