Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
நியூமராலஜியில் நெம்பர் 4 க்கு இருக்கிற பவர் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க...
நியூமராலஜியில் எண் 4 க்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றி தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கிறோம். அது பற்றிய தொகுப்பினை தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
எண் நான்கைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள், சமூகத் தொடர்பில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அதிக அளவில் நண்பர் குழு உள்ளவர்கள் நான்காம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்ற பிறப்பு எண்கள் கொண்டவர்களை விட நான்காம் எண்ணைப் பிறப்பு எண்ணாகக் கொண்டவர்கள் தனித்துவமான அம்சங்கள் கொண்டவராக இருப்பதாக எண்கணிதம் குறிப்பிடுகிறது.

நியூமராலஜி
உங்கள் பிறப்பு எண்ணைப் பற்றி அறிந்து கொள்ள, நீங்கள் பிறந்த நாளை ஒற்றை இலக்க எண்ணாகக் கணக்கிட வேண்டும். உதாரணதிற்கு, 25 ஜனவரி, 1984 உங்கள் பிறந்த நாள் என்றால், 2+5+1+1+9+8+4=30= 3+0=3. உங்கள் பிறப்பு எண் அல்லது அதிர்ஷ்ட எண் 3 . இனி, எண் நான்கை அதிர்ஷ்ட எண்ணாகக் கொண்டவரின் சிறப்பம்சங்களை இந்த பதிவில் காணலாம்.

பிரச்சினைகள்
சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவதை அதிகம் விரும்பும் நபராக இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகமாக இருக்கும். பொறுப்பு, பணம் போன்ற விஷயங்களில் எப்போதும் சில பிரச்சனைகள் இருக்கும்.

கடின உழைப்பாளிகள்
எண்கள் 4 பிறப்பு எண்ணாக உள்ளவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். கடின உழைப்பாளிகள். தங்கள் வேளையில் சிறந்த முடிவுகளுக்காக எந்த ஒரு சூழலையும் எதிர்கொண்டு கடின உழைப்பால் வெற்றி காண்பார்கள். பணப்புழக்கம் அதிகம் இருப்பவர்கள். அவர்கள் அணுகுமுறையில் பகுப்பாய்வு, நடைமுறை மற்றும் ஒழுக்க நெறியுடன் இருப்பதால், மற்றவர்கள் எளிதில் கவரும் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அதே சமயம், மற்றவர்களைப் பற்றி கவலை படுவதை விட அதிகமாக தன்னைப் பற்றி கவலைப்படுவார்கள். அதனால் மற்றவர்களின் பிரச்சனையில் சிக்க மாட்டார்கள்.

சிறந்த வாழ்க்கைத் துணை
இந்த பூமியில் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்கும் பண்பு எண் நான்கை பிறப்பு எண்ணாக கொண்டவர்களுக்கு உண்டு. இந்த நபர்கள் மிகவும் நம்பகமானவர்கள், விசுவாசமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள்.
அவர்கள் மற்றவர்களுக்கு வெகுவாக ஊக்கத்தைக் கொடுக்கும் நபராக விளங்குவார்கள். அவர்கள் தங்கள் தனித்தன்மையை நிரூபிப்பதற்காக எந்த ஒரு போராட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

நேர்மறைப் பண்புகள்
இந்த நபர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்த விதத்தில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து அல்லது ஒழுங்கமைப்பதில் மற்றும் நிர்வகிப்பதில் சிறந்தவர்கள். இவர்கள் நம்பகத்தன்மை உடையவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருப்பார்கள். மேலும் முடிவெடுக்கும் விதத்தில் நடைமுறை ரீதியாக தங்கள் முடிவுகளைத் தீர்மானிப்பார்கள்.

எதிர்மறைப் பண்புகள்
மிகவும் கடினமானவர்கள் மற்றும் பிடிவாத குணம் உடையவர்கள். அவர்கள் சிந்தனையில் குறுகிய மனப்பான்மைக் கொண்டவர்கள். அதே சமயம், தங்கள் உணர்ச்சிகளை மறைக்கும் திறன் கொண்டவர்கள், அல்லது தங்களுக்கு நெருக்கமானவர்களின் அன்பை புரிந்து கொள்ளும் குணம் அற்றவராக இருப்பார்கள்.

நான்காம் எண்ணுக்குரிய அதிர்ஷ்டக் கூறுகள்
அதிர்ஷ்ட நாள் - ஞாயிறு மற்றும் சனிக்கிழமை
அதிர்ஷ்ட நிறம் - தங்க நிறம்
அதிர்ஷ்ட கல் - கோமேதகம்
அதிர்ஷ்ட எண் - 31
அதிர்ஷ்ட மாதங்கள் - பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்ட்
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம்
அதிர்ஷ்ட எழுத்துக்கள் - A, D ,J, M, Q, T, மற்றும் Y
அதிர்ஷ்ட திசை - கிழக்கு



Click it and Unblock the Notifications
