For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...

|

குழந்தைக்குப் பெயரிடுவது பெரிய விஷயமாங்க? நிச்சயமாக! அதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே விதமான பெயர் ரசனை இல்லையென்றால் பிறந்த குழந்தைக்கு பெயர் தேர்ந்தெடுப்பது பெரிய சவாலாக மாறி விடும்.

Couple Names Their Son ‘Google’

அதிலும் தனித்துவமான பெயராக இருக்கவேண்டும்; பொதுவான பெயர் வேண்டாம் என்றெல்லாம் தேட ஆரம்பித்தால் அவ்வளவுதான்! குழந்தைக்கு கூகுள் என பெயர் வைத்த பெற்றோர்... காரணத்த கேட்டா கொஞ்சம் ஷாக் ஆகிடுவீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைப்புச் செய்தியான தம்பதி

தலைப்புச் செய்தியான தம்பதி

இந்தோனேஷியாவில் எல்லா கரின் (வயது 27), ஆன்டி சாஹ்யா சாபுத்ரா (வயது 31) என்ற தம்பதியர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. பையனுக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவாகாததால் 'குழந்தை பையன்' (பேபி பாய்) என்றே அழைத்து வந்துள்ளனர். அவனுக்கு அவன் தந்தை ஆன்டி சாஹ்யா பெயர் ஒன்று வைத்தார் பாருங்கள்! உலகமே அவர்களை திரும்பி பார்க்கும்படியான பெயர் அது. ஆன்டி சாஹ்யா, எல்லா கரின் தம்பதியர் பரபரப்பாக செய்திகளில் இடம் பிடித்தனர்.

MOST READ: 23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க

தொழில் நுட்ப பெயர்

தொழில் நுட்ப பெயர்

மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலிருந்தே ஆன்டி சாஹ்யா தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தார். தொழில்நுட்பம் சார்ந்த பெயராக இருக்கவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. விண்டோஸ், ஐபோன், மைக்ரோசாஃப்ட், ஐஓஎஸ் என்ற பெயர்களெல்லாம் கூட பரிசீலனையில் இருந்தது. அவர்களது பாரம்பரியத்தை ஒட்டிய பெயராக அல்பர் டிர்கந்தார புத்ரா என்ற பெயரைக் கூட யோசித்துப் பார்த்தார் ஆன்டி சாஹ்யா. ஆனால், அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

MOST READ: வண்டி ஓட்டும்போது மூக்க சொறிஞ்சதுக்காக அபராதமா?... டேய் இதுக்குலாமா அபராதம் போடுவீங்க...

மூன்று மாத காத்திருப்பு

மூன்று மாத காத்திருப்பு

கடைசியாக ஆன்டி சாஹ்யா, தங்கள் மகனுக்கு பெயர் ஒன்றை தெரிவு செய்தார். அவர் தேர்ந்தெடுத்த பெயர் குடும்பத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆன்டியின் மனைவி எல்லா கரினுக்கும் அப்பெயர் பிடிக்கவில்லை. ஆனால், ஆன்டி பொறுமையாக மூன்று மாதங்கள் அப்பெயரின் தனித்துவத்தை விளக்கினார். அதன்பின்னர் அவர் மனைவி தங்கள் பையனுக்கு அப்பெயரை வைப்பதற்கு ஒத்துக்கொண்டார்.

MOST READ: வந்த தும்மலை வேண்டுமென்று அடக்கியதால் தொண்டை வெடித்தது... எதுக்கு இந்த வேலை?

உதவியின் மறுபெயர்

உதவியின் மறுபெயர்

ஆன்டி, தங்கள் மகனுக்கு 'கூகுள்' என்று பெயரிட்டுள்ளார். கூகுளை போல தங்கள் மகனும் எல்லோருக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று பெற்றோர் விரும்பி அப்பெயரை வைத்துள்ளனராம். மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக தங்கள் மகன் வாழவேண்டும் என்றும் அதற்காகவே இப்பெயரிட்டோம் என்றும் பெற்றோர் கூறுகின்றனர். ஆகவே, அப்பையனின் பெயர் 'கூகுள்' என்பது மட்டுமே. பின்னால் எந்தப் பெயரை சேர்த்தாலும் இப்பெயரின் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடும் என்பதால், துணை பெயர் எதையும் சேர்க்கவில்லை என்று ஆன்டி தெரிவித்துள்ளார்.

MOST READ: வீட்டு வாசல்ல கூடுகட்டி ஓனரையே வெளிய வரவிடாம ஹவுஸ்அரஸ்ட் செய்த பறவை... பாவம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Couple Names Their Son ‘Google’ for This Reason

Naming the baby can be a huge task, especially when you and your partner do not have the same taste. You try to choose the most unique and uncommon name for the baby and it gets trickier as you dig deeper.
Story first published: Monday, July 8, 2019, 12:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more