Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல நேரம் தேடிவருமாம்...! -
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
இன்று முதல் அடுத்த 30 தேதிவரை 12 ராசிக்களுக்கும் என்னென்ன நடக்கும்?... இதோ ஒரு அலசல்...
வார ராசிபலன்கள் 24.9.18 to 30.9.18 வரை இந்த ஒரு வாரத்துக்கு 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிலும் புரட்டாசி என்பது பெருமாளுக்குரிய சுப மாதங்களுள் ஒன்று. அது என்ன
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள்.

ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும், அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது. 9 கோள்களும் எப்படி இயங்குகின்றனவோ அதை வைத்து, நம்முடைய வாழ்க்கையைக் கணிக்கிற முறை தான் இந்த ஜோதிடம். அந்த ஜோதிடத்தில் இந்த வாரம் 24.9.18 முதல் 30.9.18 வரையிலும் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மேஷம்
தொழில் சம்பந்தமான ஆக்கப்பூாவமான பணிகள் மற்றும் யோசனைகள் உங்கள் மனதுக்குள் தோன்றும். நீங்கள் எதிர்பாரத செலவுகள் உங்களுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திட்டமிட்டபடி, காரியங்களை நிறைவேற்ற முடியாமல் கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமே இருக்காது. கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கங்களும் அன்பும் அதிகரிக்கும். வீட்டில் பிள்ளைகளுடைய தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். உங்களுக்கு திருப்திகரமான பண வரவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. நண்பர்களின் மூலமாக உங்களுக்குப் போதிய உதவிகள் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

ரிஷபம்
தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் திட்டமிட்ட செயல்களை நினைத்தபடி முடிப்பது உங்களுடைய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, உங்களுடைய மனதுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும். உங்களுடைய வார்த்தைக்கு வெளியிடங்களில் உங்களுக்கு மதிப்புகள் பெருகும். பிள்ளைகளின் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமையும் பொறுப்புகளும் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் வாரம் இது. பணிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட எதிர்ப்புகள் விலகிப் போகும். எந்த காரியமாக இருந்தாலும் அதற்குமுன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்துச் செயல்படுங்கள்.

மிதுனம்
உங்களுடைய வியாபாரத்துக்குத் தேயைான பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். வருமானத்துக்கு உரிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் விருப்பமில்லாத இடமாற்றங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி, மகிழ்ச்சி அடைவீர்கள். திருமணம் தொடர்பான முயற்சிகள் உங்களுக்குக் கைகூடி வரும். நீங்கள் கையிலெடுத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான நிலை காணப்படும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். எந்த வேலையையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கடகம்
எடுத்த காரியத்தை சரியாகத் திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணவரவுகள் உங்களுக்குக் கிடைக்க காலதாமதமாகும். தாயினுடைய உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புண்ணிய யாத்திரைகள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சொத்து விவகாரங்களில் நிதானம் வேண்டும். வியாபாரங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். உங்களுடைய உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்க கொஞ்சம் காலதாமதமாகும். சக ஊழியர்களால் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வால் மனம் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள்.

சிம்மம்
நீங்கள் எடுத்த முயற்சியால் லாபங்கள் கிடைக்கும். பேசுகின்ற பொழுது, கொஞ்சம் நிதானமாக இருங்கள். நீங்கள் திட்டமிட்ட பணிகளை இனிதே நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பயனற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீட்டில் பிள்ளைகளுடைய முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலைச்சல்களின் மூலம் உடல் சோர்வு ஏற்படும். குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருவது மனதுக்கு அமைதியைக் கொடுக்கும். பல பிரச்சினைகளுக்குத் தீர்வு உண்டாகும். உங்களுடன் இருப்பவர்கள் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

கன்னி
உறவினர்களுடைய உதவி உங்களுககுக் கிடைக்கும். கூட்டாளிகளின் உதவியினால் உங்களுக்கு தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியுாகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதை சமாளிக்க முயற்சி செய்யுங்கள். புதிய நட்பால் உங்களுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களுடைய ஆதரவினால் மன நிம்மதி உண்டாகும். மற்றவர்குளுடைய பிரச்சினைகளில் தலையிடுகிற பொழுது, கொஞ்சம் கவனம் வேண்டும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அருள் தருகின்ற வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.

துலாம்
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு திருப்தி தரும். மனச்சோர்வுகள் நீங்கும். எதையும் சாதிக்கின்ற அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி அதன்மூலமாக மதிப்பும் செல்வாக்கும் கிடைக்கப் பெறுவீர்கள். நீங்கள் எடுக்கின்ற முயுற்சிகளில் கால தாமதமின்றி வெற்றி கிடைக்கும். விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். குடும்பத்தில் தேவையில்லாத வீண் குழப்பங்கள் வந்து போகும். வழங்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் ஏற்படும்.

விருச்சிகம்
மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்க்ள நீங்கி, தெளிவு பிறக்கும். தடைபட்டு வந்த செயல்களைச் செய்து முப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிதாக மனைகள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் உங்களுக்கு மேலோங்கி நிற்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். செய்கின்ற வேலைகளில் மேன்மைகள் உண்டாகும். பயணங்களால் மாற்றங்கள் ற்படும். வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாவதற்காக பல புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். நண்பர்களுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வேலை பார்க்கின்ற இடத்தில் பொருள்களை கவனமாகக் கையாள வேண்டும். மனதுக்குள் ஒருவிதமான கவலைகள் தோன்றி மறையும்.

தனுசு
நீங்கள் எடுக்கின்ற முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உண்டாகும் முன்னேற்றங்கள் உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். விருப்பங்கள் மற்றும் தேவைகளை் அனைத்தும் நிறைவுறும். கடன்கள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெள்வட்டாரத் தொடர்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகளின் மூலமாக தொழிலில் அபிவிருத்தி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.

மகரம்
எதையும் எளிதாகச் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். பண நெருக்கடியும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சொத்துக்களினால் சில வீண் விரயச் செலவுகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் யோசித்து முடிவெடுங்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உங்களுக்குப் பெருமு் நன்மையைத் தரும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ருத்து வேறுபாடுகள் உருவாகும். பிறருக்கு வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணிகளில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

கும்பம்
உத்தியோகத்தில உள்ளவர்கள் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவீர்கள். பெரியோர்களுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வாகன யோகங்கள் உண்டாகும். திட்டமிடுவதில் உங்களுக்குப் பின்னடைவு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய சாதுர்யத் திறமையினால் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நண்பர்களின் மத்தியில் உங்களுடைய செல்வாக்குகள் உயரும். அந்நியர்களிடம் பெசுகின்ற போது கொஞ்சம் கவனம் தேவை.

மீனம்
எந்த முடிவையும் கொஞ்சம் நிதானமாக எடுங்கள். வீண் கவலைகளைத் தவிர்த்து விட்டு வேலையில் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுடைய வாக்கு வன்மையினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கையும் மனோதைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேன்மையான சூழலை அடைவீர்கள். தொழிலில் பெற்றோர்குளுடைய ஆதரவு கிடைக்கும். தேவையற்ற எண்ணங்களால் மனக்குழப்பங்கள் உண்டாகும் சகோதரர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பயணங்களால் அலைச்சலும் ஆதரவும் பெருகும்.



Click it and Unblock the Notifications











