Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
இன்னைக்கு இந்த ராசிக்காரர் வீட்டைவிட்டு வெளியில போய்டாதீங்க...
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.
எது எப்படியோ இன்றைக்கு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

மேஷம்
வீட்டில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தொழில் விருத்திக்காக நீங்கள் வெளியிடங்களில் எதிர்பார்த்துக் காத்திருந்த இடங்களில் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் இழந்த பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனப் பயணங்களால் லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

ரிஷபம்
உடன்பிறந்த இளைய சகோதரர்களினால் போதிய ஆதாயங்கள் உண்டாகும். புதிய பல முயற்சிகளின் மூலமாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்க கால தாமதமாகும் ஏற்படும். வீட்டில் பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அக்கறை செலுத்துவது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் நிதானத்துடன் கையாள வேண்டியது அவசியம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடன் உதவிகள் கைக்கு வந்து சேரும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண்ணாக 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கிறது.

மிதுனம்
நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். புதிய வெளியாட்களின் நட்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் அனுகூலமான சூழல் உண்டாகும். கலை சம்பந்தப்பட்ட அறிவு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும் எண்ணாக 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமாகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் திசையாக மேற்கு திசையும் இருக்கப்போகிறது.

கடகம்
வீட்டில் பெற்றோர்களின் ஆதரவால் கவலைகள் தீரும். உங்களுடைய எண்ணப்போக்கில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். வாகனங்களால் உங்களுககு சில விரயச் செலவுகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகும். அரசு பணியில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழல் உண்டாகும். உங்களுடைய உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு நட்பு உண்டாகும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக 1 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

சிம்மம்
போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி அடைவீர்கள். இளைய சகோதரர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் வெற்றியடையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. அதிர்ஷ்ட திசை தென்மேற்கு, அதிர்ஷ்ட எண் 3.

கன்னி
இன்று புதிய முயற்சி எதுவும் மேற்கொள்ள வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் பேச்சில் பொறுமையும் நிதானமும் தேவை. திடீர் செலவுகளால் கடன் வாங்க நுரிடலாமத். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகுமு். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் மறைமுகத் தொந்தரவுகள் உண்டாக வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருப்பது அவசியம். வியாபாரத்தில் சுமாரான லாபமே கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை உண்டாகும். இன்று அதிர்ஷ்ட நிறம் நீலம். அதிர்ஷ்ட எண் 2, அதிர்ஷ்ட திசை வடமேற்கு.

துலாம்
இன்று ரிலாக்ஸ் ஆகவும் அனுபவிப்பதற்கேற்ற மன நிலையிலும் இருப்பீர்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். குடும்பத்தினர் ஒன்று சேரும்போது நீங்கள் மையமானவராக இருப்பீர்கள். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 1, அதிர்ஷ்ட திசை வடகிழக்கு, அதிர்ஷ்ட நிறம் காவிநிறம்.

விருச்சிகம்
குறுகிய மனநிலை போக்கை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் வாய்ப்புகளைக் குறைப்பதுடன், உடலின் நல்ல இணக்கத்தையும் பாதித்துவிடும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். உணர்ச்சிவசப்படும் இயல்பை கட்டுப்படுத்துங்கள். அது உங்கள் நட்பை பாதிக்கலாம். கிரியேட்டிவ் இயல்பு கொண்ட வேலைகளில் ஈடுபாடு காட்டுங்கள். உங்கள் உடமைகளில் நீங்கள் கவனக் குறைவாக இருந்தால், நட்டம் அல்லது திருட்டு ஏற்படலாம். இன்று, ஒரு சிறு விஷயத்துக்காக உங்கள் துணையுடன் சண்டை ஏற்படலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 9 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

தனுசு
உண்மையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதில், உணர்ச்சிபூர்வமாக நீங்கள் நிச்சயமற்றவராகவும், அலைபாயும் மனம் உள்ளவராகவும் இருப்பீர்கள். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். வீட்டை மேம்படுத்தும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். உங்கள் மனதில் பட்டதை சொல்வதற்குப் பயப்படாதீர்கள். இன்று போல் என்றுமே உங்கள் திருமண வாழ்வு என்றுமே இந்த அளவுக்கு இனித்ததில்லை. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 8, அதிர்ஷ்ட திசை தெற்கு, அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கிறது.

மகரம்
எதிர்காலம் பற்றிய தேவையற்ற கவலை உங்கள் மனநிலையை பாதிக்கும். ஏக்கத்துடன் எதிர்காலத்தை சார்ந்திருப்பதைவிட, இப்போதைய நேரத்தை அனுபவிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் இதயத்தை ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். உங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான். சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் - அது கடினமாகவும் - ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். இன்று உங்களடைய அதிர்ஷ்ட திசையாக மேற்க திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

கும்பம்
உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, முடிந்தவரை சீக்கிரத்தில் அச்சத்தைப் போக்கிட வேண்டும். உங்கள் ஆரோக்கியம் திடீரென கெட்டு, நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளம் பெருகும். காதல் விவகாரத்தில் அடிமையைப் போல இருக்காதீர்கள். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முடிவுகள் இறுதி செய்யப்படும். புதிய முயற்சிகளுக்கான திட்டங்கள் முடிவடையும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான பிணக்குகளுக்கு பிறகு உங்கள் துணையின் அன்பான கவனிப்பு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட எண் 5, அதிர்ஷ்ட திசை வடக்கு, அதிர்ஷ்ட நிறம் இளஞ்சிவப்பு.

மீனம்
இது உங்களுடைய அதிர்ஷ்டமான நாட்களில் ஒன்றல்ல. எனவே இன்று வார்த்தைகளில் கவனம் தேவை. சிறிய உரையாடலும்கூட நாள் முழுக்க இழுத்து வாக்குவாதங்களாகி, மன அழுத்தத்தை அதிகமாக்கலாம். ஆசிகளும் நல்ல அதிர்ஷ்டங்களும் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும் - முந்தைய நாட்களின் கடின உழைப்புகளுக்குப் பலன்கள் கிடைக்கும். உங்கள் முயற்சி மற்றும் கடமை உணர்வை குடும்பத்தினர் பாராட்டுவார்கள். காதலரை பரஸ்பரம் புரிந்து கொள்ள அவருடன் நீங்கள் நேரத்தை செலவிட வேண்டும். விஷயங்கள் தானே நடக்கும் என காத்திருக்காதீர்கள். வெளியில் சென்று புதிய வாய்ப்புகளைத் தேடுங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று நீங்கள் இருவரும் மீண்டும் காதலில் விழுவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண் 5, அதிர்ஷ்ட திசை 5,அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த பச்சை.



Click it and Unblock the Notifications











