இந்திய மக்களிடம் நேரு குடும்பம் மறைத்த ரகசியம்!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய சுதந்திர வரலாறு பலருக்கும் அறிமுகமாகியிருக்கும். பள்ளிகளில், கல்லூரிகளில் நிறையவே படித்திருப்பீர்கள். வரலாறு என்பது மேம்போகாக கடந்து வரக்கூடிய விஷயமல்ல.

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க அகிம்சை வழியில் போராடியவர் காந்தி. இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நேரு. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடமான நேரு குடும்பத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் தான் இது.

இந்திரா காந்தி நேருவின் மகள் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் அவருடைய பெயர் இந்திரா ப்ரியதர்ஷினி.பின்னர் எங்கிருந்து காந்தி வந்தது?? காந்தி குடும்பத்திற்கும் நேரு குடும்பத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரு குடும்பம் :

நேரு குடும்பம் :

நேரு என்ற வார்த்தைக்கு கால்வாய் என்று பொருள். ஆரம்ப காலங்களில் நேரு குடும்பத்தினரின் மூதாதையர்கள் தங்கியிருந்த வீடு கால்வாய் ஓரத்தில் தான் இருந்திருக்கிறது. கால்வாயை குறிக்கும் நஹர் என்ற சொல்லே காலப்போக்கில் நேரு என்று உருமாறியிருக்கிறது.

நேரு குடும்பத்தில் பின் பெயராக கவுல் என்றே சேர்த்து வந்தனர். நேரு என்ற பெயர் பிரபலமானதும் கவுலை விடுத்து நேரு என்ற பெயரை தங்கள் பெயர்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

இந்திரா ப்ரியாதர்ஷினி இந்திரா காந்தியானதற்கு மூன்று கதைகள் சொல்லப்படுகிறது....

Image Courtesy

முதல் கதை :

முதல் கதை :

தந்தையைப் போலவே இந்திராவும் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். அப்போது அலகாபாத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வைன் சப்ளை செய்திடும் நவாப் கானின் மகன் ஃபெரோஸ் கான் மீது இந்திராவுக்கு காதல்.

பின்னர் லண்டனில் இருக்கும் மசூதியில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்திரா தன்னுடை பெயரை மைமுனா பேகம் என்று பெயர் மாற்றிக் கொள்கிறார்.

ஆனால் நேருவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. இந்திராவின் இந்த செயலால் இந்திராவின் அரசியல் வாழ்க்கையே பாழடைந்துவிடும் என்று நினைத்து பெரோஸ் கானிடம் பேசுகிறார்.

கான் என்ற பின் பெயருக்கு பதிலாக காந்தி என்று சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார் அதன் படி பெரோஸ் கானும் மாற்றிக்கொள்ள பெரோஸ் காந்தியின் மனைவி இந்திரா காந்தி ஆகிறார்.

Image Courtesy

 இரண்டாவது கதை :

இரண்டாவது கதை :

மகளுக்கு வேறு மதத்தவரை திருமணம் செய்து வைக்க நேருவுக்கு சிறிதும் விருப்பமில்லை. இதனால் நேருவின் குடும்பத்திற்கே பெரும் அவமானம் ஏற்படும் என்று கருதுகிறார்.

நேருவின் இந்த வருத்தத்தை அறிந்த காந்தி, பெரோஸ் கானை தத்தெடுத்துக் கொள்கிறார் இதனால் பெரோஸ் கானின் பெயர் பெரோஸ் காந்தியாக மாற்றப்படுகிறது. பெரோஸ் காந்திக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க நேருவும் சம்மதித்து விடுகிறார்.

Image Courtesy

 மூன்றாவது கதை :

மூன்றாவது கதை :

இதுவரை படித்த இரண்டு கதைகளை விட இது ரொம்பவே வித்தியாசமானது. பெரோஸ் காந்தியின் உண்மையான பெயர் பெரோஸ் ஜெஹாங்கிர் காண்டே.பெரோஸ் பிறந்தது ஒரு பார்ஸி குடும்பத்தில். பெரோஸின் அப்பா ஃபரீடூன் ஜஹாங்கிர் காண்டே மற்றும் அம்மா ரதிமாய். இவர்கள் மும்பையில் வசிக்கிறார்கள்.

கல்வியை கைவிட்ட பிறகு 1930 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொள்கிறார் பெரோஸ்.அப்போது மகாத்மா காந்தியின் மீது ஏற்ப்பட்ட பற்றினால் தன்னுடைய பெயரில் இருக்கும் காண்டேவை காந்தி என்று மாற்றிக் கொள்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Story about Indira Gandhi Name transformation

Story about Indira Gandhi Name transformation
Story first published: Saturday, September 9, 2017, 13:45 [IST]
Subscribe Newsletter