Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
100 ஆண்டுக்கு பின் மே மாதத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களை பணக்காரராக்கப் போகுதாம் -
கர்நாடகா ஸ்டைல் தயிர் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணுங்க, இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
25 லட்சம் பண மாலை... கல்வீச்சு, மோதல்! ஹரியானா திருமணத்தில் நடந்த அந்த 'ஷோ-ஷாதி' கலாச்சாரத்தின் கோர முகம்! -
இந்த 4 ராசி பெண்கள் அசாத்திய புத்திசாலிகளாம் - இவங்ககிட்ட பொய் சொல்லி தப்பிக்கவே முடியாதாம் - உங்க ராசி என்ன? -
தித்திக்கும் கர்நாடகா ஸ்டைல் மாம்பழ கேசரி ரெசிபி - செஞ்சு பாருங்க, டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
டெல்லி மழையால் மாறிய சூழல்! வீட்டை மாற்றும் அந்த 4 லக்கி செடிகள் இதோ! -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… கோடை வெயிலும் தூசியும் உங்களை நெருங்கவே முடியாது! -
Mother's Day 2026: 35 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகளில் என்னென்ன மாற்றம் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பருப்பே இல்லாத அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த மூணு ராசிக்காரங்க மட்டும் இன்னைக்கு இந்த வேலைய மட்டும் செஞ்சிடாதீங்க...
ஜனவரி 11 ஆம் தேதிக்கான 12 ராசிகளுக்குமான ராசிபலன்களைப் பற்றி இந்த கட்டுரையில் மிக விரிவாகக் காணலாம்.
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்
பயணங்கள் மேற்கொள்வதினால் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். உறவினர்களுடன் வீண் விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. செய்கின்ற காரியங்களில் தாமதங்கள் ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமான பலன்களே உண்டாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட நிகழ்வுகளினால் உங்களுக்கு பதற்றமான சூழல்கள் உருவாகும். நீங்கள் திட்டமிட்டு வைத்திருந்த பணிகளை நீங்களே முடிப்பது தான் நன்மை. வேறு யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்
நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகள் உங்களுக்குக் கை கூடி வரும். பொருளாதார ரீதியாக வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இவரை இருந்து வந்த எதிர்ப்புகள் மறையும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களிடமே திரும்பி வருவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும். எதையும் செய்து முடிக்கின்ற சாமர்த்தியமும் மன தைரியமும் உங்களுக்கு அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்

மிதுனம்
உங்களுடைய பேச்சுத் திறமையினால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனங்கள் மற்றும் வீடு சம்பந்தப்பட்ட செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களின் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்
தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில காரியத் தடைகள் உண்டாகும். வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுவதில் கொஞ்சம் கால தாமதமாகும். சந்திராஷ்டமம் நடப்பதால் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். உங்களுக்கு இருந்து வந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வேலை பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். சம்பளம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். சுப செய்திகள் வந்து சேரும். அதனால் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சின்ன சின்ன பிரச்னைகள் நீங்கி, அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலமாக பெருமையடைவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். மனதில் நினைத்த காரியத்தை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பயணங்களின் மூலம் திருப்திகரமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்
வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தடைகள் மற்றும் தாமதங்களைத் தாண்டி, காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
மனதுக்குள் உறுதியும் உங்களுக்கு நம்பிக்கையும் அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் சிறிது முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும். வாகனங்களின் மூலமாக லாபங்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
வீட்டில் இருப்பவர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். புதிய பயணங்களின் மூலமாக தொழிலும் மற்ற செயல்களிலும் அதிக அக்கறை செலுத்துவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மகரம்
உங்களுடைய சாமர்த்தியமான பேச்சின் மூலமாக செய்கின்ற செயல்களில் வெற்றி கிட்டும். மற்றவர்களுடைய விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான செயல்களின் மூலமாக கொஞ்சம் நிதானம் தேவை. எதுவாக இருந்தாலும் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்
காதுகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதன்மூலம் குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உருவாகும். உங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முயுற்சிகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நண்பர்களுடை ய உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளமஞ்சள் நிறமும் இருக்கும்.

மீனம்
ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பணிகளில் கொஞ்சம் ஈடுபாடு அதிகரிக்கும். மனதுக்குப் பிடித்த பொருள்களை வாங்கி, மகழ்ச்சி அடைவீர்கள். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த இடைஞ்சல்கள் நீங்கும். தொழிலை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications