For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலைஞர் மு.கருணாநிதியின் தகர்க்க முடியாத சாதனைகள்!

கலைஞர் மு.கருணாநிதியின் தகர்க்க முடியாத சாதனைகள்!

|

காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தலைமுறையினர் சிலருக்கு வேண்டா பொருளாக காட்சியளிக்கும் இவர், சென்ற நூற்றாண்டின் மாபெரும் தலைவர்களுள் ஒருவர், இன்றும் கூட.

இன்று! மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு வேண்டாத, பயனற்ற, பாதகமான திட்டங்கள் சில கொண்டுவர முயலும் போது, அடிவயிற்றில் இருந்து ஒரு சப்தம் தொண்டையை கிழித்துக் கொண்டுப் போராட்ட குரலாக ஓங்கி ஒலிக்கிறதே... அதற்கு வித்திட்ட தமிழக தலைவர்களில் மூத்தவர். இவர் மக்களுக்காக செய்த நலத்திட்டங்கள் பலவன.

தனது அரசியல் பயணத்தில் இவர் கடந்து வந்த பல மைல் கற்களை இனி யாராலும் கனவிலும் எதிர்பார்க்க முடியாது என்பது அனைவராலும் ஏற்கப்படும் உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரே தலைவன்!

ஒரே தலைவன்!

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை தலைமை தாங்கி ஐம்பது ஆண்டுகள் வழிநடத்தி சென்ற ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவர் கலைஞர் மு.கருணாநிதி. முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை இறப்புக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றார் கருணாநிதி அவர்கள்.

அண்ணாவின் மறைவு!

அண்ணாவின் மறைவு!

அண்ணாதுரை அவர்களின் மறைவு வரை திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைவர் என்ற பதவியே இல்லை. திராவிட கட்சியில் இருந்து பிரிந்து வந்தாலுமே, பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி பிறந்த கட்சி தான் திராவிட முன்னேற்ற கழகம். எனவே, இந்த கட்சியில் தலைவர் பொறுப்பு என்று ஏதுமில்லை. எங்கள் வாழ்நாள் தலைவர் பெரியார் தான் என்றே கருத்தை பின்பற்றியவர் அண்ணாதுரை.

உருவாக்கப்பட்ட பதவி!

உருவாக்கப்பட்ட பதவி!

அண்ணாதுரை அவர்களின் மறைவுக்கு பிறகு, எம்ஜிஆர் உட்பட பெரும்பாலான மூத்த கட்சி உறுப்பினர்கள் நெடுஞ்செழியன் - கருணாநிதி இருவரில் யார் அடுத்த முதல்வர் என்ற வாதத்தின் போது, கருணாநிதியே என்று முன்மொழிந்தனர்.

இதன் பிறகே, நெடுஞ்செழியன் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு பொது செயலாளர் பதவியும், திமுகவில் அதன் முன்புவரை இல்லாத கட்சி தலைவர் பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் வழங்கப்பட்டன.

 இளம் புயல்!

இளம் புயல்!

தமிழ் இலக்கியம் மற்றும் நாடகத்துறைக்கு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ஆற்றிய தொண்டினை சொல்லி தான் அறிய வேண்டும் என்பதில்லை. தனது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் மூலமாக மிக இளம் வயதிலேயே அரசியலில் இறங்கினார் கலைஞர். இவர் அரசியல் வாழ்வில் தன்னை உட்படுத்திக் கொண்ட போது வயது வெறும் 14.

கடின காலக்கட்டம்!

கடின காலக்கட்டம்!

அண்ணாதுரை அவர்களின் மறைவுக்கு பிறகு கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதல்வாராக தொடர்ந்து வந்தார். ஆனால், தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான எம்ஜிஆருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணத்தால்.. இவரும் ஒரு கட்டத்தில் அரசியலில் பிரிந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உண்டானது.

எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கி தமிழகத்தில் முதல்வர் பதவியை பிடித்த பிறகு, அவரது மறைவு வரை மு.கருணாநிதி அவர்களால் மீண்டும் முதல்வர் அரியணையில் அமரவே முடியாமல் போனது.

நீண்ட கால முதல்வர் அரியணை!

நீண்ட கால முதல்வர் அரியணை!

மேலும், எமர்ஜென்ஸி, ராஜீவ் காந்தி படுகொலை போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் பல தாக்கங்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், சற்றும் தளர்வடையாமல் திராவிட முன்னேற்ற கழகத்தை மீண்டும், மீண்டும் வளர்த்து வெற்றியடைய செய்தார் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் மற்றும் அதிக நாட்கள் (6,863) முதல்வர் நாற்காலியில் பதவி வகித்தவர் என்ற சாதனைகளுக்கு சொந்தக் காரர் கலைஞர் கருணாநிதி.

அனுபவசாலி!

அனுபவசாலி!

வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் வலிமை குறைவுற்ற காரணத்தால் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் கருணாநிதி அவர்கள். சக்கர நாற்காலியில் தள்ளப்பட்ட போதிலும் தன் கட்சியில் எந்த பிரச்சனையும், பிளவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டவர் கருணாநிதி அவர்கள்.

இன்றைய இந்திய அரசியல் களத்தில் அதிக அனுபவமும், வயதுமான அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

ஊடக கலைஞர்!

ஊடக கலைஞர்!

அனைத்து வகையிலான ஊடகங்களிலும் தனது பங்களிப்பை கொடுத்த மட்டற்ற கலைஞன் என்று இவரை போற்றுவது மிகையாகாது. கையால் எழுதி விநியோகம் செயப்பட்ட மாணவர் நேசன் என்ற பத்திரிகையில் தொடங்கி, அச்சிட்டு, விநியோகம் செய்யப்பட்ட பத்திரிகை, தொலைதொடர்பு ஊடகங்கள், இன்றைய இணைய மற்றும் அலைப்பேசி செயலி ஊடகங்கள் வரை கலைஞரின் எழுத்து கட்டுரைகளாக, நாடகங்களாக, திரைப்பட வசனங்களாக மக்களை சென்றடைந்து வருகின்றன.

அரசியல் பயணம்!

அரசியல் பயணம்!

மாகாணங்களாக இருந்த இந்தியா, மொழிவாரியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்படி, மொழிவாரியான மாநிலங்களாக பிரிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அரசியலில் இருந்து வரும் செயல்படும் தலைவராக இருந்து வருகிறார் கலைஞர் மு.கருணாநிதி.

வெற்றி நாயகன்!

வெற்றி நாயகன்!

1957ம் ஆண்டு முதன் முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார் கலைஞர் மு.கருணாநிதி. அன்று முதல் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து 13 முறை வெற்றிபெற்ற ஒரே அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

இடையே ஓரிரு முறை ஒட்டு மொத்த திராவிட முன்னேற்ற கழகமும் ஆட்டம்கண்ட காலகட்டத்தில் கூட்ட ஒற்றை ஆளாக தேர்தலில் வெற்றிபெற்று சாதித்தவர் கலைஞர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unbreakable Records of Kalaignar Muthuvel Karunanidhi

Unbreakable Records of Kalaignar Muthuvel Karunanidhi!
Desktop Bottom Promotion