Latest Updates
-
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா? -
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் தன யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
தட்டுக்கடை புதினா தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லிக்கு செமயா இருக்கும்..
கனவில் உங்களுக்கு நெருங்கியவர்கள் மரணிப்பது போல வந்தால் அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
நமது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவோ அல்லது தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலைகளின் முடிவாகவோ கூட இந்த கனவுகள் இருக்கலாம்.
கனவில் நமக்கு மிகவும் பிடித்தவர்கள் இருப்பது போல வருவது மிகவம் மோசமான அனுபவமாகும். ஆனால் மரணம் பற்றிய கனவுகள் எப்பொழுதும் மரணம் நேரப்போவதன் அறிகுறியாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

மரணம் தொடர்பான கனவுகள் நமது வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகளுடன் தொடர்புடையது. நமது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவோ அல்லது தற்போது இருக்கும் கடினமான சூழ்நிலைகளின் முடிவாகவோ கூட இந்த கனவுகள் இருக்கலாம். இந்த பதிவில் கனவில் மரணம் வருவது பற்றிய உண்மைகளை பார்க்கலாம்.

இறந்த நபர்
மரணம் பற்றிய கனவுகளின் அர்த்தம் என்பது இறந்தவர் யார் அவர் எப்படி இறந்தார் என்பதை பொறுத்தது ஆகும். நாம் கனவு காணும்போதெல்லாம், நம் கனவில் உள்ளவர்கள் நம் ஆளுமை அல்லது வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்க முனைகிறார்கள். எனவே கனவில் வருபவர்கள் எதை உணர்த்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஒருவேளை வயதானவர்கள் உங்கள் கனவில் இருந்தால் உங்களிடம் இருக்கும் பழைய பழக்கங்களை விட வேண்டும் என்று அர்த்தம் ஏனெனில் அவை அழிவை ஏற்படுத்துவதாக மாறும்.

பொதுவான மரண கனவுகள் மற்றும் அவற்றின் அர்த்தங்கள்
பெற்றோர்கள் அடிக்கடி காணும் கனவுகளில் ஒன்று குழந்தைகளின் மரணம் ஆகும். இது அவர்களின் குழந்தை ஆபத்துக்களில் இருக்கும்போதோ அல்லது வீட்டை விட்டு வெளியே செல்லும்போதோ வரும். இதன் அர்த்தம் பெற்றோர்கள் குழந்தைகளின் குழந்தை பருவத்தை நினைத்து புலம்புவார்கள் இப்போது அது முடிந்து விட்டது இனி அது வராது என்பதன் அர்த்தம்தான் இது.

பெற்றோரின் மரணம்
உங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கும்போதே அவர்கள் மரணிப்பது போல உங்களுக்கு கனவு வந்தால் அவர்களின் இழப்பை எண்ணி நீங்கள் பயப்படுகிறீர்கள் என்று அர்த்தம். அவர்கள் மிகவும் வயதானவராக இருந்தால் இது முற்றிலும் உன்மையாகும். ஒருவேளை உங்கள் பெற்றோர்கள் ஏற்கனவே இறந்திருந்தால் இது அவர்களை நீங்கள் வழியனுப்ப எடுத்துக்கொண்ட வாய்ப்பாகும்.

கணவன் அல்லது மனைவியின் மரணம்
மிகவும் நேசிப்பவர்கள் இறப்பது போல கனவு வந்தால் தங்கள் துணையிடம் அவர்கள் எதிர்பார்க்கும் குணங்களில் ஏதோ ஒரு குறை உள்ளது என்று அர்த்தம்.

குடும்ப உறுப்பினரின் மரணம்
உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் மரணித்தால் அவர்கள் விரைவில் இறக்க போகிறார்கள் என்று அர்த்தமல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது உண்மையாக இருக்காது. ஒரு குடும்ப உறுப்பினர் இறப்பது உங்களுடைய ஒரு அம்சத்தை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடும், எனவே அவர்கள் இறப்பது போல கனவு காண்பது நீங்கள் சில மாற்றங்களுக்கு உள்ளாகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

அர்த்தம்
குடும்ப உறுப்பினர் மரணிப்பது போல கனவு வருவதன் மற்றொரு அர்த்தம் அவர்கள் சில மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதாகும். அவர்கள் நீங்கள் நினைத்ததை போல இனி இருக்கமாட்டார்கள் என்று இந்த கனவு கூறுகிறது.

தாயின் மரணம்
உங்கள் தாய் மரணிப்பதை போல நீங்கள் கனவு கண்டால் உங்கள் உறவுக்குள் மாற்றம் வரப்போகிறது அல்லது அவர்கள் மீதான உங்கள் கண்ணோட்டம் மாறப்போகிறது என்று அர்த்தம். அது விரிசலாகவும் இருக்கலாம் அல்லது பிரிவாகவும் இருக்கலாம்.

நண்பரின் மரணம்
உங்கள் கனவில் உங்களின் நண்பர் இறப்பது போல கனவு கண்டால் நீங்கள் அவர்களை பார்கள் விரும்புகிறீர்கள் என்று அர்த்தம், உங்கள் நட்பில் ஏற்பட்ட பிரிவு காரணமாக நீங்கள் வருந்துகிறீர்கள் என்று அர்த்தம். அவர்களை உடனடியாக சந்தித்தால் போதும் இந்த கனவுகள் உங்களுக்கு தொல்லை தராது.



Click it and Unblock the Notifications











