For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல்லி உங்கள் எதிர்காலத்தை எப்படி முன்கூட்டியே சொல்கிறது தெரியுமா? ஜாக்கிரதையா இருங்க...!

இந்தியாவில் இருக்கும் தொன்மையான நம்பிக்கைகளில் ஒன்று பல்லியை பற்றியதாகும். மற்ற உயிரினங்களை போல பல்லியை ஒதுக்க முடியாது.

|

இந்தியா விஞ்ஞானரீதியாக மிகப்பெரிய அளவில் முன்னேறி இருந்தாலும் அதன் தொன்மை இன்றும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. தொன்மை என்று வரும்போது அதில் நம் மக்களிடையே நிலவும் நம்பிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல நூற்றாண்டுகளை கடந்தும் நம் மக்களிடையே இன்னும் பல பழமையான நம்பிக்கைகள் இருக்கிறது.

Can a lizard predict your destiny

இந்தியாவில் இருக்கும் தொன்மையான நம்பிக்கைகளில் ஒன்று பல்லியை பற்றியதாகும். மற்ற உயிரினங்களை போல பல்லியை ஒதுக்க முடியாது. இதனை இயற்கையின் தூதுவனாகவே மக்கள் நினைக்கிறார்கள். பல்லி விழும் பலன்கள் பார்ப்பது நமது சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமானதாகும். இந்த பதிவில் பல்லி உங்கள் விதியை எப்படி தீர்மானிக்கிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல்லி தலையில் விழுந்தால்

பல்லி தலையில் விழுந்தால்

பல்லி உங்கள் தலையில் விழுந்தால் நீங்கள் கடவுளை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஏனெனில் இது மிகவும் அபசகுணமான ஒன்றாகும். இவ்வாறு விழுவது துர்மரணத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

வலது கண்ணை தொட்டால்

வலது கண்ணை தொட்டால்

பல்லி உங்கள் வலது கண்ணை தொடுவது என்பது அதிக பயத்தை தரக்கூடிய ஒன்றாகும். ஆனால் இது நல்லதிற்கான அறிகுறிதான். அந்த தருணத்தை நினைத்து பயப்படாமல் எதிர்காலத்தை நினைத்து ஆவல் கொள்ளுங்கள். மகிழ்ச்சி உங்களுக்கு அனைத்து மூலைகளிலும் காத்திருக்கிறது.

இடது கண்ணை தொட்டால்

இடது கண்ணை தொட்டால்

வலது கண்ணிற்கும், இடது கண்ணிற்கும் என்ன பெரிய வித்தியாசம் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் பல்லி ஏன் உங்கள் இடத்தி கண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிந்தித்து பாருங்கள். உங்கள் இடது கண்ணை தொட்டால் உங்களுக்கு அதிக செல்வமும், அதிக மகிழ்ச்சியும் காத்திருக்கிறது என்று அர்த்தம்.

MOST READ: நீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி?

வலது மணிக்கட்டில் விழுந்தால்

வலது மணிக்கட்டில் விழுந்தால்

இது பல்லி அடிக்கடி நம் மேலே விழும் ஒரு இடமாகும். ஏனெனில் நாம் பெரும்பாலும் நமது வலதுகையைத்தான் அனைத்தையும் திறக்க பயன்படுத்துவோம். அதனால் பல்லி நமது வலது கையில் விழ அதிகம் வாய்ப்புள்ளது. இது ஒரு கெட்ட சகுனமாகும்.

இடது மணிக்கட்டு

இடது மணிக்கட்டு

இடது மணிக்கட்டு வலது மாணிக்கட்டிற்கு நேர் எதிரானதாகும். ஏனெனில் இது நல்ல சகுனம். ஆனால் இடது கை பழக்கமுள்ளவர்களுக்கு இது பொருந்தாது.

நகத்தை தொட்டால்

நகத்தை தொட்டால்

பல்லி உங்கள் நகத்தை தொட நேர்ந்தால் நீங்கள் சில நஷ்டங்களை சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம். அதனை உங்களால் தவிர்க்கவும் இயலாது, அதற்கு தயாராய் இருந்து கொள்ள மட்டுமே முடியும்.

MOST READ: உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல...!

நெற்றி மீது விழுந்தால்

நெற்றி மீது விழுந்தால்

பல்லி தலையில் விழுவதற்கும் நெற்றி மீது விழுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஏனெனில் இதனை நினைத்து நீங்கள் பயப்பட வேண்டாம். இது கடவுளின் ஆசீர்வாதமாகும்.

தோள்பட்டை

தோள்பட்டை

உங்களின் வலது தோள்பட்டை மீது பல்லி விழுந்தால் நீங்கள் இறங்கும் காரியத்தில் வெற்றி உங்களுடையதாகும். அதுவே இடது தோள்பட்டையில் விழுந்தால் குறுகிய காலத்திலேயே உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், மகிழ்ச்சியையும் அடைவீர்கள்.

பாதங்கள்

பாதங்கள்

உங்கள் பாதங்களின் மீது பல்லி விழுவது மிகவும் கெட்ட சகுனமாகும். ஏனெனில் உங்கள் வலது பாதத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு அணைத்து திசைகளில் இருந்தும் கெட்டது நடக்கப்போகிறது என்று அர்த்தம். அதுவே இடது பாதத்தில் விழுந்தால் உங்களின் வாழ்க்கை மோசமான பாதையில் திரும்ப போகிறது என்று அர்த்தம். தொடை மீது விழுந்தால் உங்களுக்காக பல சோதனைகள் காத்திருக்கிறது என்று அர்த்தம்.

விரல்கள்

விரல்கள்

ஒருவேளை உங்கள் இடது கை விரல்கள் மீது பல்லி விழுந்தால் உங்களை நோக்கி பல துன்பங்கள் வரப்போகிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையை இருள் மேகம் சூழப்போகிறது எச்சரிக்கையாய் இருங்கள். வலது கை விரல்கள் மீது விழுந்தால் பிடித்தவர்களிடம் இருந்து பரிசை வாங்க தயாராக இருங்கள்.

MOST READ: தூக்கத்தில் யாரோ அமுத்துறாங்களா, மூச்சு விட முடியலையா பயப்படாதீங்க இது சாதாரண பிரச்சினைதான்...!

கழுத்து

கழுத்து

உங்கள் கழுத்தின் இடது புறத்தில் பல்லி விழுந்தால் பல்வேறு சவால்களில் வெற்றி உங்களுக்காக காத்திருக்கிறது என்று அர்த்தம். கழுத்தின் வலது புறம் விழுந்தால் உங்களுக்கு புதிய எதிரிகள் வரப்போகிறார்கள் என்று அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: predictions symptoms eyes
English summary

Can a lizard predict your destiny?

Can a lizard predict your destiny?
Story first published: Friday, May 17, 2019, 14:46 [IST]
Desktop Bottom Promotion