Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த பிப்ரவரி மாதத்தில் அதிகம் பாதிப்பை சந்திக்கும் ராசிக்காரர் நீங்கள் தான்.!
பிப்ரவரி- காதல் மாதம் என்றே பலராலும் அறியப்படும் மாதம் இது. இந்த மாதத்தில் சிலபல சறுக்கல்கள் இருக்கும் என்றே உங்களின் இந்த மாத ராசிபலன் சொல்கிறது. பொதுவாக இந்த மாதத்தில் இதுவரை ராசிபலன் பார்க்காதவர்கள் கூட தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். காதல் செட் ஆக வேண்டும் என்கிற நம்பிக்கை ஒரு பக்கம், இருக்கிற காதல் பிரிந்து போய் விட கூடாது என்கிற திக் திக் இதய துடிப்பு ஒரு பக்கம்.

இப்படி ஏகபோக மன ஓட்டங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடி கொண்டே இருக்கும். இந்த மாதம் பலரின் தலை எழுத்தை மாற்றி அமைக்கவும் கூடும்; சிலரின் தலை எழுத்தை தலை கீழாக புரட்டியும் போட, சிறப்பான சில சம்பவங்கள் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறது. யாருக்கெல்லாம் எப்படிப்பட்ட சறுக்கல்கள் இந்த மாதத்தில் வர போகிறது என்பதை இந்த ராசிபலனில் தெரிந்து உஷாராக இருப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அருமையான மாதமாக அமையும். இவர்களுக்கு மன நிலை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் வராது. எனவே, உங்கள் காதல் சார்ந்த விஷயங்களும் சிறப்பாகவே இருக்கும். கடந்த மாதம் உங்களுக்கு ஏற்பட்ட உடல் நல கோளாறுகள் இந்த மாதத்தில் குணமாகி விடும்.

ரிஷபம்
உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. காதல் செட்டாவதற்கு முன்பு உங்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மொத்தத்தில் மன நிறைவான மாதமாக இந்த மாதம் அமையும்.

கன்னி
பலவித மன உளைச்சலால் பாதிக்கப்படும் மாதம் இது. உங்கள் ராசிப்படி இந்த மாதத்தில் சிலபல தோல்விகளும் உண்டாகும். மன அழுத்தம் அதிகரிப்பதால் ஏராளமான உடல் நல கோளாறுகளும் வரும். மிக கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

கடகம்
எக்கசக்க நன்மைகள் இந்த மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு உண்டாகும். காதலில் வெற்றி பெறுவதோடு உத்வேகமாகவும் செயல்படுவார்.
இருப்பினும் உங்களின் உடல் நிலத்தில் அதிக அக்கறை தேவை. பிப்ரவரியில் செரிமான கோளாறுகள் அதிக அளவில் உண்டாகும். அதை மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

மிதுனம்
பருவ மாற்றம் வர தொடங்கிய பின் உங்களின் வாழ்விலும் சில மாற்றங்கள் உண்டாகும். பிப்ரவரி அவ்வளவு சிறப்பான மாதமாக உங்களுக்கு இருக்காது. எதிர்ப்பு சக்தி குறைபாடு ஏற்பட்டு அடிக்கடி நோய்வாய் படுவீர்கள். மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மாதம் இது.

விருச்சிகம்
காதல் அதிகம் செய்ய வேண்டிய மாதம் இது. உங்களின் காதலை உங்களுக்கு பிடித்தரிடம் அள்ளி தூவி விடுங்கள்.
இருப்பினும் சில பல ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும். சிறுநீரக பிரச்சினைகள் இந்த மாதத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்
சிறப்பான பல சம்பவங்கள் இந்த மாதத்தில் சிம்ம ராசிகாரர்களுக்கு நடக்க உள்ளது. உடல் நலத்திலும் சரி, வாழ்க்கை பாதையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி...இப்படி எல்லா விதத்திலும் இந்த ராசிக்காரர்களுக்கு அமோக வெற்றி தான். சில நேரங்களின் ஏற்பட கூடிய மன அழுத்தத்தை மட்டும் பார்த்து கொண்டால் போதும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுவாச கோளாறுகள் இந்த மாதத்தில் உண்டாக்க வாய்ப்புகள் உள்ளது. அதிக மாசுகள் உள்ள இடத்தில் இருப்பதை தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் சிறப்பான சம்பவங்கள் அரங்கேறுமா என்பது சந்தேகமே..!

மகரம்
பிப்ரவரி மாதம் ஜனவரி மாதத்தை விட சற்று வறட்சியாக தான் இருக்கும். வேளையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற நோக்கில் உடல் நலத்தை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.
மேலும், எதிர்மறையான எண்ணங்கள், மன அழுத்தம், பயம் அதிகம் உண்டாக கூடிய மாதம் இது. ஆதலால், ஜாக்கிரதையாக செயல்படுவீர்.

கும்பம்
தன்னம்பிக்கையால் எதையுமே சாதிக்கும் மனம் கொண்டவர்களே.! இந்த மாதமும் உங்களுக்கு 'ஜே' மட்டும் தான்.
மற்ற ராசிக்காரர்களை விட நீங்கள் தான் பலவித நன்மைகளை இந்த மாதத்தில் பெறுவீர்கள். காதலில் வெற்றி கூட அடையவீர்கள். சுய முன்னேற்றத்தையும், ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்ள வேண்டிய மாதம் இது.

தனுசு
மன அழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்க கூடிய மாதம் இது. தனுசு ராசிக்காரர்களே அடிக்கடி உங்களுக்குள் உண்டாகும் மனம் சார்ந்த பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ளுங்கள். இல்லையேல் ஆரோக்கியமான சூழல் உங்களுக்கு உருவாகாது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பலவித உடல் நல கோளாறுகள் இந்த மாதத்தில் உண்டாகும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் சத்தான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
பல்வேறு பாதிப்புகள் இந்த மாதத்தில் உங்களுக்கு ஏற்பட போகிறது. எனவே, மிக உஷாராக ஒவ்வொரு வேலையையும் கையாளுங்கள்.



Click it and Unblock the Notifications