For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானின் அருள் கிடைக்க இந்த வித்தியாசமான எளிய பொருள்களை கொண்டு வழிபட்டாலே போதும்.!

சிவபெருமானிடம் இருந்து அருளை பெறுவதற்கு சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று நம் வேதங்கள் கூறுகிறது.

|

இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள் என்றால் அது சிவபெருமான்தான். அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமான் பொதுவாக கோபக்கார கடவுளாகவே அனைவராலும் உருவகப்படுத்தப்படுகிறார். ஆனால் உண்மையில் சிவபெருமான் தன் பக்தர்கள் மீது அதீத அனுப்பு கொண்டவர் ஆவார். சிவபெருமானுக்கு போல்நாத் என்னும் பெயர் உள்ளது. அதன் அர்த்தம் பக்தர்கள் வேண்டும் வரங்களை வழங்குபவர் என்பதாகும்.

Ancient rituals of Shiva Aradhana that no one knows

உன்னதமான நோக்கத்துடன் சிவபெருமான் மீது பக்தி செலுத்தும் எவரும் அவர்கள் நினைத்த நிலையை அடைவார்கள். ஆனால் சிவபெருமானிடம் இருந்து அருளை பெறுவதற்கு சில குறிப்பிட்ட வழிபாட்டு முறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று நம் வேதங்கள் கூறுகிறது. காலங்கள் மாறிவிட்டதால் நாம் அனைவரும் பல வழிபாட்டு முறைகளை மறந்து விட்டோம். இந்த பதிவில் சிவபெருமானை அருளை பெற நம் முன்னோர்கள் செய்த வழிபாடு முறைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இராவணன்

இராவணன்

பழைய வரலாறுகளை பார்த்தால் அசுர வேந்தன் இராவணன்தான் தலைசிறந்த சிவபக்தன் என்று நாம் தெரிந்து கொள்ளலாம். அசுரனாக இருந்தாலும் சிவபெருமான் இராவணனுக்கு அவன் கேட்ட வரங்களை வழங்க காரணம் அவன் சிவபெருமான் மீது வைத்திருந்த அன்பும், அவன் கடைபிடித்த வழிபாட்டு முறைகளும்தான். இராவணன் கடைபிடித்த வழிபாட்டு முறைகள் மற்றும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிவ ஆராதனை முறைகளை பற்றியும் மேற்கொண்டு பார்க்கலாம்.

குழந்தை நலன்

குழந்தை நலன்

புராணங்களின் படி முனிவர்கள் கூறுவது யாதெனில் குழந்தைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கவும் அவர்கள் வாழ்க்கையில் சிரமங்கள் இன்றி வாழவும் சிவபெருமானுக்கு தினமும் ஊமத்தங்காய் வைத்து வழிபட வேண்டுமாம். இந்த வழிபாட்டு முறை இப்பொழுது முற்றிலும் அழிந்துவிட்டது என்றே கூறலாம்.

அதிர்ஷ்டம்

அதிர்ஷ்டம்

புராணங்களில் எங்கேயும் பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது என்று கூறப்படவில்லை. சொல்லப்போனால் அபிஷேகத்தின் போது பெண்கள் சிவலிங்கத்தை தொட்டு வழிபடுவது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வேதங்கள் கூறுகிறது.

திருமணம்

திருமணம்

பண்டைய கால சிவ வழிபாட்டில் குங்குமப்பூ அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தண்ணீரில் குங்குமப்பூ கலந்து சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்வது ஒருவரின் திருமண தடைகள் அனைத்தையும் நீக்கும் என்று கூறப்படுகிறது.

MOST READ: இந்த மாதத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பிரிந்து விடுவார்களாம் தெரியுமா?

சனிபகவான்

சனிபகவான்

சனிபகவான் சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார். எனவே சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமானை வழிபடலாம். தண்ணீரில் எள் விதைகளை கலந்து சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்து வழிபடுவது உங்களை சனிபகவனிடம் இருந்து பாதுகாக்கும்.

செல்வம்

செல்வம்

சிவபெருமானை வில்வ இலை கொண்டு தயாரிக்கப்பட்ட மாலை அணிவித்து வழிபடுவது உங்களுக்கு சிவபெருமானின் அருளை பெற்றுத்தரும். பொதுவாக வில்வ மாலையில் 11 இலைகள் இருப்பது நல்லது. இந்த மாலை அணிவித்து வழிபடும்போது ஓம் நமச்சிவாய என்னும் மந்திரத்தை கூறுங்கள். இது உங்கள் வாழ்வில் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டி உங்களுக்கு சிவபெருமானின் பூரண ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

முனிவர்களின் கூற்றுப்படி அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்ததற்கு காரணம் அவர்கள் சிவபெருமானை தர்ப்பை புல் கொண்டு வழிபட்டதுதான் என்று கூறியுள்ளனர்.

கவனம்

கவனம்

தற்போதைய காலகட்டத்தில் நாம் சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்ய பாக்கெட் பாலை பயன்படுத்துகிறோம், இது மிகவும் தவறான ஒன்றாகும். புராணகாலங்களில் செம்புபாத்திரத்தில் தூய்மையான பாலில் தண்ணீர் கலந்து சிவபெருமானிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இது அவர்களின் கவனத்தை அதிகரித்ததாக முனிவர்கள் தங்கள் வேதநூல்களில் கூறியுள்ளார்கள்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களுக்கு பொறுப்பு என்பதே இருக்காதாம்... இவர்களிடம் பார்த்து பழகுங்கள்...!

பணப்பிரச்சினை

பணப்பிரச்சினை

இன்றைய காலக்கட்டத்தில் அனைவர்க்கும் இருக்கும் ஒரு பிரச்சினை என்றால் அது பணப்பிரச்சினைதான். வேதங்கள் கூறுவது என்னவெனில் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பணப்பிரச்சினைகளும் தீர வேண்டுமெனில் சிவபெருமானை அரிசியை கொண்டு வழிபடவேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ancient Rituals of Shiva Aradhana That No One Knows

Check out the long forgotten rituals of Shiva Aradhana that no one knows about.
Desktop Bottom Promotion