Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
6 வருடமாக தலைமுடியை சாப்பிடும் 8 வயது சிறுமி... வயிற்றுக்குள் 1 கிலோ முடி இருக்காம்...
எட்டு வயது சிறுமியின் வயிற்றில் இருந்த 3 பவுண்ட் எடை கொண்ட தலைமுடி பந்து எப்படி சேர்ந்தது என்பது பற்றி இங்கே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். அது பற்றிய முழு தொகுப்பு தான் இது.
சிறு வயதில் நமக்கு பழக்கமாகும் சில விஷயங்கள் நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை முறையில் தாக்கத்தை உண்டாக்குவதாக உள்ளன. உதாரணத்திற்கு சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். சிலருக்கு விரல் சப்பும் பழக்கம் இருக்கும். சிலர் கோபமாக அல்லது மன அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரத்தில் பற்களைக் கடிப்பதையும் பழக்கமாக கொண்டிருப்பார்கள். இந்த பழக்கங்கள் நாளடைவில் நமக்கே தீங்கு விளைவிக்கின்றன. ஆகவே இத்தகைய பழக்கத்தை உடனடியாக கைவிடுவது நமது வாழ்க்கைக்கு நல்லது. இது போன்ற ஒரு வித்தியாசமான பழக்கத்தைக் கொண்டிருந்த 8 வயது சிறுமியின் வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

அவருக்கு இருந்த வித்தியாசமான பழக்கம் தலை முடியை மென்று சாப்பிடும் பழக்கம். இந்த பழக்கத்தினால் அவருடைய வயிற்றில் இருந்து ஒரு பெரிய முடி பந்தை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சி மிகுந்த அனுபவத்தைப் பற்றி அறிந்து கொள்ள வாருங்கள்..

முடியை சாப்பிடுகிறாள்
அவளுடைய 2 வயதில் இருந்து தலைமுடியை சாப்பிட்டு வருகிறாள். ஃபைஃபை என்னும் 8 வயது சிறுமி தெற்கு சீனாவை சேர்ந்த குஆங் டாங் பகுதியை சேர்ந்தவள். இந்த சிறுமி தனது முடியை இழுத்து சாப்பிட்டு வருவதை 2 வயது முதல் செய்து கொண்டிருந்தாள் என்பது ஆய்வில் தெரிய வந்தது.
MOST READ: முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்புல அரை ஸ்பூன் சர்க்கரை கலந்து தேய்ங்க... முடி வளர ஆரம்பிக்கும்

தாய் தடுத்து நிறுத்தம்
தலை முடியை மெல்லும் பழக்கத்தை அவள் தாய் நிறுத்தினார். இப்படி இந்த சிறுமி தலைமுடியை இழுத்து கடிப்பதைக் கண்ட அவள் தாய் அதனை நிறுத்தும்படி கூறியதாக ஆய்வுகள் கூறுகின்றன. அவள் அந்த பழக்கத்தை நிறுத்திய அடுத்த ஒரு மாதத்தில் அந்த சிறுமிக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. வாந்தி மற்றும் தீவிர வயிற்று வலி ஆகிய அறிகுறியுடன் அவளுக்கு காய்ச்சலும் இருந்தது. ஒரு வாரம் அவளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

மருத்துவர்கள் பரிசோதனை
மருத்துவர்கள் அந்த சிறுமிக்கு இரைப்பையை கழுவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அவளுடைய வயிற்றை சுத்தம் செய்வதற்கு மருத்துவர்கள் இந்த முறையை பின்பற்றினர். ஆனால் அவளின் வயிற்றில் ஒரு பெரிய முடி உருண்டை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த முடி பந்து அவளுடைய வயிற்றில் ஒட்டிக் கொண்டிருந்தது.

உடனடியாக அறுவை சிகிச்சை
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தலைமுடியை வெளியில் எடுக்க முடிவு செய்து அதன்படி செய்தனர்.



Click it and Unblock the Notifications
