For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுல 15 காளையை அடக்குன 23 வயசு சிங்கக்குட்டி பத்தி தெரியுமா?

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 15 காளைகளை அடக்கி கார பரிசாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்த இளைஞரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?

|

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றது எல்லோருக்குமே தெரியும். இந்த ஜல்லிக்கட்டை பார்ப்பதற்கு உலகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து பார்த்து ரசிப்பார்கள். அப்படி விளையாட்டை இடையில் பீட்டா நிறுவனம் தொடுத்த வழக்கால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தமிழகம் பல போராட்டங்களைக் கண்டது.

Image Courtesy

alanganallur jallikattu 2019

அதன்பின் மெரினா புரட்சி என்றும் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்பு, மக்கள் அரசை வெற்றி கொண்டது. அதன்பின் கடந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு மீண்டும் கோலாகலமாகத் தொடங்கியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மதுரையும் ஜல்லிக்கட்டும்

மதுரையும் ஜல்லிக்கட்டும்

தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பதிலும் சரி, விளையாடுவதிலும் போட்டி நடத்துவதிலும் முதன்மை வகிப்பது என்றால், அது நம்ம மதுரை தாங்க. பொங்கல் வந்துட்டா போதும். முதல் நாள் அவனியாபுரத்தில் ஆரம்பிக்கும், அடுத்து அலங்காநல்லூர், பாலமேடு என்று ஒரே கொண்டாட்டமும் கும்மாளமும் தான் இருக்கும். இன்னும் நம்முடைய பாரம்பரியமும் மண் மணமும் மாறாமல் பொங்கல் கொண்டாடுவது என்றால் அது மதுரையில் தான். சரி. விசயத்துக்கு வருவோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

கடந்த வியாழக்கிழமை காணும் பொங்கலன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 729 காளைகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட காளைகளில் 697 காளைகள் பிடிபட்டன. மற்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் காளைகளின் வலிமைக்கு ஈடுகொடுத்து நம்முடைய இளைஞர் பட்டாளமும் காளையை விளையாடத் தயாராகினர். அப்படி விளையாடியதில் ஒரு 23 வயது இளைஞன் மட்டும் தனி ஆளாக 15 காளைகளை அடக்கி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அதுபற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நம்ம ரௌடி பேபி அறந்தாங்கி நிஷா பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ...

சிறந்த காளை

சிறந்த காளை

யாராலும் தொடக் கூடி முடியாத அளவுக்கு மைதானத்தில் சும்மா துள்ளி குதிச்சு விளையாண்ட நம்ம பரமப்பட்டி செல்லியம்மன் கோவில் காளை தாங்க சிறந்த காளைன்னு அறிவிக்கப்பட்டுச்சு. அறிவிப்புனாலும் அறிவிப்பு அப்படி ஒரு அறிவிப்பு. சும்மா இல்லங்க. அந்த காளைக்கு பரிசாக ஒரு கார். இதவிட அந்த காளையை வளர்த்தவருக்கு வேறு என்ன அந்த மாடு செய்ய முடியும் சொல்லுங்க.

பரிசு அறிவிப்பு

பரிசு அறிவிப்பு

சிறந்த காளை அடக்கும் வீரனுக்கு ஒரு காரும் அதேபோல் யாராலும் அடக்க முடியாத சீறி வரும் காளைகளில் சிறப்பாக விளையாடும் காளைக்கு ஒரு காரும் என முதல்வர், துணை முதல்வர் சார்பாக பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

நம்ம நித்தி முதல் அப்பல்லோ இட்லி வரை தெறிக்க விடும் #10yearchallenge மீம்ஸ்... வயிறு வலிக்க சிரிங்க

Image Courtesy

15 காளை அடக்கிய வீரன்

15 காளை அடக்கிய வீரன்

23 வயதே ஆன ரஞ்சித் குமார் ஒரே ஜல்லிக்கட்டு போட்டியில் தன்னுயிரையே துச்சமாக மதித்து 15 காளைகளை அடக்கியுள்ளார். இவர் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது இதுதான் முதல் முறை. இவர் அவனியாபுரத்தை சேர்ந்தவர்.

மற்ற வேறு சில ஜல்லிக்கட்டுகளில் பங்குபெற்று நிறைய பழங்காநத்தம் ஜல்லிக்கட்டில் 19 மாடுகள் பிடித்து இரண்டாம் இடத்தையும் நெல்லிமுள்ளியில் 6 மாடுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தையும் தற்போது அலங்காநல்லூரில் 15 காளைகளைப் பிடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

23 year old guy tamed 15 bulls in alanganallur jallikattu 2019

As many as 729 bulls participated in alanganallur jallikattu. 697 tamed. Ranjith, 24, of Avaniyapuram, who tamed 15 bulls, was adjudged the best bull-tamer. He bagged the car sponsored by the deputy chief minister.
Story first published: Wednesday, January 23, 2019, 19:14 [IST]
Desktop Bottom Promotion