For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்து புராணங்களில் கூறியுள்ளபடி இந்த 8 பேர் மட்டுமே சாகாவரம் பெற்றவர்கள்...!

சாகாவரம் என்பது இன்றுவரை உலகில் அனைவரும் ஆசைப்படும் ஒன்றாகும். எதிர்காலத்திலும் இதற்கான தேடலும், ஆராய்ச்சியும் குறையப்போவதில்லை.

|

இந்து மதம் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் கொண்டது. சாகாவரம் என்பது இன்றுவரை உலகில் அனைவரும் ஆசைப்படும் ஒன்றாகும். எதிர்காலத்திலும் இதற்கான தேடலும், ஆராய்ச்சியும் குறையப்போவதில்லை. ஆனால் இந்து மத புராணங்களில் சிலர் இந்த சாகாவரத்தை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Hindu mythology

பல சக்திவாய்ந்த அரக்கர்களும் சாகாவரம் பெற முயன்று தோற்றுப்போயுள்ளனர். ஆனால் உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு இந்த வரம் தானாக கிடைத்தது. சிலருக்கு இந்த வரமே சாபமாகவும் மாறியது. புராணங்களிலும், இதிகாசங்களிலும் குறிப்பிட்டுள்ளபடி மொத்தம் எட்டு பேர் இந்த சாகாவரத்தை பெற்றுள்ளார்கள். அவர்கள் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமன்

அஸ்வத்தாமனுக்கு இந்த சாகாவரம் அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. இந்த வரமே அவனுக்கு அளிக்கப்பட்ட சாபம்தான். இந்த சாபம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது. பாண்டவர்களின் ஐந்து புதல்வர்களையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் உத்திரையின் கருவில் இருந்த அபிமன்யுவின் குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்திற்காக கிருஷ்ணர் அவனிடம் இருந்த மரணத்தை பறித்து கொண்டார். வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இவ்வாறு செய்தார்.

பலி சக்கரவர்த்தி

பலி சக்கரவர்த்தி

இவரை மகாபலி என்றும் கூறுவார்கள். ம்,மூன்று உலகத்தையும் ஆண்ட இவர் இவர் அசுர குலத்தை சேர்ந்த பிரகலாதனின் பேரன் ஆவார். ஒவ்வொரு வருடமும் ஓணத்தின் போது இவர் தன் மக்களை பார்ப்பதற்காக வருவார் என்று கேரளத்தில் நம்பப்படுகிறது. இவருக்கு சாகாவரத்தை கொடுத்தது திருமால் ஆவார்.

வியாசர்

வியாசர்

மிகப்பெரிய ஞானி, முனிவர் மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை கொடுத்த வேதவியாசரும் இதில் ஒருவராவார். ஞானம் மற்றும் அறிவாற்றலின் சின்னமான இவர் பராசர முனிவரின் மகனும், வசிஷ்ட மகரிஷியின் பேரனும் ஆவார். தீதாயுகத்தின் இறுதியில் பிறந்த இவர், துவாபர யுகம் முடிந்து, கலியுகத்திலும் வாழ்வதாக கூறப்படுகிறது.

MOST READ: இந்த வகை மலர்களை வைத்து கடவுளை வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் துன்பத்தை அதிகரிக்கும் தெரியுமா?

அனுமன்

அனுமன்

இராமரின் தீவிர பக்தனாக இருந்த அனுமன் இராவணனுக்கு எதிராக இராமர் நிகழ்த்திய போரில் அவரின் புறம் பங்குக்கொண்டு தீவிரமாக சண்டையிட்டார். இவர் மகாபாரத போரிலும் அர்ஜுனின் ரதத்தில் இருந்தார். யுகங்கள் கடந்தும் இன்றும் இவர் வாழ்வதாக புராதன குறிப்புகள் கூறுகிறது, அதற்கு காரணம் இராமர் ஆஞ்சனேயருக்கு அளித்த வரமும் இட்ட கட்டளையும்தான்.

விபீஷணன்

விபீஷணன்

விபீஷணன் இராவணனின் சகோதரன் ஆவார். போர் தொடங்கும் முன்னரே விபீஷணன் இராமரிடம் சரணடைந்து விட்டார். இராமர் கையால் இராவணன் கொல்லப்பட்ட பிறகு இவர் இலங்கையின் அரசனாக முடிசூட்டப்பட்டார். இவர் சாகாவரம் வாங்கவில்லை ஆனால் மகாயுகம் முடியும் வரையான நீண்ட காலம் வாழும் வரத்தை பெற்றிருந்தார்.

கிருபாச்சாரியார்

கிருபாச்சாரியார்

இவர் சந்தனு மன்னனால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். போர்க்கலைகளையும், வேதங்களையும் கற்ற இவர் பின்னாளில் இளவரசர்களுக்கு குருவாக மாறினார். பாரத போரின் முடிவில் கௌரவர்கள் புறம் இருந்த ஒரே வீரர் இவர்தான். குரு வம்சத்தின் கடைசி வாரிசான அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்துக்கு பொற்கலைகளை கற்றுக்கொடுத்தது இவர்தான். இவரின் சகோதரியைத்தான் குரு துரோணாச்சாரியார் மணந்தார்.

பரசுராமர்

பரசுராமர்

விஷ்ணுவின் ஆறாவது அவதாரம்தான் பரசுராமர். அனைத்து போர்கலைகளுக்கும், வேதங்களுக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும் இவர்தான் முன்னோடி ஆவார். கல்கி புராணத்தில் குறிப்பிட்டுள்ளபடி உலகம் அழியும் தருணத்தில் இவர் மீண்டும் வருவார். அதன்பின் திருமாலின் இறுதி அவதாரத்திற்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து திவ்ய அஸ்திரங்களை பெற உதவி மனிதகுலத்தை காப்பாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது.

MOST READ: 30 வயதை நெருங்கும் ஆண்கள் தொப்பையை குறைக்க இந்த வழிகளை பின்பற்றினாலே போதும்...!

மார்க்கெண்டேயன்

மார்க்கெண்டேயன்

மார்க்கெண்டேயன் சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார். இவருக்கு மரணமில்லா வாழ்வை சிவபெருமானும், எமதர்மனும் வழங்கினர். மரணமில்லா வாழ்வு மட்டுமின்றி என்றும் இளமையாக இருக்கும் வரத்தையும் இவர் பெற்றுள்ளார். தன் பக்தருக்காக சிவபெருமான் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு மார்க்கெண்டேயனின் கதை உதாரணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of 8 immortals in Hindu mythology

According to Hindu Mythology there are eight immortals.
Desktop Bottom Promotion