For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவழியா கிரகணம் முடிஞ்சுது... உங்க ராசிக்கு இன்னைக்கு எப்படி இருக்கும்னு பார்க்கலாமா?...

இன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஆடி வெள்ளியான இன்று என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்ற என்று பார்ப்போம்.

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்

கணவன் மனைவிக்கு இடையே கெருத்து வேறுபாடுகள் விலகி நெருக்கங்கள் அதிகரிக்கும். உங்களுடைய தொழில் சார்ந்த துறையில் புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொண்டு உங்களுடைய அறிவைப் பெருக்கிக் கொள்வீர்கள். நிலுவையில் இருந்த பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல்கள் உருவாகும். பொது இடங்களில் உங்களுக்கு ஆதரவு அதிகமாகும். புதுப்புது எண்ணங்கள் மனதுக்குள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசை கிழக்காகவும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20

தொழில் சம்பந்தப்பட்ட புதிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எந்த முடிவெடுத்தாலும் அதை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து எடுப்பது நல்லது. உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். விவாதங்களின் மூலமும் உங்களுக்கு சாதகமான நிலையே உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதால் சிறுசிறு சுப விரயச் செலவுகள் உண்டாகும். போட்டிகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

மிதுனம்: 22 மே – 21 ஜூன்

அடுத்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது தான் என்றாலும் அதிலும் கொஞ்சம் கவனமாக ஈடுபடுங்கள். பண விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருங்கள். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சுப விரயச் செலவுகள் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளுகிற போது கொஞ்சம் கவனமாக இருங்கள். பிறருக்கு ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்கின்ற ஆற்றலால் மற்றவர்களிடம் நற்பெயர் பெறுவீர்கள். பொருள் சேர்க்கையில் மனம் ஈடுபடும். அதற்கு சாதகமான சூழலும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை

நீங்கள் கொடுக்கும் சிறந்த வாக்குறுதிகளால் பிறரால் புகழப் படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுடைய பங்குதாரர்களினால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் செயல்வேகம் அதிகரிக்கும். புதிய புதிய லட்சியங்களை அடைவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். மனதுக்குள் புதுப்புது எண்ணங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்

வெகு நாட்களாக செய்ய வேண்டுமென்று மனதுக்குள் நினைத்து வைத்திருந்த செயல்களை பிறர் பாராட்டும்படி மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முக்கியப் பொறுப்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்த மறந்து விட வேண்டாம். வெளிநாடு செல்வதற்கான போட்ப்பட்ட திட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்லும். நல்ல காரியங்களுக்கான பொருள், பணம் நன்கொடையாகக் கொடுப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்

உடன் பிறந்த சகோதர, சகோதரிகளினால் சின்ன சின்ன சுப விரயச் செலவுகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் குறும்புச் செயல்களால் மகிழ்ச்சி பெருகும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ளும் காலமிது. அதன்மூலம் மன நிம்மதி அதிகரிக்கும். உடன் பிறந்தோர்கள் மூலமாக சிறு சிறு மனக்கசப்புகள் வந்து மறையும். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் அமையும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்

தாய் தந்தை பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருக்கும். மூலிகைகள் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபடுகிறவர்கள் அதை மேம்படுவதற்கான சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். தொழிலை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். கால்நடைகளின் வழியாக லாபங்கள் உண்டாகும். மாணவர்களுடைய புத்திக்கூர்மையும் வெளிப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்

உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். மனதுக்குள் தோன்றும் தேவையில்லாத குழப்பங்களை களைந்து எறியுங்கள். உடல் சோர்வு ஏற்படும். பெற்றுாருடைய உடல் நலத்தில் கொஞசம் அக்கறை செலுத்துங்கள். உடல் ஆரோக்கிய விஷயத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். எதையும் துணிந்து செய்யுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்

நீங்கள் இதுவரை இருந்து வந்த தொழிலையும் தாண்டி, சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுக்க முயற்சி செய்வீர்கள். பணி நிமித்தமான பயணங்களில் கவனம் தேவை. பெரியவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் உள்ள பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை எடுக்கின்ற போது நிதானம் வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும். ஆக மொத்தத்தில் இன்று எந்த திட்டம் போட்டாலும் கொஞ்சம் கவனமாக போடுங்கள்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி

மனதில் உண்டாகும் சஞ்சலங்கள் மனதில் வந்து போகும். நீங்கள் இயல்பாக இருந்தாலும் உங்களுடைய நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். தொழில் வகையான உங்களுக்கு இருந்து வந்த போட்டிகளைச் சமாளிப்பீர்கள். நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் எஞ்சிய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சந்தன வெள்ளை நிறமும் இருக்கும். நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தால் வெற்றி உண்டாகும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி

எந்த வேலை செய்தாலும் அதில் கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் பேசுகிறபோது பேச்சில் கவனமும் நிதானமும் வேண்டும். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாகனங்களில் பயணம் செய்யும் போது, கொஞ்சம் விழிப்புணர்வோடு இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாகவும் இருக்கும். பணியிலும் பேச்சிலும் கொஞ்சம் கவனம் தேவை.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்

உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். அறிமுகம் இல்லாதவர்கள் மூலமாக மன வருத்தங்கள் உண்டாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் பணிகளில் சில தடங்கல்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமாக பல புதிய யுக்திகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வீட்டுக்கு புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். ஆக மொத்தத்தில் சிறுசிறு மன வருத்தங்களும் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்னையும் வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

horoscope for 28 July 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Friday, July 27, 2018, 18:18 [IST]
Desktop Bottom Promotion