For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காந்தியை கொல்ல ஆங்கிலேயர்கள் நடத்திய சதி!

காந்தியை கொல்ல ஆங்கிலேயர்கள் செய்த சதியை முறியடித்த ஓர் சமையல்கலைஞரைப் பற்றியும் அவரின் இன்றைய நிலை குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத கதை.

|

இந்தியாவின் தேசத்தந்தை என்று புகழப்படுபவர் மகாத்மா காந்தி. தேசப்பிதா காந்தி பற்றிய ஏராளமான தகவல்களை படித்திருப்போம். அவருடைய கொள்கைகள், அவர் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக செய்த தியாகங்கள் என ஒவ்வொன்றையும் பல தருணங்களில் நாம் கடந்து வந்திருப்போம்.

இதுவும் காந்தியைப் பற்றிய ஓர் கதை தான். ஆனால் இதில் காந்தியுடன் பயணித்த ஓர் நபர் இதுவரை யாருக்கும் தெரியாத நபரைப் பற்றிய சுவாரஸ்யமான தகவலைத் தான் இங்கே பார்க்கப் போகிறீர்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஜனவரி 30 1948 ஆம் ஆண்டு டெல்லியில் பிர்லா வீட்டில் மாலை பூஜையில் பங்கேற்று திரும்பிய காந்தியை நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

காந்தியின் உடலில் மூன்று குண்டுகள் பாய்ந்திருந்தது. இந்த சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களில் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, காந்தி இறந்த தகவலை மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறித்தார்.

Image Courtesy

#2

#2

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமே காந்தியின் படுகொலை பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது, இந்த கொடுஞ்செயலை செய்த கோட்சேவுக்கும் அவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டிய நாரயணன் ஆப்தே என்பவருக்கும் நவம்பர் 15,1949 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மகாத்மா காந்தியை கொல்ல இதற்கு முன்னரே சதி நடந்திருக்கிறது.

Image Courtesy

#3

#3

இது சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1917 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சம்பவம். பிஹார் மாநிலத்தை சேர்ந்த பதாக் மியான் என்ற சமையல்காரர் தான் அந்த கொலை முயற்சியிலிருந்து காந்தியை காப்பாற்றியிருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி பிஹாரின் கிழக்குப் பகுதியில் இருக்கக்கூடிய மோதிஹரி ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்தார்கள். எல்லாருமே வருகிற ரயிலை எதிர்ப்பார்த்தபடி நின்றிருந்தார்கள். இவர்கள் யாருமே அதில் பயணிக்கப்போவதில்லை அதில் வருகிறவரை வரவேற்கத்தான் அத்தனை பேருமே அங்கே குழுமியிருந்தார்கள்.

Image Courtesy

#4

#4

அந்த ரயிலில் வருகிற காந்தி தான், தங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்தவர் என்று முழுதாக நம்பினார்கள் அந்த மக்கள். மதியம் மூன்று மணி ரயில் மெல்ல அந்த ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கிருக்கும் விவசாய மக்களை பண்ணை ஜமீந்தார்கள் பயிர்களை விடுத்து ஏற்றுமதி செய்ய இண்டிகோவை வளர்த்து தரவேண்டும் என்று நிர்பந்திப்பதாக வந்த புகாரை அடுத்து அதை ஆய்வு செய்யவே காந்தி அங்கே வந்திருக்கிறார்.

Image Courtesy

#5

#5

இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து காந்தி எடுத்து வைத்த முதல் போராட்டம் அது. இங்கிருக்கும் வளங்களை சுரண்டி ஏற்றுமதி செய்பவனுக்கு நான் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று காந்தி சொன்னது ஆங்கிலேயருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. காந்தியால் தான் இந்த மக்கள் எல்லாம் நம்மை எதிர்க்கிறார்கள்.

காந்தியை முதலில் ஒழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.

Image Courtesy

#6

#6

இண்டிகோ செடி உற்பத்திக்கு தலைமை தாங்கும் ஆங்கிலேய அதிகாரியான எர்வின் என்பவர் காந்தியை இரவு விருந்துக்கு வருமாரு அழைத்திருந்தார். அப்போது இப்பிரச்சனை குறித்து சுமூகமாக பேசி முடிக்கலாம் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் அந்த இரவு காந்தியை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்

Image Courtesy

#7

#7

காந்தியை கொல்ல அவர் தேர்ந்தெடுத்தது விஷம் வைத்துக் கொல்வது. எர்வின் தன் சமையல்காரரான பதக் மியானை அழைத்தார். இன்று இரவு காந்தி இங்கே இரவு விருந்துக்கு வரப்போகிறார். அவருக்கு முதலில் குடிக்க ஒரு கிளாஸ் பால் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். முக்கியமான விஷயம் அந்தப் பாலில் நீ விஷம் கலந்து காந்திக்கு கொடுக்க வேண்டும் என்றார் எர்வின்.

இப்படி செய்யவில்லை என்றால் உனக்கு கடுமையான தண்டனைகள் கிடைக்கும் என்றும் மிரட்டினார்.

Image Courtesy

#8

#8

காந்தியின் வரவுக்கு அந்த இல்லம் தயாரானது. எர்வின் வரவேற்பரையில் உட்கார்ந்திருந்தார். இரவு ஏழு மணிக்கு காந்தி மற்றும் ராஜேந்திர பிரசாத் இருவரும் வந்தார்கள். அவரை வரவேற்று உபசரித்த எர்வின் தன் வேலையாளுக்கு சைகை காண்பித்தான். பதக் ஒரு கிளாஸ் பால் கொண்டு வந்து காந்தியிடம் நீட்டினார்.

அந்த டம்ப்ளரை எடுத்த காந்தியிடம், இதில் விஷம் கலந்திருக்கிறது. உங்களைக் கொல்ல இவன் செய்த சதி இதைக் குடிக்காதீர்கள் என்று உண்மையை சொல்லிவிட்டார் பதக்.

Image Courtesy

#9

#9

தன்னைக் கொல்ல நடந்த சதியிலிருந்து காந்தி தப்பித்து அங்கிருந்து வெளியேறினார். தன் திட்டத்தை முறியடித்ததற்காக கோபம் கொண்ட எர்வின், பதக்கை சிறையில் அடைத்து கொடுமைபடுத்தினான். அவன் மட்டுமல்லாது அவனின் ஒட்டுமொத்த குடும்பமே தொல்லைக்கு உள்ளானது.

காலப்போக்கில் பதக்கி தன்னலமற்ற செயலை இந்த உலகம் மறந்து போனது.

Image Courtesy

#10

#10

1950 ஆம் ஆண்டு ராஜேந்திர பிரசாத் அதே ஊருக்கு வருகை தந்தார். அப்போது அவரை வரவேற்க வந்த கூட்டத்தினரிடையே ஓர் முதியவர் தன்னை நோக்கி வர முயல்வதைப் பார்த்த ராஜேந்திர பிரசாத், அவரை பார்த்த நேரத்தில் அவர் தான் அன்றைக்கு காந்தியின் உயிரைக் காப்பாற்றிய பதக் என்பதை உணர்ந்து கொள்கிறார்.

கூட்டத்தை விளக்கி அவர் அருகில் சென்ற ராஜேந்திர பிரசாத் தன்னருகில் உட்கார வைத்து நலம் விசாரிக்கிறார்.

#11

#11

அங்கிருந்த மக்களுக்கு எல்லாம் ஒரே ஆச்சரியம். யாரிந்த முதியவர், ராஜேந்திர பிரசாத் அவர்கள் எதற்காக இவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க, ராஜேந்திர பிரசாத் மக்களிடம் அன்று நடந்த சம்பவத்தையும் அதனால் பதக் மியான் சந்தித்த இன்னல்களையும் விவரித்தார்.அதோடு அவ்வூர் கலெக்டரை அழைத்து பதக்கின் செயலை பாராட்டி அவருக்கு 24 ஏக்கர் நிலம் வழங்குமாரும் உத்தரவிட்டார்.

Image Courtesy

#12

#12

ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. அதிகாரிகள் இழுத்தடித்து வருவதை கடந்த 2010 ஆம் ஆண்டு செய்தியானது.

இதையறிந்த அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ராஜேந்திர பிரசாத் சொன்னதை நிறைவேற்றும் படியும் அதற்கான ரிப்போர்ட்டை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆனால் இன்றும் அது நிறைவேற்றப்படவில்லை. பதக் மியானின் குடும்பத்தினர் இன்றும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Untold Story about a Cook Who refused to give poison to Gandhi

Untold Story about a Cook Who refused to give poison to Gandhi
Story first published: Thursday, June 7, 2018, 15:58 [IST]
Desktop Bottom Promotion