Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்ற வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் யார் யார்? ஏற்றினால் என்னாகும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிந்து கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் பணியில் எஞ்சியிருக்கின்ற வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இதுவரை அறிமுகம் இல்லாத நபர்களால் மனதில் சின்ன சின்ன வருத்தங்கள் உண்டாகும். புதிதாக மனதுக்குப் பிடித்த சில பொருள்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் பல புதிய யுக்திகளைப் பயன்படுத்தி அபிவிருத்திக்கான முயற்சியை மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகின்ற பொழுது, அவர்களுடைய மனதைப் புண்படுத்தாமல் கொஞசம் கவனமாகப் பேசுவது தேவையற்ற மன வருத்தத்தை ஏற்படுத்தும். வாகனங்களில் செல்லுகின்ற பொழுது, கொஞ்சம் விழிப்போடு இருங்கள். உங்களுடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களால் உங்களுடைய வேலையில் கொஞ்சம் காலதாமதம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்களுக்குச் செல்வாக்குகள் உயர ஆரம்பித்துவிடும். வீட்டில் உள்ள பெரியோர்களுடைய ஆலோசனைகள் உங்களுக்கு தெளிவைக் கொடுக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய மனதுக்குள் தோன்றுகின்ற புதுவித எண்ணங்களில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எந்த வேலை செய்தாலும் அதை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நீங்கள் எடுக்கும் முக்கிய முயற்சிகள் அனைத்திலும் நினைத்தபடி வெற்றி பெறுவீர்கள். முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்கள் உங்களுக்கு இருக்கின்ற மறைமுக எதிரிகளைக் களைந்துவிடுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

கடகம்
சொந்தமாகத் தொழில் புரிகின்றவர்கள் அதை மேம்படுத்துவதற்கான திட்டங்களைத் தீட்டவீர்கள். வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். அந்த சமயங்களில் முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாள வேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். தொழிலில் முக்கிய முடிவுகளை எடுக்கின்ற பொழுது கொஞ்சம் நிதானமான நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமாகவும் இருக்கும்.

சிம்மம்
உங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்கான உதவிகள் நண்பர்கள் மூலமாகக் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதின் மூலமாக மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். வியாபாரங்களில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி
பெரியோர்களுடைய முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் இரட்டிப்பாகும் வாய்ப்பு உருவாகும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களை எளிதாகக் கவர்ந்து விடுவீர்கள். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். குழந்தைகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். தொழிலில் உங்களுக்கான போட்டிகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

துலாம்
மனதுக்குள் தேவையில்லாத புதுப்புது சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்களுடன் பணிபுரிகின்ற வேலையாட்களிடம் அனுசரணையோடு கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது தான் நல்லது. வேலை செய்கின்ற இடத்தில் உங்களுக்கு ஏற்ற இறக்கங்கள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும்.

விருச்சிகம்
நீங்கள் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். பங்குச் சந்தை சம்பந்தப்பட்ட துறைகளில் தொழில் தொடர்பு வைத்திருப்பவர்கள் புதிதாக முதலீடுகள் செய்யும் போது கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். மனதில் தோன்றும் தேவையில்லாத எண்ணங்களின் மூலம் உங்களுக்கு நெருக்கமான நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். தொழில் சம்பந்தப்பட்ட போட்டிகளை சமாளிக்கும் மன தைரியம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்கள் உங்களுடைய சக ஊழியர்களிடம் இருக்கின்ற பகையை மறந்து நட்புடன் பழக ஆரம்பிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பல புதிய முயற்சிகளால் உங்களுக்கு அனுகூலமான பலனகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்காத பண வரவு உங்களுக்கு உண்டாகும். தொழில் சம்பந்தமாக உங்களுக்கு ஆதரவுகள் பெருக ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடன் பணிபுரிகின்ற சக பணியாளர்களால் உங்களுக்கு ஆதாயங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உறவினர்களின் மூலமான முன்னேற்றங்கள் உண்டாகும். உங்களுடைய மேலதிகாரிகளுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
முக்கிய உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு வேலையில் இருந்து வந்த பணிச்சுமை குறைய ஆரம்பிக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும். அடுத்தவர்களுடைய செயல்பாடுகளை விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. விளையாட்டுத் துறையில் இருக்கின்றவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்
உங்களுடைய குணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் உண்டாகும். வீடு, மனை வாங்குவதற்கான யோகங்கள் உங்களுக்குக் கூடி வரும். வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய அணுகுமுறைகளைப் பயன்படுத்துவீர்கள். அது உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கும். மனதில் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நினைத்தபடி எந்த காரியத்தையும் மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பயணங்களின் மூலமாக உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.
தெற்கு திசையை அதிர்ஷ்ட திசையாகக் கொண்ட துலாம், தனுசு மற்றும் தென்கிழக்கு திசையை அதிர்ஷ்டமாகக் கொண்ட விருச்சிகம் ஆகிய மூன்று ராசிக்காரர்களும் இன்றைக்கு சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகளும் அதிர்ஷ்டமும் தானாக உங்களைத் தேடி வரும்.



Click it and Unblock the Notifications











