For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிவனிடம் எந்தெந்த வேண்டுதலுக்கு என்னென்ன மலர்களை வைத்து வழிபட வேண்டும்?

|

ஷ்ரவண் மாதம் சிவனுக்கான மாதம். பக்தர்கள் அவரை அர்ப்பணிப்போடு வணங்குகிறார்கள் மற்றும் தங்கள் ஆசைகளை நிறைவேற்றக்கோருகிறார்கள் .

கோயில்களுக்கு விஜயம் செய்வதில் இருந்து விரதங்களை கவனிப்பதில் இருந்து, பக்தர்கள் தெய்வத்தை திருப்திப்படுத்த தங்களால் முடிந்ததை முயலுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவபூஜை மலர்கள்

சிவபூஜை மலர்கள்

சிவபெருமான் மிகச்சிறிய பிரசாதங்களால் கூட மகிழ்வார் என்று நம்மில் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். அவருக்கு பிடித்த ஒரு சில மலர்களை மட்டுமே அளிப்பதன் மூலம்கூட ஒரு நபர் தனது விருப்பப்படி அவருடைய ஆசியைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது. இன்று நாங்கள் சிவனுக்குப் பிடித்த சில மலர்களை உங்களுக்கு சொல்லப்போகிறோம். அவற்றை சமர்ப்பித்து இறைவனின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.

MOST READ: எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?

வாகன் சுகா' (ஆடம்பரங்கள் மற்றும் வாகனங்கள்):

வாகன் சுகா' (ஆடம்பரங்கள் மற்றும் வாகனங்கள்):

வாகன் சுகா என்பது ஜாதகத்தில் வாகனயோக நிகழ்வைக் குறிக்கிறது, இதன் காரணமாக ஒருவர் வாகனங்களின் வசதியை பெறுகிறார். அவர் ஒரு வாகனத்தை சொந்தமாக வைத்திருக்கிறாரா இல்லையா என்பது தேவையில்லை, நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் உதவியுடன், அவர் தனது சொந்த முயற்சியின்றி ஒரு வசதியான பயணத்தை அனுபவிப்பார். இந்த யோகம் அவரது ஜாதகத்தில் இல்லாதபோது அவரால் சொந்தமாக வாகனம் வாங்க முடியாது அல்லது மற்றவகையிலும் அதன் சுகத்தை அனுபவிக்கமுடியாது. வாஹன் சுகா யோக ஆசீர்வாதத்தை நீங்கள் சிவனிடமிருந்து பெற அவருக்கு மல்லிகைப் பூக்களை வழங்க வேண்டும். இது மேலும் சில பயன்களையும் உங்களுக்கு வழங்கலாம் .

தன் வைபவ் (செல்வத்தை சம்பாதிக்க):

தன் வைபவ் (செல்வத்தை சம்பாதிக்க):

ஒரு நபரின் வாழ்க்கையில் செல்வத்தை ஊடுருவச் செய்யும் யோகம்தான் வைபவ் தான். சங்குப்பூ, வில்வ இலைகள் மற்றும் தாமரை மலரை சிவனுக்கு வழங்குங்கள். நட்சத்திரங்கள் ஏற்கனவே உங்களுக்கு ஆதரவான இடத்தில் இருந்தால் நீங்கள் பணக்காரர்களாகி விடுவதற்கான வாய்ப்பை இது அதிகரிக்கும். உங்களுக்கு ஆதரவாக இல்லாத போதும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். சிவனிற்கு வழங்கப்படும் ஒரு வில்வ இலை அதிக செல்வத்தை சம்பாதிக்க உதவுகிறது. மல்லிகை மலர்களை வழங்குவதன் மூலம் மக்களுக்கு செழிப்பு, போதுமான செல்வம், உணவு ஆகியவை வீட்டில் நிரம்புகிறது.

MOST READ: நீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும்

விரைவாக திருமணம் செய்ய

விரைவாக திருமணம் செய்ய

திருமணம் தாமதமாக பல காரணங்கள் இருக்கலாம். ஒரு வில்வ மலரை சிவனுக்கு வழங்குவதால் திருமணத்திற்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகிறது. சிலர் பொருத்தமான ஜோடியைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம், மற்றவர்கள் திருமணத்திற்கு பொருத்தமான தேதியைக் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். வில்வ இலையை வழங்குதல் அந்தச் சிக்கலை தீர்க்கும். இதனால், ஜோடிக்கு இடையே பொருந்தக்கூடிய தன்மை அதிகரிக்கிறது.

மன அழுத்தம் நீக்க

மன அழுத்தம் நீக்க

அனைத்து வகையான பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகள் நடைமுறை நவீன வாழ்க்கையில் பொதுவான ஒன்று. இருப்பினும், பிரச்சினைகள் வாழ்வின் அவசியமான பகுதியாகும், ஏனென்றால் அவைகளே வெற்றியின் படிப்படியான கற்கள். ஆனால் அவைகளைக் கையாள்வது சில நேரங்களில் ஒரு கடினமான பணியாக மாறும். எனவே, அத்தகைய பிரச்சனைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து எளிதில் நீக்க "பவளமல்லி" (இரவில் பூக்கும் மல்லிகை) மலரை சிவனுக்கு வழங்க வேண்டும்.

MOST READ: இந்த ஆறில் உங்க உள்ளங்கை எந்த கலர்னு சொல்லுங்க... உங்க விதி எப்படினு தெரிஞ்சிக்கோங்க...

சமூக மரியாதை பெறுவதற்கு

சமூக மரியாதை பெறுவதற்கு

மரியாதை மற்றும் உயர் பதவிகளைப் பெறுவதற்கு, சிவன் சிலைக்கு ஆகஸ்ட் மலர்களை வழங்க வேண்டும். அரளி மலர்களை அவருக்கு அர்ப்பணிப்பதன் மூலம், தடைகளைத் தாண்டி வெற்றியை எட்டலாம். துணிமணிகள் மற்றும் ஆபரணங்களை விரும்புகிறவர்கள் சிவனிற்கு செவ்வரளிப் பூக்களை வழங்க வேண்டும்.

நீண்ட ஆயுளுக்காக:

நீண்ட ஆயுளுக்காக:

ஷ்ரவண் மாதத்தில் அருகம்புல்லை சிவனுக்கு வழங்குவதால் ஒருவர் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. ஆரோக்கியமான நீண்ட ஆயுள் வேண்டும் என்று சிவனை வேண்டிக் கொண்டால், அருகம்புல்லை வைத்து வணங்குங்கள்.

MOST READ: பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்?

மோட்சம்

மோட்சம்

வாழ்க்கையில் அமைதிக்காகவும் மரணத்திற்குப் பிறகு அமைதிக்காகவும் வேண்டிக் கொள்பவர்கள் சிவனுக்கு வெள்ளைத் தாமரையைக் கொடுப்பதன் மூலம், தற்போதைய வாழ்க்கையில் அமைதியையும், மரணத்தின் பின் இரட்சிப்பையும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Which Flowers Should We Offer To Shiva?

we are going to tell you some flowers which you should offer to Shiva for his blessings.
Story first published: Thursday, October 11, 2018, 12:30 [IST]