For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 21 இந்திய வீரர்கள் 10,000 எதிரிகளை எதிர்த்து போரிட்டு சரித்திரம் படைத்த வீரவரலாறு தெரியுமா?

இந்தியர்களின் வீரத்திற்கு சான்றாக கூறப்படும் ஒரு முக்கியமான யுத்தம் சராகர்ஹியில் நடந்த யுத்தமாகும்.

|

இந்தியர்களின் வீரத்தை பற்றியும், போராட்ட குணத்தை பற்றியும் இந்த உலகமே நன்கு அறியும். என்னதான் நாம் அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்றோம் என்று கூறிக்கொண்டாலும் நமது இந்திய தேசிய இராணுவப்படை ஆங்கிலேயர்களை என்ன பாடுபடுத்தியது என்பது அழிக்க முடியாத வரலாறாகும்.

facts about The Battle of Saragarhi

இந்தியர்களின் வீரத்திற்கு சான்றாக கூறப்படும் ஒரு முக்கியமான யுத்தம் சராகர்ஹியில் நடந்த யுத்தமாகும். இந்த யுத்தத்தில் 21 இந்திய சீக்கியர்கள் ஒர்க்கஸாய் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 10,000 பழங்குடியினர்களை எதிர்த்து போரிட்டனர். அந்த யுத்தம் பற்றியும், அதில் நடந்த சம்பவங்கள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சராகர்ஹி யுத்தம்

சராகர்ஹி யுத்தம்

சராகர்ஹி யுத்தம் 1897 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. பிரிட்டிஷ் இந்திய சீக்கிய படைப்பிரிவின் 4 வது படைப்பிரிவை சேர்ந்த 21 சீக்கிய வீரர்கள் 10,000 வீரர்களை எதிர்த்து போரிட்டனர். எதிரிகளின் எண்ணிக்கையை கண்டு அஞசி சரணடையாமல் எதிர்த்து போரிட்டதே இவர்களை வரலாற்றில் இடம்பெற செய்தது. பிரிட்டனின் பாராளுமன்றம் இவர்களை பாராட்டி இந்திய மெரிட் விருது வழங்கி கௌரவித்தது.

டிரா பிரச்சாரம் என்றால் என்ன?

டிரா பிரச்சாரம் என்றால் என்ன?

சராகர்ஹியின் வீழ்ச்சிக்கு பிறகு, லாக்போர்ட் மற்றும் குலிஸ்தான் கொட்டைகள் பழங்குடியினரின் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளானது. அவர்களை அங்கிருந்து அனுப்புவதற்காக ஆங்கிலேயே ஜெனரல்எட்மன் தலைமையில் 34,000 வீரர்கள் கொண்ட குழு செயலில் இறங்கியது. இந்த படையில் 36 சீக்கிய வீரர்களும் இருந்தனர் அவர்கள் முக்கியமாக பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டனர். பழங்குடியினரை அப்புறப்படுத்துவதே அந்த படையின் நோக்கமாக இருந்தது.

உபயோகப்படுத்திய ஆயுதங்கள்

உபயோகப்படுத்திய ஆயுதங்கள்

சீக்கிய வீரர்கள் 10 பவுண்ட் எடையுள்ள மார்ட்டின் ஹென்றி என்னும் துப்பாக்கியை பயன்படுத்தினர். அந்த காலகட்டத்தின் மிகவும் சிறந்த மற்றும் உபயோகிக்க எளிமையான துப்பாக்கியாக அதுதான் இருந்தது.

செபோய் குர்முக் சிங்

செபோய் குர்முக் சிங்

அங்கிருந்த வீரர்களிலேயே மிகவும் இளம் வயது வீரனான செபோய் குர்முக் சிங் இறப்பதற்கு முன்னர் 20 எதிரிகளை கொண்றுவிட்டுதான் இறந்தார். படைத்தலைவரான ஹவில்தார் சிங் கூட இறப்பதற்கு முன் 20 பேரை கொன்றார். மீதமிருந்த சீக்கிய வீரர்களும் வீரம் மற்றும் தைரியத்திற்கு அடையாளமாக தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர்.

MOST READ: சனிக்கிழமையில் இந்த பொருட்களை சாப்பிடுவது சனிபகவானின் சாபத்தை உங்களுக்கு பெற்றுத்தரும் தெரியுமா?

இறுதி மூச்சு வரை போரிட்டார்கள்

இறுதி மூச்சு வரை போரிட்டார்கள்

சீக்கிய வீரர்கள் மிகவும் தைரியத்துடன் போரிட்டார்கள் குறிப்பாக அவர்களின் இறுதி மூச்சு இருக்கும் வரை சண்டையிட்டார்கள். பல எதிர்ப்படையின் வீரர்கள் இறந்த போதிலும், 10 மணி நேரம் போர் நடந்தும் 10 வீரர்கள் தொடர்ந்து போரிட்டனர்.

போரின் தாக்கம்

போரின் தாக்கம்

விக்டோரியா மகாராணி 1897 ஆம் ஆண்டு பிரிட்டன் பாராளுமன்றத்தில் " வலிமைமிக்க சீக்கிய படையை எவராலும் வெல்ல இயலாது என்று கூறுவது மிகையாகாது. 21 பேர் 10,000 பேரை எதிர்த்து போரிடுவது என்பது எங்கும் நடக்காத ஒன்று, இறுதி வீரன், இறுதிச்சுற்று வரை போரிட்டனர்" என்று கூறினார்.

சராகர்ஹி தினம்

சராகர்ஹி தினம்

சராகர்ஹி போரை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 12 ஆம் தேதி சீக்கிய இராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த போரில் இரந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் சீக்கிய படையின் அனைத்து பிரிவும் செப்டம்பர் 12 ஆம் தேதியை சராகர்ஹி தினமாக கொண்டாடுகிறார்கள் .

சீக்கிய கலாச்சாரத்தில் எப்படி நினைவுகூறப்படுகிறது?

சீக்கிய கலாச்சாரத்தில் எப்படி நினைவுகூறப்படுகிறது?

அமிர்தசரஸில் 21 சீக்கிய வீரர்களை நினைவு கூறும் வகையில் குருத்துவரா சராகர்ஹி நிறுவப்பட்டுள்ளது. இந்த குருத்துவரா பொற்கோவிலுக்கு அருகே உள்ளது. அந்த 21 சீக்கிய வீரர்களின் பெயர்களும் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.

MOST READ: துளியும் யோசிக்காமல் அடுத்தவர் மனதை காயப்படுத்த இந்த ராசிக்காரர்களால்தான் முடியும் தெரியுமா?

பெயர்கள்

பெயர்கள்

இந்த வீர செயலை செய்த சீக்கிய வீர்களின் பெயர்கள் என்னவெனில் ஹவில்தார் இஷார் சிங், நாயக் லால் சிங், லான்ஸ் நாயக் சுந்தர் சிங், லான்ஸ் நாயக் உத்தர் சிங், லான்ஸ் நாயக் சாகிப் சிங், செபோய் ஹிரா சிங், செபோய் தயா சிங், செபோய் ஜிவான் சிங், செபோய் போலா சிங், செபோய் நாராயண் சிங், செபோய் குர்முக் சிங், செபோய் ஜிவான் சிங், செபோய் தயா சிங், செபோய் ராம் சிங், செபோய் பகவான் சிங், செபோய் பூட்டா சிங், செபோய் பகவான் சிங், செபோய் ஜிவான் சிங், செபோய் நந் சிங்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Stunning Facts About The Battle of Saragarhi

These facts about The Battle of Saragarhi will leave you stunned.
Desktop Bottom Promotion