Latest Updates
-
வார ராசிபலன் (03 May 2026-09 May 2026)- இந்த வாரம் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
நேபாளி ஸ்டைல் சிக்கன் சுகௌனி - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
பிஜ்னோர் சம்பவம்: லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் கவனத்திற்கு! உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி? -
சனி, குரு, ராகு-கேதுவின் நிலைகளால் 2027 வரை ராஜயோகத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
பிஜ்னோரில் நடந்த கொடூரம்! லிவ்-இன் உறவில் இந்த அறிகுறிகள் தெரிந்தால் உஷார், இல்லையென்றால் ஆபத்து! -
கோடையில் பால் போன்ற சருமம் வேண்டுமா? அப்ப இந்த மைதா ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்!
12 ராசிகளும் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அதிர்ஷ்டம் யார் பக்கம் இருக்கும்?
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
வீட்டுக்கு விலையுயர்ந்த பொருள்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். வியாபாரங்களில் நிலுவையில் இருந்து வந்த பாக்கிகளை வசூலித்து முடிப்பீர்கள். உங்களுடைய முக்கியப் பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது தான் நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
உயர் அதிகாரிகளின் மூலமாக உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வாகனங்களுக்கு பராமரிப்புக்காக அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் சிறு சிறு மனக்கசப்புகள் வந்து போகும். புதிய வேலைகளுக்கான முயற்சிகள் ஈடேறும் நாளாக இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
தொழில் சம்பந்தமான முதலீடுகளில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த தன வரவு உங்களுடைய கைகளுக்கு வந்து சேரும். தொழிலில் உங்களுக்கு ஏற்ற திருப்திகரமான சூழல்கள் உருவாகும். நண்பர்களுடைய ஆதரவும் முழு உதவியும் உங்களுக்குக் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
பெரியோர்களுடைய பேச்சுக்களுக்கு மரியாதை கொடுத்து நடப்பது மிகவும் மேன்மை தரும். உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களிடம் கொஞ்சம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டிகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் உண்டாகும். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
மனதுக்குள் இதுவரைக்கும் இருந்து வந்த கவலைகள் நீங்கி, மனம் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வெளியூா பயணங்களில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். இப்போது இருக்கின்ற இடத்தை மாற்றம் செய்வதற்கான சிந்தனைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
நீங்கள் எதிர்பார்த்த தன வரவுகள் கைக்கு வந்து சேரும். நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பு உயர்ந்து கொண்டே போகும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களுடைய பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
வீடு மற்றும் வாகனங்களை மாற்றம் செய்கின்ற எண்ணங்கள் வந்து மேலோங்கும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகமாகும். பிறருடைய வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். பதட்டமான சூழலால் செய்கின்ற வேலைகளில் கொஞ்சம் கால தாமதம் உண்டாகலாம். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
குடும்ப உறுப்பினர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழிலைப் பொறுத்தவரையில், உற்பத்தி மற்றும் விற்பனை இரண்டுமே மிதமான அளவிலேயே இருக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களுக்கு இருந்த மதிப்பு கூடிக்கொண்டே போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
இதுவரை இருந்து வந்த சிறுசிறு நெருக்கடியான சூழல்கள் அகலும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். எதிர்ப்பாகளால் இதுவரை இருந்து வந்த இன்னல்கள் குறைய ஆரம்பிக்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தடைபட்ட காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
பரம்பரை சொத்துக்களின் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளுடைய நற்செயல்களினால் பெற்றோர்களுக்கு பெருமைகள் உண்டாகும்.நண்பர்களுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். பணிகளில் இருந்து வந்த இடர்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். தொழிலில் உங்களுக்கு முன்னேற்றமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
தொழிலில் திட்டமிட்ட பணிகளை நிவேற்றுவதற்கு கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடுகின்ற போது, யாரையும் புண்படுத்தி விடாமல் நிதானமாகச் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்களில் இதுவரையில் இருந்து வந்த தடைகள் விலக ஆரம்பிக்கும். நிலுவையில் இருந்து வந்த காரியங்களை மிகச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எதிர்கால பணிகள் குறித்த செயல்களும் சிந்தனைகளும் மேலோங்கும். அலைச்சல்கள் இருக்கும். ஆனாலும் அதற்கேற்ற அனுகூலங்களும் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.



Click it and Unblock the Notifications