TRENDING ON ONEINDIA
-
ஒரே நேரத்தில் ஆலோசனை.. அமைச்சர்களுடன் முதல்வர்.. நிர்வாகிகளுடன் விஜயகாந்த்.. க்ளைமேக்ஸ் ரெடி?
-
சல்மான் கான் வழங்கிய 2 கோடி ரூபாய் காரை பயன்படுத்த மறுத்த தாய்... காரணம் தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
-
தரம் தாழ்ந்து போன ஸ்ரீ ரெட்டி: கண் கூசும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டார்
-
எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டும்தான்...
-
2024: மும்பை - புனே வழித்தடத்தில் ஹைப்பர்லூப் போக்குவரத்து உறுதி.!
-
தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்!
-
குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..? அப்படி என்ன இருக்கு..!
-
பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
உண்மையில் காலை 3 மணிதான் பேய்களின் நேரமாம் ஏன் தெரியுமா?
தூக்கம் என்பது அனைவருக்கும் பிடித்த அதேசமயம் அவசியமான ஒன்றாகும். பெரும்பாலும் தூங்க ஆரம்பித்துவிட்டால் அடுத்தநாள் காலைதான் பலரும் எழுந்திருப்பார்கள். ஆனால் இப்பொழுது மாறிவரும் வாழ்க்கை முறையில் இரவு விழித்திருப்பதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். உங்களுக்கும் அந்த பழக்கம் இருந்தாலும் விழித்திருக்கவோ அல்லது எழவோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அந்த நேரம் சாத்தானின் நேரம் என்றழைக்கப்படுகிறது.
அந்த நேரம் அதிகாலை 3 மணி ஆகும். நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென நடுஇரவில் வியர்த்து எழுந்து பார்த்தால் அப்பொழுது நேரம் 3 மணியாக இருந்தால் உங்கள் நிழலில் கூட ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். நீங்கள் விடும் மூச்சுக்காற்றில் கூட பயம் கலந்திருக்கும். ஏனெனில் இந்த நேரத்தில் தீயசக்திகளின் சக்தி பலமடங்கு அதிகரித்திருக்கும். இந்த சாத்தான் நேரம் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏன் இந்த நேரம்?
அதிகாலை 3 மணியானது சாத்தானின் நேரமாக கருதப்படுகிறது. அதன்படி நரகத்திற்கு செல்லாத தீயசக்திகளும், ஆன்மாக்களும் இந்த நேரத்தில் அவை அதிக சக்தியுடன் இருக்கும். இந்த நேரத்தில் முழித்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
3 முதல் 4 மணி வரை
அதிகாலை 3 மணிக்கு பேய்களின் நடவடிக்கைகளும், நடமாட்டமும் அதிகமாக இருக்கும். இது 3 மணி முதல் 4 மணி வரை நீடிக்கும். இது உலகம் முழுவதும் பேய்களின் நேரமாக கருதப்படுகிறது.
இயேசு சிலுவையில் அறையப்பட்டது
மேற்கு நாடுகளின் படி இயேசு சிலுவையில் அறையப்பட்டது பகல் 3 மணி என கூறப்படுகிறது. தற்போது இது தெய்வீகமான நேரமாக கருதப்படுகிறது. சரியாக 12 மணி நேரம் கழித்து அதிகாலை 3 மணிக்கு சாத்தான்களின் சக்தி அதிகரிக்கிறது.
சடங்குகள்
அதிகாலை 3 மணி என்பது பல்வேறு சடங்குகளும், சூனியங்களும், ஏவல்களும் செய்யக்கூடிய நேரமாகும். ஏனெனில் இந்த நேரத்தில் அவர்களையாரும் பார்க்க இயலாது அதேசமயம் அவர்கள் வணங்கும் தீயசக்திகளும் முழுபலத்துடன் இருப்பார்கள். பல படங்களில் சரியாக 3 மணிக்கு பேய் வருவது போல காட்சி இருக்கும். குறிப்பாக பிரபலமான கான்ஜுரிங்க் படத்தில் சரியாக 3 மணிக்கு கடிகாரம் நின்றுவிடும், அதற்கு பின்தான் பேயின் ஆட்டம் தொடங்கும் அதற்கு காரணம் இதுதான்.
MOST READ: சிறுநீர் கொஞ்சமா சொட்டு சொட்டா வருதா? காரணம் என்ன? அது எதோட அறிகுறி?
இரவில் முழிப்பது
ஒருவேளை எதாவது ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு நீங்கள் மூலிகை நேர்ந்தால் உடனடியாக படுக்கைக்கு சென்றுவிடுங்கள். எந்த காரணத்தை கொண்டும் வெளியில் செல்ல முயற்சிக்காதீர்கள். ஏனெனில் எந்தவித அசாதாரண நிகழ்ச்சிகள் வேண்டுமென்றாலும் இந்த நேரத்தில் நடக்கலாம்.
சூனியத்திற்கான நேரம்
சூனியக்காரர்களுக்கும், துர்தேவதைகளை வணங்குபவர்களுக்கும் 3 மணி நேரமான மிகவும் பிடித்த நேரமாகும். ஏனெனில் அந்த நேரத்தில்தான் ஆன்மாக்கள் ஓ இடத்தில் கூடும் அவற்றின் பலமும் அதிகரிக்கும். நாம்தான் பேய்களுக்கான நேரம் என்று தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் கூறும் மந்திரங்கள், சடங்குகள் அனைத்தும் இருமடங்கு பலத்துடன் இருக்கும்.
மதரீதியான கதைகள்
பழங்காலம் முதலே அனைத்து கலாச்சாரங்களிலும், மதங்களிலும், வேதங்களிலும் 3 மணி என்பது பயத்தை அதிகரிக்கக்கூடிய நேரமென்று கூறப்பட்டுள்ளது. எதார்த்தத்திலேயே 3 மணி என்பது உங்களுக்கு பயத்தையும், பதட்டத்தையும் உண்டாக்கும்.
நடைமுறை வாழ்க்கை
அறிவியல்ரீதியாக இந்த சாத்தானின் நேரத்தை பற்றி எந்த ஆதாரங்களும் இல்லை. ஏனெனில் அமானுஷ்யம் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதுதானே. பொதுவாக நாம் தூங்கும்போது நம் உடல் முழுவதும் தளர்வான நிலையில் இருக்கும். இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் என அனைத்தும் சீராக இருக்கும். இப்படி இருக்கும்போது திடீரென எழுவது உங்களுக்குள் பலவித உணர்வுகளையும், பயத்தையும் ஏற்படுத்தும். இது உளவியல்ரீதியாகவும் உங்களுக்குள் பாதிப்பை ஏற்படுத்தும். பேய் இல்லை என்று எவ்வளவு தைரியமாக பேசினாலும் 3 மணிக்கு எழும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு பயம் எழும் என்பது உண்மைதான்.
MOST READ: முட்டைகோஸ் சாப்பிட்டால் தைராய்டு பிரச்சினை ஏற்படும் என்பது உண்மையா?