For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமேல் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெத்துக்க முடியாதா? அரசு என்ன சொல்லுது?

|

குழந்தைபேறு. இந்த ஒற்றை சிலாக்கியத்தை சுற்றி எத்தனையோ காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று வாடகை தாய் முறை. கருத்தரித்து குழந்தையை சுமக்க இயலாத பெண்களுக்கு உதவும் மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த முறையை தற்போது சந்தேக கண்களோடு பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, வர்த்தக ரீதியான வாடகை தாய் முறையை தடை செய்யும் மசோதாவை மத்திய அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது.

India Bans Surrogacy To End The Exploitation Of Surrogate Women

வாடகை தாய்: யார் அவர்?

குழந்தை தேவைப்படும் தம்பதியருக்காக, சட்டப் பூர்வமான ஒப்பந்தத்தின் வாயிலாக, பிரசவம் வரை கருவை சுமந்து பராமரித்து உதவும் பெண் வாடகை தாய் எனப்படுகிறார். இருவகை வாடகை தாய்மார்கள் உள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பகால வாடகை தாய்:

கர்ப்பகால வாடகை தாய்:

வாடகை தாயின் கருப்பையினுள் ஐவிஎஃப் முறையில் செயற்கையாக கருவூட்டப்பட்ட கருமுட்டை வைக்கப்படும். வாடகை தாய், பேறுகாலம் வரைக்கும் அக்குழந்தையை சுமப்பார். இம்முறையில் அப்பெண்ணின் கருமுட்டை பயன்படுத்தப்படாத காரணத்தால் பிறக்கும் குழந்தைக்கும் வாடகை தாய்க்கும் உடல்ரீதியான தொடர்பு எதுவும் கிடையாது. கர்ப்பகால வாடகை தாய், பெற்றெடுத்த தாய் எனப்படுவார்.

MOST READ: காதலியோட கடைங்கிறதால காபி நிறைய குடிச்சு சர்க்கரை நோயால் பாதித்த மனிதர்... அடக்கெடுமையே!

மரபார்ந்த வாடகை தாய்:

மரபார்ந்த வாடகை தாய்:

இம்முறையில் வாடகை தாய், உடலுறவு அல்லாத மருத்துவ முறையில் குழந்தையின் தந்தையின் உயிரணுவை கொண்டு கருவூட்டப்படுவார். குழந்தையின் பெற்றோராக இருக்கப்போகும் தம்பதியருக்காக, இப்பெண் கருவை சுமந்து பெற்றெடுப்பார். சிசுவின் தந்தையின் உயிரணுவை கொண்டு வாடகை தாயின் கருமுட்டை, கருவாக மாற்றம்பெறுவதால், குழந்தையின் உயிரியல்ரீதியான தாயாகவும் அவரே விளங்குவார்.

பிரபலங்களும் வாடகை தாயாரும்

பிரபலங்களும் வாடகை தாயாரும்

கடந்த சில ஆண்டுகளாக வாடகை தாய் முறையிலான கருத்தரிப்பு முயற்சிகள் பெரிய அளவில் வெற்றியடைந்து வருகின்றன. குடும்பத்தை விரைவாக கட்டமைக்க விரும்புவோர் மத்தியில் வாடகை தாய் முறை பிரபலமடைந்துள்ளது. இந்தி படவுலகில் கரண் ஜோஹர், ஷாருக் கான், துஸ்கர் கபூர், சன்னி லியோன் ஆகியோரும் மேற்கத்திய நாடுகளில் கிம் கர்தாஸின், நிகோல் கிட்மன் உள்ளிட்டோரும் வாடகை தாய் முறையிலேயே புதிய குடும்பத்தை கட்டமைத்துள்ளனர்.

MOST READ: மலச்சிக்கல் வந்து இந்த பொண்ணுக்கு 10 வருஷமா என்ன நடந்ததுனு மறந்து போச்சாம்... அடப்பாவமே!

இந்தியாவில் தடை

இந்தியாவில் தடை

முறைப்படுத்தப்பட்ட வாடகை தாய் மசோதா 2019ன் படி, இந்தியாவில் வாடகை தாய் முறைக்கான ஒழுங்குகளை வகுக்க அரசு நினைத்துள்ளது. தேசிய மற்றும் மாநில அளவுகளில் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதற்கான அதிகாரம் பெற்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

திருமணமாகியும் கருத்தரிக்க இயலாத நிலையில் குழந்தை தேவையிலுள்ள இந்தியாவை சேர்ந்த மற்றும் வெளிநாடு வாழ் இந்திய தம்பதியருக்கும் மட்டும் வாடகை தாய் முறை அனுமதிக்கப்படும் வேளையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்டோர், ஒருபாலின தம்பதியர், இந்தியாவின் அயல்நாட்டு குடிமக்கள், ஒற்றை பெற்றோர் மற்றும் திருமண உறவின்றி இணைந்து வாழ்வோர் ஆகியோர் வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகரீதியான வாடகை தாய்க்கு தடை ஏன்?

வர்த்தகரீதியான வாடகை தாய்க்கு தடை ஏன்?

வாடகை தாய் முறையானது வர்த்தரீதியாக தவறாக பயன்படுத்தப்படுவதால் தடை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. சமுதாயத்தில் பொருளாதாரரீதியாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த பெண்கள் வாடகை தாய்மாராக தவறாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. முறையற்ற வகையில் இம்முறை பயன்படுத்தப்படுவதும், வாடகை தாய் முறையில் பிறக்கும் குழந்தைகள் கைவிடப்படலும் நடக்கிறது. கருமுட்டைகள் மற்றும் கருவூட்டலுக்கு பயன்படும் கேமிட்டுகளை இறக்குமதி செய்யும் ஏஜெண்டுகள் எண்ணிக்கையும் பெருகியது, இம்முறையில் பிறந்த குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படுதல் மற்றும் குடியுரிமை சார்ந்த பிரச்னைகள் இவற்றால் வாடகை தாய் முறை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

MOST READ: உடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்?

ஏனைய நாடுகள்

ஏனைய நாடுகள்

ஜெர்மனியிலும் பிரான்ஸிலும் வாடகை தாய் முறை பெண்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாக கருதப்படுகிறது. பிரிட்டன் உள்ளிட்ட ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு செய்யும் அன்பின் உதவியாக கருதப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் மற்றும் கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் வர்த்தகரீதியான வாடகை தாய் முறை அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

India Bans Surrogacy To End The Exploitation Of Surrogate Women

The Union Cabinet has passed the bill ending the commercial surrogacy scenario in India, allowing only ethical surrogacy to the needy infertile married Indian couples, including NRIs.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more