Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
உங்க ராசிய சொல்லுங்க... இன்னைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் எந்த திசையிலருந்து வருதுனு சொல்றோம்...
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.
உங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.

மேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்
தொழிலில் வாடிக்கையாளர்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்குளிடம் பணிவாக நடந்து கொண்டால் அவர்களுடைய ஆதாயங்கள் உங்களுக்குக் கிடைக்கும். செய்யும் சுய தொழில் மூலம் உங்களுடைய செல்வாக்கு உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

ரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20
வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேரும். வாகன விருத்தி ஏற்படும். மனதில் புதுவித புத்துணர்ச்சியுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். பணியில் உயர் அதிகரிகளால் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் நீங்கள் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்திடுங்கள். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

மிதுனம்: 22 மே – 21 ஜூன்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களிடம் ஆதரவு பெருக ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையில் கொஞ்சம் பதட்டமான சூழலே அமையும். திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய வர்த்தகங்கள் சம்பந்தப்பட்ட முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

கடகம்: 22 ஜூன் - 22 ஜூலை
உத்தியோகத்தில் இருக்கின்றவர்களுக்கு பணியில் எதிர்பார்த்த இடமாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களுடைய வேலைகளையும் சேர்த்து செய்ய வேண்டிய சூழல்கள் உருவாகும். வேலையில் முக்கிய பிரபலங்களுடைய அறிமுகங்கள் கிடைக்கும். வீட்டில் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறைய ஆரம்பிக்கும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

சிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்
உங்களுக்கு நீங்களே எதிர்பாராத உதவிகள் கூட கிடைக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான துறையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிர் பாலினத்தவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சுய தொழில் புரிகின்றவர்களுக்கு புதுப்புது வாய்ப்புகள் வந்து சேரும். உங்களுடைய உடமைகளில் மிகுந்த கவனம் செலுத்துங்கள். தொழிலுக்கு உங்களுடைய உடன் பிறந்தோர் மற்றும் குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் இருக்கும்.

கன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்
பயணங்களின் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொது சேவைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நினைத்த செயல்களை பல்வேறு தடைகளையும் தாண்டி, சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

துலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்
நீங்கள் வெளியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பண வரவுகள்கைக்கு வந்து சேர கொஞ்சம் கால தாமதம் ஏற்படும். வீட்டில் உள்ளவர்களால் உருவான மனக்குழப்பங்கள் தீர்ந்து போகும். வியாபாரம் சம்பந்தப்பட்ட புதிய தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தாய்வழியிலான உறவினர்களால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான செயல்திட்டங்களைத் தீட்டுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 7 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்
வாகனப் பயணங்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். மூலிகைகள் சம்பந்தப்பட்ட தொழிலில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வேலை சம்பந்தப்பட்ட முயற்சிகளில் நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்திகள் காதுக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் இருக்கும்.

தனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்
மனதில் தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட புதிய முயற்சிகளில் உங்கள் திட்டங்கள் அனுகூலமான பலன்களை உண்டாக்கும். தொழிலில் உடன் பிறந்தவர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களால் மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். பெரியோர்களுடைய முழு ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக நல்ல செய்திகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெறடகு திசையும் இருக்கும்.

மகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி
வியாபாரங்களில் உங்களுடைய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய பலம் மற்றும் பலவீனத்தை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பதால் நற்பெயர் உண்டாகும். வெளியூர் சம்பந்தப்பட்ட தொழில் முயற்சிகள் கைகூடி வரும். பயணங்களின் மூலமாக அலைச்சல்கள் ஏற்பட்டாலும் தொழில் அனுபவங்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

கும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உங்களுடைய நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பயணங்களில் கொஞ்சம் நிதானமாக இருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். பொது பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கவும்.

மீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்
வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் இருந்து வந்த தாமதங்கள் நிறைவேற ஆரம்பிக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். செலவுகளைக் குறைத்து சேமிப்பைப் பெருக்குவீர்கள். உடன் பிறப்புகளின் மூலமாக அனுகூலமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த சில காரியங்கள் பல தடைகளைக் கடந்து நிறைவு பெறும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.



Click it and Unblock the Notifications











