For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவபெருமானுக்கும், சுடுகாட்டிற்கும் உள்ள சம்பந்தம்?

|

" தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! ஆரூர் அமர்ந்த அரசே போற்றி! சீரார் திருவையார போற்றி! போற்றி! ".மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானை பற்றி அனைவரும் அறிவோம். சைவ சமயத்தின் கடவுளாக கருதப்படும் அவரை உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் வழிபடுகின்றனர். அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். இதனை உணர்த்தும் பிரம்மா மற்றும் விஷ்ணுவும் பங்கேற்ற போட்டியை பற்றி நாம் அறிவோம்.

What is the connection between Lord Shiva and graveyard?

சர்வ வல்லமையும் பொருந்திய சிவபெருமான் ஏன் தோலுடை தரித்து சுடுகாட்டில் இருக்கிறார் என்று யோசித்துள்ளீர்களா?. மும்மூர்த்திகளுள் மற்ற இருவரும் கண்ணை பறிக்கும் விதத்தில் தரிசனம் கொடுப்பதும் சிவபெருமான் மிகவும் எளிமையாக இடுப்பில் ஒரு தோலுடையுடன் கழுத்தில் சர்ப்பத்துடன் காட்சியளிக்கிறார். ஈசனின் ருத்ரதாண்டவம் கூட சுடுகாட்டில்தான் நடக்கும் என்று புராணங்கள் கூறுகிறது. அப்படி ஈசனுக்கும் சுடுகாட்டிற்கும் என்னதான் சம்பந்தம். இந்த கேள்விக்கு பதிலை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவபெருமான்

சிவபெருமான்

கோபக்கார கடவுளாக கருதப்படும் சிவபெருமான் உண்மையில் கோபக்காரர் மட்டுமல்ல தன் பக்தர்களுக்கு வரங்களை அள்ளித்தரக்கூடியவர். உண்மையான பக்தி இருந்தால் போதும் சிவபெருமானின் அருளை அடைந்து விடலாம். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இலங்காதிபதி இராவணேசுவரன் ஆவார். இராவணன் குணத்தில் அரக்கனாக இருந்தாலும் அவனின் சிவபக்தி ஈடு இணையில்லாதது. அதனால்தான் ஈசன் அவனுக்கு வரங்களை அள்ளித்தந்தார். அதேபோலத்தான் அவரின் கோபமும் அவரின் நெற்றிக்கண் திறப்பின் தீயசக்திகள் அழிவது நிச்சயம். அதனால்தான் அவர் ருத்ரமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

தியானம்

தியானம்

சிவபெருமான் பெரும்பாலும் தியானத்தில்தான் இருப்பார். அவர் தியானத்தில் இருக்கும் இடங்கள் இரண்டுதான் ஒன்று கைலாயம் மற்றொன்று சுடுகாடு. கைலாயம் அளவிற்கு சுடுகாடு புனிதமானதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஆனால் சிவபெருமானுக்கு பிடித்த இடம் மட்டுமின்றி தன் கடைமையை செய்யும் இடமாகவும் அதைதான் கருதுகிறார். அதற்கு வலுவான காரணமும் உள்ளது.

உயிர்

உயிர்

மனிதன் வாழ்வதின் அடையாளம், உயிர் பிரிந்தால் மனிதன் வெறும் கூடுதான். அதன்பின் அந்த கூட்டிற்கு உயிரில்லை. உயிரினமாய் கருதப்படும் மனிதன் வெறும் பிணமாய் எடுத்துச்செல்லப்பட்டு சிதையூட்டப்படும் இடம்தான் சுடுகாடு.சிவபெருமான் ஏன் சுடுகாட்டில் இருக்கிறார் என்பதற்கு பலரும் நினைக்கும் காரணம் அவர் அழிக்கும் கடவுள் அதனால்தான் சுடுகாட்டில் இருக்கிறார் என்பதுதான். உயிர் எடுக்கும் எமன் சுடுகாடு செல்ல காரணமாக இருந்தால், அழிக்கும் சிவன் சுடுகாட்டில் காத்திருப்பார் என்பார்கள். ஆனால் உண்மையில் காரணம் அதுவல்ல.

காரணம்

காரணம்

உயிர் பிரிந்து உடலை சுடுகாட்டிற்கு தூக்கி செல்லும்போது அந்த ஆன்மா தன் இறப்பை நினைத்து வருந்தி அதன் உடலை சுத்தி சுத்தி வரும். இறப்பு என்பது உயிரை சுமந்த கூட்டிற்குத்தானே தவிர அந்த உயிருக்கு இல்லை. தான் இதுவரை வாழ்ந்துவந்த உடல் இனி தனக்கில்லை என்னும்போது இந்த கலக்கம் ஏற்படத்தானே செய்யும். தான் வாழ்ந்த கூட்டை தன் உறவினர்கள் எரித்து அதை திரும்பி கூட பார்க்காமல் செல்வதை கண்டு ஆன்மா வருத்தமடையும்போது அதற்கு ஆறுதலாய் ஈசன் அங்கிருப்பார்.

ஈசனின் கருணை

ஈசனின் கருணை

உயிருடன் இருக்கும்போது மனிதனுக்கு தேவையான கல்வி, செல்வம், புகழ் போன்றவற்றை மற்ற கடவுள்கள் பார்த்துக்கொள்ளலாம், ஆனால் மறுமையில் தவிக்கும் ஆன்மாவை தன்னுடன் இணைத்துக்கொண்டு அதற்கு முக்தி அளிக்கும் கருணைமிகு செயலை ஈசன் செய்கிறார். இதனை உணர்த்தும் வகையில் தேவாரத்தில் " உற்றார் அருளரோ உயிர்கொண்டு போகும்போது குற்றாலத்துறை கூத்தாநல்லாள் நமக்குற்றார் அருளோ" என்னும் பாடல் உள்ளது. அதாவது நம் சொந்தங்கள் அனைத்தும் நம்மை விட்டு செல்லும் நேரத்தில் நமக்கு அருள்புரிய வந்தார் கூத்தநல்லான் சிவபெருமான் என கூறுகிறது தேவாரம்.

சுடுகாட்டில் ஆடும் சடையன்

சுடுகாட்டில் ஆடும் சடையன்

சிவபெருமானை பின்பற்றும் பலரும் காசி போன்ற புனிதத்தலங்களில் அவரை போன்றே தோலாடை உடுத்தி கங்கை கரையில் பிணங்களை சிதையூட்டும் இடத்தில இருப்பதை பார்க்கலாம். ஏனெனில் அவர்கள் நம்புகிறார்கள் சிவபெருமான் அங்கே எழுந்தருளியிருக்கிறார் என்று. இம்மையில் மட்டுமில்லாது மறுமையிலும் நம்மை காக்கும் கடவுளை சுடுகாட்டில் ஆடும் சடையன் என கூறுவது நமது அறிவீனத்தின் அடையாளம்தான். உயிருடன் இருக்கும்போது சிவபெருமான் மீது முழுமையான பக்தி கொண்டவர்கள் இறந்த பிறகு அவருடன் கைலாயத்தில் இணையலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is the connection between Lord Shiva and graveyard?

According to Hindu religion Lord Shiva is god of destruction. When Vishnu and Brahma stay in Vaikunta and Sathyaloka why Lord Shiva stays in the graveyard? There is a big reason behind this
Story first published: Saturday, July 28, 2018, 14:10 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more