For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருப்பு, நிலம், காற்று, நீர் ராசிகள்: எந்த நோய் எப்படி தாக்கும் - என்ன சாப்பிடலாம்

ராசிகள் நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகளின் தன்மையைப் பொறுத்து இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள் பாதிக்கின்றன. அதேபோல 12 லக்னகாரர்களுக்கு நோய்கள் பாதிக்கின்

|

சென்னை: ராசிகள் நெருப்பு, நிலம், நீர், காற்று என்று நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ராசிகளின் தன்மையைப் பொறுத்து இந்த ராசிக்காரர்களுக்கு நோய்கள் பாதிக்கின்றன. நோய் வந்தாலே டாக்டரிடம் செல்வது போல ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிமும் செல்வார்கள். 12 ராசிகளுக்கும் வரக்கூடிய பொதுவான நோய்கள் அவரவர் ஜாதகத்தில் உள்ள விதிப்படியே நடக்கும். பொதுவாக ராசிகள் வரக்கூடிய நோய்கள் அனைத்தும் கிரகங்கள். திசா புத்தி கணக்குப்படி தான் வருகிறது. இந்த நோய் வர வேண்டும் என்று விதி இருந்தால் அது விடாது வந்தே தீரும். போவது போயே தீரும். இதனை மனதில் கொண்டு நாட்களை மகிழ்ச்சியோடு போக்க வேண்டும்.

மேஷம், சிம்மம்,தனுசு நெருப்பு ராசிகள். ரிஷபம், கன்னி,மகரம் நில ராசிகள். மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள். கடகம் , விருச்சிகம் , மீனம் நீர் ராசிகள், மேற்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்.

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிக்க தைரியசாலிகளாகவும், தன்னிச்சையாக முடிவு எடுப்பவர்களாகவும் தன்நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகளை இலக்கினமாகப் பெற்றவர்கள் மிகவும் நிதானமாகச் செயல் படக் கூடியவர்கள். காற்று ராசிக்காரர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் லக்னத்தில் பிறந்த ஜாதகர் சகல கலைகளிலும் தேர்ச்சி பெரும் அமைப்பை பெறுவார் , கற்பனை திறனால் சாதனை செய்யும் அமைப்பு பெற்றவர்கள்.

நெருப்பு ராசிகளின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குத் தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள். இந்த நெருப்பு ராசியில் உள்ள கிரகங்களும் மேற்கூறிய தன்மைகளைப் பெற்று இருக்கும். நெருப்புராசியை கொண்டவர்கள் நெருப்பு சம்மந்தப் பட்ட தொழிலில் இருக்கவும் சாத்தியக் கூறுகள் உண்டு. காற்று ராசிக்காரர்கள் நல்ல குணங்கள் நிறைந்தவர்கள். மிகவும் கெட்டிக்காரர்கள். கற்பனை மிகுந்தவர்கள். எதையும் நன்றாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். கற்பனை மிகுந்தவர்கள். இந்த ராசி மூளை சம்மந்தப் பட்டதால் மூளை சம்மந்தப் பட்ட தொழிலுக்கு ஏற்றவர்கள். அக்கவுண்டண்ட்ஸ், வக்கீல்கள், ஆசிரியர் போன்ற தொழிலுக்கு ஏற்றவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சூரியன் மேஷம் ராசிக்கு செல்லும் போது சித்திரை மாதம் பிறக்கிறது. அக்னி வெயில் தகிக்கும் மாதம் மேஷ மாதம். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் காய்ச்சல். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தொற்று நோய், சுவாசக் கோளாறு, சிறுநீர் கல் அடைப்பு, ரத்த சோகை, ஏதாவது ஒரு கட்டத்தில் ஒரு சிறிய ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை உருவாகும். இவைகள் அனைத்தும் ஏதாவது ஒரு சமயத்தில் வந்து போகும் நோய்கள். இவர்கள் வாழைப்பழம், அத்திப்பழம், ப்ராக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை உட்கொண்டு வந்தால், அவஸ்தைப்பட்டு வரும் பிரச்சனை மாயமாக மறையும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷபத்தின் அதிபதி சுக்ரன். வைகாசி மாதத்தில் இந்த ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார். இதுவும் வெப்பமான மாதம்தான். இந்த ராசிக்கு வரக் கூடிய பொதுவான நோய் ஜலதோஷம். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு, பற்கள் சிதைவு, தோல் நோய், சீதபேதி, காசநோய், விஷக்காய்ச்சல் போன்றவை அவ்வப்போது வந்து போகலாம். இந்த ராசிக்காரர்களுக்கு நரம்பு மண்டலத்துடன் நெருங்கிய சம்மந்தம் உண்டு. சிறிய விஷயத்துக்கெல்லாம் கவலை கொள்ளும் சுபாவம் கொண்டவர்கள். இவர்களுக்கு வாயுத்தொந்தரவு உண்டு. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, உப்புச்சத்தால் தான் ரிஷப ராசிக்காரர்கள் கஷ்டப்படுவார்கள். இந்த வயிறு பிரச்சனை சரிசெய்ய, பசலைக்கீரை, காய்கறி சாலட், கிரான்பெர்ரி மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிதுனம்

மிதுனம்

மிதுனத்தின் அதிபதி புதன் கிரகம். சூரியன் இந்த ராசிக்கும் நுழையும் போது ஆனி மாதம் பிறக்கிறது. காற்று காலம் ஆரம்பமாகும். இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய்களில் ஒன்று வாதம் ஆகும். நமது உடலில் மார்பு பகுதியில் இந்த ராசி அங்கம் வகிக்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாயு தொல்லை, தலைவலி, வயிற்றுக்கோளாறு, தீராத மலச்சிக்கல், புதிய தொற்று நோய் வரக்கூடும். மிதுனம் அதிகமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த சிறந்த உணவுகளான பாதாம், மோர், கிரேப் ஃபுரூட், அஸ்பாரகஸ் போன்றவற்றை உட்கொள்வதோடு, தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, இதய நோய்கள் வராமலும் தடுக்கும். தோல் நோய்கள் தாக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன். சூரியன் இந்த ராசிக்கு செல்லும் போது, ஆடி மாதம் பிறக்கிறது. ஆடியில் சூறைக்காற்றோடு மழையும் தொடங்கும். நமது உடலில் இதயத்தை அங்கம் வசிக்கும் கடக ராசி, பொதுவாக தண்ணீரால் வரும் நோய்களை உருவாக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரண கோளாறு, காது கோளாறு, தோல் நோய், கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய நோய் உண்டாகும். கடக ராசிக்காரர்கள் குறிப்பாக கலோரிகள் அதிகம் நிறைந்த தவறான உணவுகளைத் தான் உட்கொள்வார்கள். ஆனால் சரியான உணவுகளான பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை டென்சனாக இருக்கும் தருணங்களில் உட்கொண்டால் டென்சனும் குறையும் வயிறு பிரச்சினைகளும் நீங்கும்.

சிம்மம்

சிம்மம்

ஆவணி மாதத்தில் சிம்ம ராசியில் சூரியன் நுழைகிறார். ஆவணி மாதம் தென்மேற்கு பருவமழை உச்சத்தில் இருக்கும். சூரியனை அதிபதியாகக் கொண்ட இந்த ராசிக்கும் வரக்கூடிய பொதுவான ஒன்று, உடலில் காயம் ஏற்படுவது. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு நரம்பு தளர்வு, நெஞ்சு வலி, சிறுநீர் பிரச்சினை, கண் காது கோளாறு, பாத வெடிப்பு, கெட்ட பழக்கவழக்கங் களால் வரக்கூடிய நோய்கள் வந்து சேரும். சிம்ம ராசிக்காரர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

கன்னி

கன்னி

சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் மாதம் புரட்டாசியாகும். இதுவும் மழைக்காலம்தான். புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு பொதுவாக வரக்கூடிய நோய் முடக்கு வாதம். கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், பிறப்பு உறுப்பை சுற்றி தோல் நோய், பற்கள் பிரச்சினை, பருவ காலத்தில் வரக்கூடிய நோய்கள் போன்றவை வந்து போகும். கன்னி ராசிக்காரகள் செரிமான பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதில் நார்ச்சத்துள்ள உணவுகளான ஓட்ஸ், வாழைப்பழம், பப்பாளி உட்கொள்வதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்பலாம்.

துலாம்

துலாம்

சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம், ராசி மண்டலத்தில் ஏழாவது ராசியாக விளங்குகிறது. இதன் தோற்றம்... ஒரு ஆண் தராசு கையில் பிடித்தபடி இருப்பது போல் இருக்கக் கூடியவை. இந்த ராசி நமது உடலில், அடி வயிற்றுப் பகுதியில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோயாக பால்வினை நோய் உள்ளது. மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கண் பார்வைக் கோளாறு, மூலநோய், விஷக் காய்ச்சல், வாயுத்தொல்லை, கெட்ட பழக்கவழக்கத்தால் வரக்கூடிய தொற்று நோய்கள் போன்றவை அவ்வப்போது வந்து போகும். இந்த ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் அருந்துவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த ராசிக்காரர்கள் பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை உட்கொள்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசி மண்டலத்தில் எட்டாவது ராசியாக விருச்சி கத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இதன் தோற்றம் கருந்தேள் போல் இருக்கக் கூடியது. சூரியன் இந்த ராசிக்குள் நுழையும் மாதம் கார்த்திகை பிறக்கிறது. இந்த ராசி நமது உடலில் பிறப்பு உறுப்புக்களில் அங்கம் வகிக்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய பொதுவான நோய் வாயுத் தொல்லை. இது தவிர இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மஞ்சள் காமாலை, நரம்பு தளர்வு, மனக் கோளாறு, தோல் நோய், சளித்தொல்லை உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் நோய்த்தொற்றுகளால் கஷ்டப்படுவார்கள். பால், தயிர், வால்நட்ஸ், பாதாம், அன்னாசி சாப்பிடலாம்.

தனுசு

தனுசு

குரு பகவானை அதிபதியாகக் கொண்ட ராசி தனுசு. சூரியன் மார்கழி மாதம் முழுவதும் இந்த ராசியில் இருப்பார். இந்த ராசி நமது உடலில் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களாகும். மேலும் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஒவ்வாமை என்னும் அலர்ஜி, மூச்சுக் கோளாறு, செரிமான கோளாறு, புதிய தொற்று நோய்கள், சளித் தொல்லை இருக்கக்கூடும்.

தனுசு ராசிக்காரர்களின் உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். குறிப்பாக இடுப்பிலும், தொடையிலும் தான் கொழுப்புக்கள் சேரும். இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.

மகரம்

மகரம்

ராசி மண்டலத்தில் பத்தாவது ராசியாக இருக்கும் மகர ராசியின் அதிபதி, சனி கிரகம் ஆகும். இதன் வடிவம் கடல் குதிரை போல் அமைந்திருக்கும். தை மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். இந்த ராசி மனித உடலில் முழங்கால்களை ஆதிக்கம் செய்கிறது. இந்த ராசிக்கென்றே வரக்கூடிய நோய் மஜ்ஜை நோயாகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மன அழுத்தம், பித்த நீர் பையில் கோளாறு, சுவாசக் கோளாறு, கண் பார்வைக் கோளாறு, தோல் அரிப்புகள் வந்து போகும். மகர ராசிக்காரர்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். பட்டாணி, உருளைக்கிழங்கு, பசலைக்கீரை, ஓட்ஸ், பால் ஆகியவைகளை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.

கும்பம்

கும்பம்

ராசி மண்டலத்தில் பதினோறாவது ராசியாக கும்ப ராசி. இந்த ராசியின் அதிபதியும் சனியே ஆவார். இந்த ராசியின் தோற்றம், ஆண் ஒருவர், குடத்தை வைத்திருப்பது போல் இருக்கும். சூரியன் இந்த ராசியில் மாசி மாதம் முழுவதும் தங்கிஇருப்பார். நமது உடலில் கணுக்கால்களை ஆதிக்கம் செய்யும் ராசி இது. இந்த ராசிக்கென்று வரக்கூடிய நோய் நரம்பு தளர்வு ஆகும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மூலநோய், தொற்று நோய், உடல் எடை கூடுதல், பற்சிதைவு, சுவாசக் கோளாறு போன்ற நோய்கள் வரக்கூடும். கும்ப ராசிக்காரர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பேரிக்காய், அத்திப்பழம், எலுமிச்சை, பேரிச்சம்பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

மீனம்

மீனம்

மீனம் ராசியின் அதிபதி குரு பகவான். கடைசி மாதமான பங்குனி மாதம் முழுவதும் இந்த ராசியில் சூரியன் பயணிப்பார். நமது உடலில் பாதத்தை இந்த ராசி அங்கமாக கொண்டு உள்ளது. இந்த ராசிக்கென்று வரக் கூடிய நோய் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சளித்தொல்லை, சுவாசக் கோளாறு, கண் மற்றும் பற்கள் கோளாறு, பருவநிலை நோய், உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். மீன ராசிக்காரர்கள் சளி மற்றும் காய்ச்சலால் தான் கஷ்டப்படுவார்கள். சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Zodiac Signs lagnas and Your Health Problems and remedies

Read health problems, physical diseases and mental problems related to your zodiac signs like Aries, Taurus, cancer, Leo, Libra and 12 Zodiac Signs lagnas.
Story first published: Friday, July 19, 2019, 10:49 [IST]
Desktop Bottom Promotion