Latest Updates
-
சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் பெரிய வெங்காயம் இருந்தா 10 நிமிடத்தில் இந்த சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் உள்ள டாப் 5 மாவட்டங்கள் என்னென்ன தெரியுமா? -
ஆந்திரா முட்டை புலுசு ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க... சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும்...! -
புதன் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
காரசாரமான கேரளா ஸ்டைல் ஈஸி பெப்பர் சிக்கன் ரெசிபி... இப்படி செஞ்சு பாருங்க... வேற லெவல் சைடிஷா இருக்கும்...! -
கள்ளக்காதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள 4 ராசிகள் இவங்கதான்... இவங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருங்க...! -
காரசாரமான.. ஹைதராபாதி சிக்கன் கிரேவி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்..
இன்றைக்கு பெரும் லாபமும் பேரும் புகழும் சம்பாதிக்கப் போகிற ராசி எது தெரியுமா?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்
உறவினர்களின் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கல்வி சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். புதிய வீடுகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உருவாகும். வேலை செய்கின்ற இடத்தில் மேன்மையான சூழல்கள் உருவாகும். உங்களுடைய மதிப்பு மற்றவர்களிடம் அதிகரிக்கும் .இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் இதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உங்களுடைய ஒத்த வயதினர் மற்றும் நண்பர்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதங்கள் செய்வதைத் தவிர்த்திடுங்கள். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது நல்லது. கடல் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் மந்தநிலையாகவே இருக்கும். சந்திராஷ்டமம் இன்னும் முடியாததால் புதிதாக ஏதேனும் முடிவுகள் எடுக்கும்போது, மற்றவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு முடிவு எடுப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக தேன் நிறமும் இருக்கும்.

மிதுனம்
வெளியூர் பயணங்களில் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். யாகங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. மனதுக்குள் புதுவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்
வுலை செய்கின்ற இடத்தில் சக ஊழியர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வேளாண்மை சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் நிமித்தமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். சேமிப்புகள் அதிகரிக்கும். தலைமை அதிகாரிகளின் மூலம் உங்களுக்கு ஆதரவான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

சிம்மம்
எந்த புதிய காரியமாக இருநு்தாலும் அதை தைரியமாக எதிர்கொண்டு மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த பச்சை நிறமும் இருக்கும்.

கன்னி
பெரியேவர்களின் முழு ஆசிகளும் உங்களுக்குக் கிடைக்கும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு வெற்றிகள் வந்து குவியும். ஆன்மீகத்தில் மனம் ஈடுபடும். உங்களுடைய உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

துலாம்
வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்காலத் திட்டங்கள் தீட்டுவதிலும் அதை நோக்கிப் பயணிக்கவும் முயற்சி செய்வீர்கள். உங்களுடைய வாதத் திறமையினால் லாபம் ஏற்படும். செய்யாமல் பாதியிலேயே போட்டு வைத்திருந்த செயல்களை கையிலெடுத்துச் செய்யத் தொடங்குவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

விருச்சிகம்
வீட்டில் மனைவியின் மூலமாக தேவையில்லாத வீண் செலவுகள் வந்து சேரும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் உங்களுக்கு அனுகூலமான சூழல்கள் உருவாகும். புனித யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் பெருகும். வழக்குகளில் நீங்கள் நினைத்தபடி, பெரும் பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறமும் இருக்கும்.

தனுசு
உடன் வுலை செய்கின்ற சக ஊழியர்குளை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் பங்குதாரர்களின் மூலம் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான காரியத் தடைகள் உண்டாகும். அதனால் நிதானமாக இருப்பது நல்லது. தேவையில்லாத அவச்சொற்களுக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. மலை பிரதேசங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

மகரம்
போட்டி சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழில்களில் இருக்கின்றவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். வீட்டில் பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான முயுற்சிகளை மேற்கொள்வீர்கள். கோவில் சம்பந்தப்பட்ட புண்ணிய காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கும்பம்
பொது இடத்தில் சபையின் தலைவராக வீற்றிருக்கும் அளவுக்கு அனைவரின் மரியாதையையும் ஒத்துழைப்பையும் பெறுவீர்கள். நீர் சம்பந்தப்பட்ட தொழில் புரிகின்றவர்களுக்கு லாபம் கொட்டும். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். நேர்மையானவர் என்ற அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர்ந்த சிவப்பு நிறமும் இருக்கும்.

மீனம்
விலையுயர்ந்த பொருள்களை கையாளுவதைத் தவிர்த்தால் வீண் விரயச் செலவு உண்டாகாமல் பாதுகாக்கலாம். உங்களுடைய ஒத்த வயதினருடைய உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்துங்கள். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் போலீஸில் பிடிபட நேரலாம். மனக்கவலைகள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளி பச்சை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











