Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...!
இன்று குரு உச்சம் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் யார்? உங் ராசி என்ன?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
பெரும்பாலானோருக்கும் ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது, எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது? யார் யாருக்கு சிக்கல்கள் வரப்போகிறது என்று பார்ப்போம்.

மேஷம்
நண்பர்களின் மூலமாக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உயர் அதிகாரிகளால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உண்டாகும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் ஏற்படும். வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வீட்டில் பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
வீட்டில் உள்ளவர்களிடம் கொஞசம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த முடிவு எடுத்தாலும் அதில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள். நிர்வாகத்துறையில் இருக்கின்றவர்களுக்கு உங்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். முக்கியப் பணிகளில் இருக்கின்றவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.

மிதுனம்
உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளியூருக்குப் பயணங்கள் மேற்கொள்வதன் மூலமாக உங்களுக்கு நிறைய புதிய அனுபவங்கள் உண்டாகும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். மனதுக்குள் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கடகம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உண்டாகும். வீடு மற்றும் மனைகளை விருத்தி செய்வதற்கான பணிகளில் கொஞ்சம் கால தாமதங்கள் உண்டாகும். உங்களுடைய வாடிக்கையாளர்களிடம் தொழிலில் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். கௌரவப் பதவிகளால் உங்களுடைய மதிப்பு உயர ஆரம்பிக்கும். உங்களுடைய செயல்வேகங்கள் அதிகரிக்கச் செய்யும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைய ஆரம்பிக்கும். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறைய ஆரம்பிக்கும். இதுவரையிலும் நிலுவையில் இருந்த பண வரவுகள் உங்களுடைய கைக்குக் கிடைக்கும். பொன், பொருள், சொத்து சேர்க்கைகள் உண்டாகும். வேலையில் இருந்து வந்த குழப்பமான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி
உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் கொண்டிருக்காமல் மனம் விட்டுப் பேசுவது நல்லது. வியாபாரத்தைப் பொருத்தவரையில், உங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு லாபம் அடைவீர்கள். உங்களுடைய சாதுர்யமான பேச்சுக்களால் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி முடிப்பீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு சுபிட்சம் ஏற்படும். நீங்கள் செய்கின்ற பணிகளில் உங்களுக்குத் திருப்தியான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்
தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உங்களுடைய உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்குக் கிடைக்கும். முக்கியப் பணியில் உள்ளவர்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். உங்களுடைய செயல்பாடுகளால் நீங்களே பெரும் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்புகள் உயர அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத வீண் பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களுடைய சம வயது உடையவர்கள் மூலம் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் செய்கின்ற வேலையில் பணியிட மாற்றங்கள் உண்டாகலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

தனுசு
உங்களுடைய தொழிலில் இருந்து வந்த மறைமுகமான எதிர்ப்புகள் குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய உடல்சோர்வு நீங்கி மனம் புத்துணர்ச்சி பெறும். குடும்ப விவாகரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மற்றவர்களுடைய தலையீட்டை தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி, நட்பு விரிவடையும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகளின் மூலம் உங்களுக்கு மேன்மையான சூழல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

மகரம்
நினைத்த காரியத்தை முடிப்பதற்குள் சிறுசிறு தடங்கல்கள் வந்து போகும். அதற்கான கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வாகனப் பயணங்களில் நிதானம் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதையோ வாக்குவாதம் செய்வதையோ தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உண்டாகும் போட்டிகளையும் சமாளிக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய அதிர்ஷ்டத்துக்கு உரிய எண்ணாக 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக காவியும் இருக்கும்.

கும்பம்
மனதில் நினைத்த காரியம் நீங்கள் நினைத்ததைவிட சிறப்பாக நடந்து முடியும். தொழில் போட்டியை சமாளித்து வெற்றியை நோக்கி நகர, புதிய யுக்திகளையும் அணுகுமுறைகளையும் கையாளுவீர்கள். மாணவர்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல சூழலும் வாடிக்கையாளர்களும் அமைவார்கள். வீட்டில் குழந்தைகள் எண்ணம் அறிந்து செயல்படுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சும் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் இருக்கும்.

மீனம்
குடும்ப உறுப்பினர்களுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மை அடைய வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 4 ம் அதிர்ஷ்டத்துக்கு உரிய நிறமாக பிங்க் நிறமும் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











