For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் நிலநடுக்கம் - சுனாமி வருமா? ஜப்பானில் ஏற்பட்ட கெட்ட சகுனம்

தொழி்ல் நுட்பத்தில் முதன்மையான நாடாக இருக்கிற ஒரு நாடு தான் சில நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றிலும் முதன்மையான நாடாக இருக்கிறது.

By Mahibala
|

தொழி்ல் நுட்பத்தில் முதன்மையான நாடாக இருக்கிற ஒரு நாடு தான் சில நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றிலும் முதன்மையான நாடாக இருக்கிறது. உழைப்பிற்கும் அதீத சுறுசுறுப்புக்கும் அடையாளம் யார் என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் ஒரே வார்த்தை ஜப்பான் என்பது தான்.

Giant fish washed up dead in Japan raise fears of earthquake or tsunami Now Earthquake In Chennai

இந்த ஜப்பான்காரனுங்க மட்டும் எப்படிப்பா இப்படியெல்லாம் பண்றாங்க என்று நம்மை ஆச்சர்யப்படுத்தும். வகையில் அவர்களுடைய செயல்பாடுகுளும் கண்டுபிடிப்புகளும் இருக்கும். குறிப்பாக கார் தொழில் நுட்பத்தில் ஜப்பானை மிஞ்சுவதற்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

சென்னையில் நிலநடுக்கம்

சென்னையில் பிப்ரவரி 12 ஆம் தேதியான இன்று காலை 7.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருக்கிறது. இது மிக லேசான நிலநடுக்கமாகவே இருந்திருக்கிறது. ஜப்பானில் தென்பட்ட சுனாமி அறிகுறிக்கான கெட்ட சகுனம் தமிழ்நாட்டில், வங்கக் கடலில் வந்திருக்கிறது. அந்த மீன் செத்ததுல ஏதோ விஷயம் இருக்கு போல. இல்லன்னா ஜப்பான்காரன் கதறுவானா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எதையும் சமாளிக்கும் திறன்

எதையும் சமாளிக்கும் திறன்

Image Courtesy

ஒரு முறை வந்த சுனாமியில் இருந்தே நம்மால் இன்னும் எழுந்திருக்க முடியாத நிலையில், எத்தனை சுனாமி மற்றும் நிலநடுக்கங்களைக் கண்டது மட்டும் இல்லாமல் விழுந்த வேகத்தில் மீண்டும் எழுந்து செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.

MOST READ: செக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்... நீங்களே படிச்சுப் பாருங்க

சோதனை காலம்

சோதனை காலம்

Image Courtesy

அவர்களுக்குத் தான் இப்போது மீண்டும் ஒரு சோக காலம் உண்டாகியிருக்கிறது. பெரிய அளவிலான சுனாமி வருமென்ற பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய காலங்காலமான நம்பிக்கை தான்.

நம்பிக்கைகள்

நம்பிக்கைகள்

Image Courtesy

பொதுவாக இந்தியாவை ஆன்மீக நாடு என்பார்கள். அதனாலே நம்பிக்கை, மூட நம்பிக்கை எல்லாம் அதிகமாக இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் நம்மை விட ஜப்பானியர்களுக்கு இதுபோன்ற ஆன்மீக சடங்குகள், சகுனங்கள் ஆகியவற்றில் நம்பிக்கை மிக அதிகம். அப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய நம்பிக்கையின் மீதுதான் இப்போது பேரிடி விழுந்திருக்கிறது.

சுனாமி அச்சம்

சுனாமி அச்சம்

Image Courtesy

ஜப்பானில் அடிக்கடி குட்டி குட்டி நிலநடுகு்கங்கள் வருவதும் அதற்கான முன்னேற்பாட்டுடன் எப்படி சமாளிப்பது என்பது தெரிந்து வைத்திருப்பதால் எளிதாக மீண்டு வந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு கெட்ட சகுனம் உண்டாகியிருக்கிறது. அந்த சகுனத்தால் எப்போது வேண்டுமானாலும் நாட்டை பெரிய அளவிலான சுனாமி தாக்கலாம் என்ற பீதியில் ஜப்பானிய மக்கள் உறைந்து போயிருக்கிறார்கள்.

MOST READ: கொஞ்சம் சாப்பிடறவங்க குண்டாவும் நிறைய சாப்பிடறவங்க ஒல்லியா இருக்கறது ஏன் தெரியுமா?

அரிய ஆழ்கடல் மீன்

அரிய ஆழ்கடல் மீன்

Image Courtesy

உலகில் மிக நீளமாக வளரக்கூடிய மீன் என்று சொன்னால் அது ஓர் என்னும் ஒருவகை ஆழ்கடல் மீன். இது கிட்டதட்ட இரண்டு மாடி கட்டடத்தின் உயரம் வரைக்கும் வளரக் கூடியது. இது ஜப்பான் கடற்கரைப் பகுதிகளில் ஆழ்கடலில் மட்டுமே இருக்கும். அவை தான் தற்போது ஜப்பானை பெரிய பீதிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

செத்து மிதக்கிறது

செத்து மிதக்கிறது

Image Courtesy

ஜப்பானின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் ஆழ்கடலில் மட்டுமே இருக்கின்ற அரிய வகை ஓர் மீன்கள் தற்போது கடற்கரைப் பகுதிகளில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருக்கின்றனவாம். ஒன்றல்ல ரெண்டல்ல. இதுவரையிலும் கிட்டதட்ட பத்து மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கெட்ட சகுனம்

கெட்ட சகுனம்

Image Courtesy

இந்த அரிய வகை ஓர் மீன்கள் ஆழ்கடலை விட்டு, கடலுக்கு வெளியே வருவது என்பது ஒரு கெட்ட சகுனமாகவே ஜப்பானியர்களிடம் இருந்து வருகிறது. இந்நிலையில் அவை செத்து மிதந்து கொண்டிருக்கின்றன. இந்த கெட்ட சகுனத்தால் ஜப்பானே ஆடிப்போயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த மீன்கள் எப்போதெல்லாம் கடலில் வெளியே வருகிறதோ அப்போதெல்லாம் பேரழிவு நடந்திருக்கிறது. அப்படித்தான் 2012 இல் அணுஉலை வெடித்தது. சுனாமி வந்ததற்கும் சில நாட்களுக்கு முன்பு இந்த மீன்கள் கடற்கரைப் பகுதிக்கு வந்திருக்கிறது.

மீன் பற்றி

மீன் பற்றி

Image Courtesy

கடலுக்கு அடியில் 3200 அடியில் தான் இருக்கும். வெளிப்புறத்தில் இதைப் பார்ப்பது மிக அரிது. கிட்டதட்ட 3 மீட்டரிலிருந்து 30 மீட்டர் நீளத்துக்கு வளரக் கூடியத் தன்மை கொண்டவையாக இருக்கிறது.

ஏன் இவ்வளவு பயம்?

ஏன் இவ்வளவு பயம்?

Image Courtesy

ஜப்பானிய மொழியில் இந்த மீனின் பெயர் ரியூகுனோ துசுகி (messager from sea god palace) என்பதாகும். அதாவது இதனுடைய பொருள் என்னவென்றால், கடலுக்கு அடியில் இருக்கும் கடல் தெய்வத்தின் தூதுவன் என்று பொருள். அதனால் தான் இந்த மீன் கரைக்கு வந்தால் மக்கள் பீதி அடைகிறார்கள்.

MOST READ: அமாவாசையன்று வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது... ஏன் தெரியுமா? தெரிஞசிக்கங்க

ஆய்வாளர்கள்

ஆய்வாளர்கள்

Image Courtesy

உலகின் பல்வேறு இடங்களில் உள்ள கடல் ஆராய்ச்சியாளர்கள் ஓர் மீன்கள் செத்து ஒதுங்குவதற்கும் சுனாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது இயற்கையாக நடக்கக் கூடியவை தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதுபற்றி அவர்கள் விளக்கும்போது, தற்போதைய காலநிலையில் ஜப்பானின் ஆழ்கடல் பகுதியில் அதிக குளிராகவும் தரைப்பகுதியில் வெயிலாகவும் இருப்பதால் இந்த காலநிலை மாற்றத்தால் தான் இந்த மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் மக்கள் தங்களுடைய நம்பிக்கையால் பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். இதுதான் அந்த நாட்டின் தலைப்புச் செய்தியாகவே இருக்கிறது.

சென்னையில்

சென்னையில்

ஜப்பான்காரர்கள் தங்களுடைய நம்பிக்கைக்குரிய மீன் செத்ததைக் கண்டு அதிர்ச்சியில் பீதியில் உறைந்ததிருந்த நிலையில் 5.1 அளவில் ரிக்டர் அளவுகோலில் சென்னையில் நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இது மிக லேசானது. எந்த பாதிப்பும் ஏற்படவில்லையென்றாலும் சில பகுதிகளில் மக்கள் கட்டட அதிர்வை உணர்ந்திருக்கிறார்கள்.

இது வங்கக் கடலில் ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்டிருக்கிற அதிர்வு தான் என்றும் இதனால் அலைகள் வேகமாக வீசக்கூடும் ஆனால் சுனாமியோ நிலநடுக்கமோ வர வாய்ப்பில்லை என்று தான் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த ஆழ்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது விசாகப்பட்டினம் கடல்பகுதியில் இருந்து சென்னை நோக்கி வந்திருக்கிறது. ராய்லசிம்மா போன்ற கடற்கரைப் பகுதிகளில் இது உணரப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் கல்கத்தா, கௌகாத்தி ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப் பட்டதாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ மக்கள் கவனமாகவோ விழிப்போடும் இருக்க வேண்டும். பதட்டப்படக் கூடாது. பதட்டத்தைக் குறைத்தாலே எந்தவித இழப்பும் ஏற்படாமல் தவிர்த்துவிட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: life
English summary

Giant fish washed up dead in Japan raise fears of earthquake or tsunami Now Earthquake In Chennai

Giant deep-sea fish have been found washed up dead along the coast of Japan.Three oarfish have been found on beaches or caught in fishing nets over the past week, bringing the total discovered this season to seven.
Desktop Bottom Promotion